ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் அதிஷி டெல்லியின் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அர்விந்த் கெஜ்ரிவால் தனது வாரிசாக அவரது பெயரை கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் முன்மொழிந்தார். டெல்லி அமைச்சர் அதிஷி, செப்டம்பர் 17-ஆம் தேதி அன்று புது டெல்லியில் நடைபெற்ற ஆம் ஆத்மி சட்டமன்ற கட்சியின் கூட்டத்திற்குப் பிறகு ஊடகங்களை சந்தித்தார். தற்போது அவர் டெல்லியின் அடுத்த முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
43 வயதான அதிஷி, நிதி, கல்வி, வருவாய் உள்ளிட்ட 14 துறைகளில் பங்கு வகித்து, அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்தபோது அக்கட்சியின் நிர்வாகத்தைப் பார்த்துக் கொண்டார். காங்கிரஸின் ஷீலா தீட்சித் மற்றும் பாஜகவின் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோருக்குப் பிறகு டெல்லியின் 3-வது பெண் முதல்வர் இவர் ஆவார்.

புதிய மதுபானக் கொள்கையில் முறைகேடு செய்ததாக டெல்லி சிறையில் இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் செப்டம்பர் 13-ஆம் தேதி அன்று வெளியே வந்தார் இதை அடுத்து கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி அன்று நிர்வாக கூட்டத்தில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் முதலமைச்சராக மக்கள் வாக்களித்தால் தான் அமர்வேன் என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் அடுத்ததாக அரவிந்த் கெஜ்ரிவால் யாரை டெல்லியின் முதலமைச்சராக தேர்வு செய்வார் என்று பல்வேறு கருத்துக்கள் நிலவின.
தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியின் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்று இருக்கும் அதிஷி மர்லேனாவை புதிய முதலமைச்சராக முன்மொழிந்தார்.
கல்வித் துறையில் ஆம் ஆத்மி அரசின் பல சாதனைகளுக்குப் பெருமை சேர்த்த அதிஷி, மார்ச் 2023-ஆம் ஆண்டில் டெல்லி அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். மார்ச் மாதம் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டபோது அரசாங்கத்திலும் கட்சியிலும் முக்கியப் பங்காற்றினார் அதிஷி.
டெல்லி பல்கலைக்கழகப் பேராசிரியர்களான விஜய் சிங் மற்றும் திரிப்தா வாஹி ஆகியோரின் மகளான அதிஷி, ஸ்பிரிங்டேல்ஸ் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார், மேலும் செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பட்டம் பெற்றார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
அதிஷி 2018-ஆம் ஆண்டு அரசியல் காரணமாக "மர்லெனா" என்ற குடும்பப்பெயரை கைவிட்டார். மார்லெனா என்ற பெயர் மார்க்ஸ் மற்றும் லெனின் ஆகியோரின் பெயர்களின் கலவையாகும்.
தனது வேலையை பார்த்து தான் என்னை தீர்மானிக்க வேண்டும். அதை விட்டு என்னுடைய பின்புலத்தை (கம்யூனிசம்) வைத்து தீர்மானித்து விடக்கூடாது என்பதற்காகத்தான் தனது பெயரில் உள்ள மர்லேனாவை நீக்கியதாக அதிஷி விளக்கம் அளித்துள்ளார்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications