பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா தன்னுடைய கடுமையான எதிர்ப்பை தெரிவித்த போதிலும் சர்வதேச நாணய நிதியமான ஐஎம்எஃப் , பாகிஸ்தானுக்கு ஒரு பில்லியன் டாலர்கள் கடன் உதவியை வழங்கி இருக்கிறது. தற்போது இதற்கான காரணத்தை ஐஎம்எஃப் வெளியிட்டுள்ளது.
ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளின் இந்த தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் பாகிஸ்தானுக்கு வழங்கும் அனைத்து வகையான நிதி உதவிகளையும் சர்வதேச அமைப்புகள் நிறுத்தி விட வேண்டும் என இந்தியா வலியுறுத்தியது.

பாகிஸ்தானுக்கு வழங்கக்கூடிய நிதி அனைத்தும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு செல்கிறது என இந்தியா தரப்பில் கூறப்பட்டது. மேலும் சர்வதேச நாணய நிதியமான ஐஎம்எஃப் பாகிஸ்தானுக்கு நிதி உதவி வழங்குவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என இந்தியா சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் ஐஎம்எஃப் இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தானுக்கு நிதி உதவி அளித்தது.
சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்பு துறைக்கான இயக்குனராக இருக்கும் ஜூலி கோசாக் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் ஐஎம்எஃப் வாரிய குழு 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமே பாகிஸ்தானுக்கு நிதி உதவி வழங்குவதற்கு ஒப்புதல் தெரிவித்துவிட்டது, இதற்கான முதல் கட்ட மதிப்பாய்வுகள் 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நடத்தப்படும் என அப்போதே அறிவிக்கப்பட்டு இருந்தது என கூறியுள்ளார்.
அந்த அறிவிப்பின் அடிப்படையில் தான் மார்ச் 25ஆம் தேதி ஐஎம்எஃப் அதிகாரிகளும் பாகிஸ்தான் அதிகாரிகளும் இணைந்து இந்த நிதி உதவி தொடர்பான ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்கள். அந்த ஆய்வுக் கூட்டத்தில் பெறப்பட்ட தகவல்களை எங்களுடைய அதிகாரிகள் ஐஎம்எஃப் வாரியத்திடம் மே 9ஆம் தேதி சமர்ப்பித்து இதற்கு முன்னர் தாங்கள் வழங்கிய நிதி உதவியை பாகிஸ்தான் எப்படி பயன்படுத்தியது அதன் மூலம் அந்த நாட்டின் பொருளாதாரத்தில் ஏதேனும் மாற்றங்கள் வந்துள்ளதா என்ற விவரங்களை எல்லாம் அப்பொழுது பகிர்ந்தார்கள் என கூறியுள்ளார்.
மதிப்பாய்வு முடிந்ததை தொடர்ந்து தான் அவர்களுக்கு முன்கூட்டி அளித்த வாக்குறுதியின் படி மீண்டும் 1 பில்லியன் டாலர்கள் நிதி உதவியானது அறிவிக்கப்பட்டது என தெரிவிக்கிறார். தாங்கள் வழங்கிய நிதியை பாகிஸ்தான் சரியான படி செலவு செய்து சீர்திருத்தங்களை கொண்டு வந்து பொருளாதார ரீதியாக சில மேம்பாடுகளை அடைந்திருக்கிறது என்ற திருப்தி கிடைத்ததை அடுத்த தான் நாங்கள் அந்த மீண்டும் ஒரு தொகையை பாகிஸ்தானுக்கு வழங்குவதற்கு ஒப்புதல் தெரிவித்தோம் எனக் கூறியிருக்கிறார்.
தாங்கள் வழங்கிய முதல் கட்ட கடன் தொகையானது பாகிஸ்தான் மத்திய வங்கிக்கு சென்றதாகவும் அந்த பணத்தை மத்திய வங்கி பாகிஸ்தான் அரசுக்கு வழங்க கூடாது என்ற எங்களின் நிபந்தனையை அந்நாட்டு சரியாக பின்பற்றியது என்றும் கோசாக் கூறியுள்ளார் . பாகிஸ்தான் அரசுக்கு 7 பில்லியன் டாலர்கள் வரை நிதி உதவி வழங்குவதற்கு ஐஎம்எஃப் ஒப்புதல் தெரிவித்திருந்தது இதுவரை இரண்டு தவணைகளாக 2.1 மில்லியன் டாலர்களை வழங்கி இருக்கிறது. நாங்கள் வழங்கும் நிதி தவறான செயல்களுக்கு பயன்படுத்துவதை அறிந்தால் உடனடியாக அதனை நிறுத்திவிடுவோம் என்றும் ஐஎம்எஃப் விளக்கம் தந்துள்ளது.
More From GoodReturns

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

பாகிஸ்தான் எடுத்த திடீர் முடிவு.. பள்ளி, கல்லூரிகள் மூடல்.. அரசு ஊழியர்களுக்கு Work From Home..!!

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

பாகிஸ்தானில் பெட்ரோல்-டீசல் விலை தடாலடி உயர்வு.. ஆப்கானிஸ்தான் தாக்குதல் மத்தியில் IMF கொடுத்த நெருக்கடி..!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!



Click it and Unblock the Notifications