சென்னை: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியா உருவாக்கிய ஜிசாட்-20 (GSAT-20/ GSAT-N2) தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ளது. இது இந்திய விண்வெளித் துறையில் ஒரு முக்கியமான மைல்கல்லாகும்.
இந்த செயற்கைக்கோள் புதன்கிழமை அமெரிக்காவின் ஃப்ளோரிடாவின் கேப் கனவெரல் ஸ்பேஸ் போர்ஸ் தளத்தில் இருந்து ஸ்பைஸ்எக்ஸ்-ன் பிரபலமான பாலக்ன் 9 ராக்கெட் வாயிலாக விண்ணில் ஏவப்பட்டது. முதல் முறையாக இஸ்ரோ - ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து ஒரு விண்வெளி திட்டத்தில் பணியாற்றுகிறது.

விண்வெளி ஆராய்ச்சி மற்றும் பயணத்தில் அமெரிக்கா - இந்தியா மத்தியிலான உறவு நீண்ட வரலாற்றைக் கொண்டு இருந்தாலும், இதுநாள் வரையில் இந்த பந்தம் இஸ்ரோ, நாசா வரையில் மட்டுமே இருந்தது. முதல் முறையாக இஸ்ரோவின் கிளை நிறுவனமான NewSpace India Limited, தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் உடன் இணைந்து பணியாற்றியுள்ளது.
ஜிசாட்-என்2: சக்திவாய்ந்த தொடர்பு செயற்கைக்கோள்: ஜிசாட்-என்2 என்பது இந்தியாவின் தொலைத்தொடர்பு கட்டமைப்பை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட நவீன செயற்கைக்கோள் ஆகும். 48 ஜிபிபிஎஸ் தரவு பரிமாற்ற திறன் கொண்ட இந்த செயற்கைக்கோள், நாடு முழுவதும் பிராட்பேண்ட் சேவைகள் மற்றும் விமானப் பயணத்தில் இண்டர்நெட் சேவை ஆகியவற்றை பெரிதும் அதிகரிக்கும். மேலும், இது அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கும் முக்கிய பங்கு வகிக்கும்.
ஏன் ஸ்பேஸ்எக்ஸ்?: பொதுவாக, இஸ்ரோ 4 டன் வரையிலான செயற்கைக்கோள்களைத் தனது சொந்த ராக்கெட் வாயிலாகவே விண்வெளியில் செலுத்தும், 4 டன்களுக்கு அதிகமாகச் சுமை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்கு ஐரோப்பாவின் ஏரியன்ஸ்பேஸின் ஏரியன் ராக்கெட்டுகளை பயன்படுத்தும்.
ஆனால் தற்போது ஏரியன்ஸ்பேஸில் GSAT-N2 செயற்கைக்கோள்-ஐ விண்ணில் செலுத்தப் பொருத்தமான ஏவு வாகனங்கள் அதாவது லான்ச் வெஹிக்கல் இல்லாததால், மாற்று நிறுவனத்தைத் தேட வேண்டிய கட்டாயம் உருவானது.
இதற்கு ஸ்பேஸ்எக்ஸின் ஃபால்கன் 9 ராக்கெட் மிகவும் பொருத்தமான விருப்பமாக இருந்தது. உலகிலேயே மறுபயன்பாடு செய்யக்கூடிய ராக்கெட்டகளை உருவாக்குவதில் பெயர்போன ஸ்பேஸ்எக்ஸ்-ன் ஃபால்கன் 9, 8.3 டன் வரையிலான Payload-ஐ சுமந்துகொண்டு விண்வெளி சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள்-ஐ செலுத்தும் திறன் கொண்டது.
இதனால் இது 4,700 கிலோ எடையுள்ள ஜிசாட்-என்2 செயற்கைக்கோளுக்கு ஏற்றதாக மாறியது ஃபால்கன் 9, இதேபோல் ஃபால்கன் 9 ஏவுவதற்கான ஸ்லாட்டும் இஸ்ரோவுக்கு கிடைத்த காரணத்தால் ஏரியன்ஸ்பேஸ்-க்காக காத்திருக்காமல் இன்று விண்ணில் ஏவியது.
விண்வெளி ஆய்வில் புதிய கூட்டணி: இஸ்ரோ மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இடையேயான இந்த கூட்டணி இந்திய விண்வெளித் திட்டத்தில் ஒரு முக்கியமான முன்னேற்றத்தைக் குறிக்கிறது. ஸ்பேஸ்எக்ஸ் போன்ற தனியார் விண்வெளி நிறுவனத்துடன் இணைவதன் மூலம், இஸ்ரோ தனது செலவுகளைக் குறைத்து அதன் பணிகளை விரைவுபடுத்த உதவும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications