அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி, நொடிக்கு நொடி கோடிகளை சம்பாதிப்பதன் மர்மம் என்ன? அவரிடம் இருக்கும் பணத்தை அவராலேயே செலவு செய்து முடிக்க முடியாது என்பது நமக்கு தெரியும். அப்படியிருந்தும் ஏன் ஓயாமல் உழைக்கிறார்?

இந்த கேள்விக்குத் தனது பாணியில் நச்சென்று பதில் சொல்லியிருக்கிறார் மலையாள திரையுலகின் மெகா ஸ்டார் மம்மூட்டி. அம்பானியின் உழைப்பிற்கு பின்னால் இருக்கும் அந்த சுவாரசியமான காரணம் என்ன என்பது பற்றி மம்மூட்டி பேசிய வீடியோ இப்போது இணையத்தை கலக்கி வருகிறது. அந்த சுவாரசிய தகவல் இதோ..

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

இந்தியா சினிமா வரலாற்றில் மிகவும் பிரபல நடிகர்களில் ஒருவரான மம்மூட்டி தெரியாதவர்கள் பெரிதும் இருக்க முடியாது. தொடர்ந்து பல தசாப்தங்களாக தனது நடிப்பு திறமையின் மூலம் மக்களின் உள்ளங்களை வென்றுள்ளவர். பல தேசிய விருதுகளை பெற்றவர். மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வரும் மம்மூட்டி, கடந்த 1975 ஆண்டு முதன் முதலாக திரையில் தோன்றினார். 55 ஆண்டுகள் கடந்தாலும் இன்றும் தனது நடிப்பை மக்களுக்கு கொடுத்து வருபவர்.கடந்த 4 ஆண்டுகளில் அவர் நடித்த பிரமயுகம், காதல் - தி கோர், நண்பகல் நேரத்து மயக்கம், ரோர்ஷாக், புழு போன்ற திரைப்படங்கள் அடங்கும்.

ஐந்து தசாப்தங்களுக்கு பிறகும், எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லாத நிலையில், மம்மூட்டியை தொடர்ந்து உழைக்க வைப்பது எது? இது குறித்து அவர் ஒரு பேட்டியில் பகிர்ந்த விஷயங்களைப் பற்றித்தான் இப்பதிவில் பார்க்க இருக்கிறோம்.

Also Read

பாதுகாப்பான மற்றும் வசதியான வாழ்க்கையை வாழ எனக்கு இனி பணம் தேவையில்லை. 90 அல்லது 100 வயதாகும் அரசியல்வாதிகள் ஏன் இன்னும் அரசியலில் இருக்க விரும்புகிறார்கள்? முகேஷ் அம்பானி ஏன் இன்னும் இவ்வளவு பணம் சம்பாதித்து கொண்டே இருக்கிறார்? அவர் சம்பாதிக்கும் எல்லாப் பணத்தையும் அவரே பயன்படுத்த போவதில்லை. அது அவர்களுக்குக் கிடைக்கும் ஒருவித மகிழ்ச்சி (Pleasure). நான் என்னை அம்பானியுடன் ஒப்பிடவில்லை. நான் சொல்ல வருவது என்னவென்றால், இது மனித இயல்பு. உங்களிடம் எது இருந்தாலும், இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று தோன்றும். அதைத்தான் பேராசை என்று சொல்கிறேன்.

நடிப்பு என்பது சில கலைஞர்களுக்கு அவர்கள் சுவாசிக்கும் காற்றை போன்றது என்று கூறியுள்ள மம்மூட்டி, உடல்நிலை மிகவும் குன்றியிருக்கும் ஒரு சிறந்த நடிகரை அழைத்து ஒரு கதாபாத்திரம் கொடுத்தால் கூட, அவர் வந்து தனது சிறந்த நடிப்பை தர முயற்சிப்பார்கள்.

Recommended For You

மறைந்த புகழ்பெற்ற தமிழ் நடிகர் எம்.ஆர். ராதா அவர்களைப் பற்றிய ஒரு சுவாரசியமான நினைவை மம்மூட்டி பகிர்ந்துள்ளார். அதில் எம்.ஆர். ராதா அவர்கள் உடல்நிலை மிகவும் நலிவடைந்து, நடப்பதற்கு இரண்டு பேரின் உதவி தேவைப்பட்ட காலத்திலும், கேமரா முன்னால் நின்றால் ஒரு ஆற்றல்மிக்க கலைஞராக மாறிவிடுவார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் அவர் எங்காவது அமர்ந்திருப்பார். இயக்குனர் அவரை ஷாட்டுக்கு அழைக்கும்போது, இரண்டு பேர் அவரை தாங்கிப் பிடித்து அழைத்து வருவார்கள். ஸ்டார்ட் கேமரா என்று இயக்குனர் சொல்லும் வரை அவரை அவர்கள் கெட்டியாக பிடித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் ஆக்‌ஷன் என்ற சத்தம் கேட்டவுடன், அவர்கள் கையை எடுத்துவிடுவார்கள். அந்த நொடியே ராதா முழு பலத்துடன் நடித்து அசத்துவார். அப்படிப்பட்ட நடிகர்கள் எல்லாம் இங்கே இருந்திருக்கிறார்கள் என்றும் பகிர்ந்துள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+