தமிழ்நாட்டின் முதன்மையான சிமெண்ட் தயாரிப்பு நிறுவனமான இந்தியா சிமெண்ட்ஸ்-ன் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குநர் என்.ஸ்ரீனிவாசன் தனது பதவியிலிருந்து உடனடியாக விலகியுள்ளார். இவரின் பதவி விலக முக்கிய காரணம் அல்ட்ராடெர் நிறுவனம்.
ஜூலை மாதம் பிர்லா குழுமத்தின் அல்ட்ராடெர் நிறுவனம் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் பெரும் பகுதி பங்குகளை வாங்க ஒப்பந்தம் செய்தது. இதை தொடர்ந்து இந்திய போட்டி ஆணையம் (CCI) அல்ட்ராடெக்-ன் பங்கை கையகப்படுத்தும் திட்டத்திற்கு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து என்.ஸ்ரீனிவாசன் நிர்வாக பொறுப்பில் இருந்து விலக உள்ளார்.

75 ஆண்டு பாரம்பரிய நிறுவனம்: 1946 ஆம் ஆண்டு எஸ்.என்.என்.சங்கரலிங்க அய்யர் என்பவரால் நிறுவப்பட்ட இந்த நிறுவனத்தின் முதல் சிமெண்ட் தொழிற்சாலை தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தின் தலையூத்து என்னும் சிறிய கிராமத்தில் 1949 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
வர்த்தகம்: தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் ஆந்திரா என ஏழு ஒருங்கிணைந்த சிமெண்ட் தொழிற்சாலைகளும், ராஜஸ்தானில் ஒன்று (தனது துணை நிறுவனமான திரிநேத்ரா சிமெண்ட் லிமிடெட்) மற்றும் தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிராவில் தலா ஒரு அரைக்கும் தொழிற்சாலைகளை இந்தியா சிமெண்ட்ஸ் வைத்துள்ளது.
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் சங்கர் சிமெண்ட், கோரமண்டல் சிமெண்ட் மற்றும் ராசி கோல்டு என 3 முக்கிய பிராண்டுகளை வைத்துக்கொண்டு தென்னிந்திய சிமெண்ட் வர்த்தகத்தில் பெரிய அளவிலான வர்த்தகத்தைப் பெற்றுள்ளது.
கைமாறியது சாம்ராஜ்ஜியம்: இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 32.7% பங்குகளை அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ் நிறுவனம் வெற்றிகரமாக கையகப்படுத்தியதாக செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தைக்கு சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அதன் மொத்த பங்கு இருப்பு 55.5% ஆக அதிகரித்ததாகவும் தெரிவித்துள்ளது.
இதில் ஏற்கனவே உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களிடம் இருந்து 7,05,64,656 பங்குகளின் (22.8%) பங்குகளை வாங்கிய நிலையில் தற்போது மொத்த பங்கு கைப்பற்றல் அளவு 55.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்தியா சிமெண்ட்ஸ் தற்போது அல்ட்ராடெக் சிமெண்ட்ஸின் துணை நிறுவனமாக மாற்றுகிறது.
ரூ.3,954 கோடி டீல்: கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம், பம்பன் பாலம் மற்றும் ஐ.ஐ.டி மெட்ராஸ் வளாகம் போன்ற முக்கிய திட்டங்களுக்கு பங்களிப்பு செய்து புகழ்பெற்ற முக்கியமான சிமெண்ட் உற்பத்தியாளராக விளக்கும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தை பில்லியனரான குமார் மங்கலம் பிர்லா தலைமையிலான அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ் ரூ.3,954 கோடி என்ற தொகைக்கு கையகப்படுத்த ஒப்பந்தம் செய்தது. இதற்கு தான் தற்போது CCI அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
நிதி சவால்கள்: இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் சமீபத்திய காலாண்டுகளில் நிதி சவால்களை எதிர்கொண்டு வருகிறது. அதானி குழுமத்துடன் போட்டிப்போட்டு வரும் அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ் 75 ஆண்டு தமிழ்நாட்டு நிறுவனத்தை கையகப்படுத்தியது மூலம் தென்னிய வர்த்தகத்தை கைப்பற்றியுள்ளது.


Click it and Unblock the Notifications