அமெரிக்கப் பங்குச் சந்தை இன்று படுமோசமான சரிவைப் பதிவு செய்து அனைத்து முதலீட்டாளர்களையும் கதறவிட்டுள்ளது என்றால் மிகையில்லை. நேற்றைய வர்த்தகத்தில் அதிரடியாக உயர்ந்து பங்குச்சந்தை இன்று மொத்தமாகச் சரிய என்ன காரணம்..? கடந்த 24 மணிநேரத்தில் அப்படி என்ன நடந்தது..? ஏன் இந்த மோசமான சரிவு..?
இன்றைய சரிவுக்கு அமெரிக்காவின் மிட்டேர்ம் தேர்தல் முடிவுகள் மட்டும் காரணமாகக் கூற முடியாது, ஏனென்றால் இந்த தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் எனப் பல கணிப்புகள் முன்கூட்டியே தெரிவித்த நிலையில் சந்தையும், முதலீட்டாளர்களுக்கு ஏற்கனவே நேற்றைய உயர்வுக்குத் தயாராக இருந்தனர்.

இதனால் நேற்றைய டாவ் ஜோன்ஸ் 3 சதவீத உயர்வு, எஸ் அண்ட் பி 1.5 சதவீத உயர்வு, நாஸ்டாக் 1.44 சதவீத உயர்வு ஆகியவை எதிர்பார்த்தது தான். அப்படியானால், நேற்றைக்கும் இன்றைக்கும் இடையில் என்ன நடந்தது.
நாடாளுமன்றத்தில் 2 வருடத்திற்குப் பின்பு மீண்டும் ஆதிக்கம் பெற்ற ஜனநாயக கட்சி செயற்கை நுண்ணறிவு அதாவது AI தொழில்நுட்ப பயன்பாட்டின் தடை விதிக்கப்படலாம் அல்லது கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படலாம் என்ற அச்சம் முதலீட்டுச் சந்தையில் அதிகரித்துள்ளது.
இதன் வாயிலாக இன்று அமெரிக்கப் பங்குச்சந்தையில் ஏஐ, டேட்டா சென்டர், கிளவுட் சேவைகள், நியோ கிளவுட், சிப் தயாரிப்பு, சிப் டிசைன் சார்ந்த அனைத்து நிறுவனங்களும் பெரும் சரிவை சந்தித்துள்ளது.
இத்தகைய சரிவுக்கு வழிவகுக்க முக்கிய காரணம் சில ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் Artificial Superintelligence-க்கு முழுமையான தடை விதிக்க வேண்டும் என்றும், அட்வான்ஸ்டு ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சிக்குக் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என வெளிப்படையாகக் கருத்து தெரிவித்தது தான், இன்றைய ஏஐ எகோசிஸ்டத்தின் அனைத்து பங்குகளின் சரிவுக்கும் முக்கிய காரணமாக அமைந்தது.
ஆனால் உண்மையில் AI தொழில்நுட்பத்திற்கு முழுமையான தடை விதிக்கப்பட வாய்ப்புகள் மிகவும் குறைவு. அப்படி தடை விதித்தால் ஏஐ துறையில் அமெரிக்காவின் ஆதிக்க நிலையைச் சீனா தட்டிச்சென்றுவிடும்.
இதற்குக் கட்டாயம் ஜனநாயக கட்சி இடம் கொடுக்காது என்பதை முதலீட்டாளர்கள் புரிந்துகொள்ளும் வரையில் இந்த சரிவு தொடரும்.
எனவே இன்றைய சரிவு என்பது ஒரு சென்டிமென்டலான முடிவு தான், ஆனால் இந்த முடிவைப் பெரிய பெரிய முதலீட்டு நிறுவனங்கள் எடுத்தது தான் இத்தகைய மோசமான சரிவுக்குக் காரணமாக அமைந்தது.
மனித வரலாற்றிலேயே மிகப்பெரிய தொழில்நுட்பப் புரட்சியின் மத்தியில் நாம் இருக்கிறோம், இத்தகைய நிலையில் ஏஐ தொழில்நுட்பத்தில் இருக்கும் ஆபத்துக்களை களைய தேவையாக கட்டுப்பாடுகள் அவசியம் என்பதை இத்துறை வல்லுனர்கள் ஒப்புக்கொண்டாலும், பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் இதை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் ஏஐ பங்குகளை விற்று வருகின்றனர்.
இன்றைய வர்த்தகத்தில் நாஸ்டாக் 1300 புள்ளிகள் சரிந்து 5 சதவீத சரிவை பதிவு செய்துள்ளது, இதேபோல் எஸ் அண்ட் பி 500 குறியீடு 260 புள்ளிகளும், டாவ் ஜோன்ஸ் 1224 புள்ளிகளும், VIX குறியீடு எப்போதும் இல்லாமல் 8.74 சதவீதமும் உயர்ந்து அமெரிக்கப் பங்குச்சந்தையை ஆட்டம் காட்டியுள்ளது.


Click it and Unblock the Notifications

