தமிழக அரசியலில் ஜனநாயகனாக உருவெடுத்துள்ள தளபதி விஜய், தனது கடைசிப் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் விடைபெற காத்திருக்கும் வேளையில், ஒட்டு மொத்த படக்குழுவையும் உலுக்கும் ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. பல நூறு கோடிகள் செலவில், ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவான இப்படம் இணையத்தில் கசிந்திருப்பது கோலிவுட்டையே அதிர வைத்துள்ளது.
ஒருபுறம் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், விஜய்யின் கலைப் பயணத்தின் கடைசி படைப்பிற்கு இப்படி ஒரு சதி நடப்பதா என ரசிகர்கள் கொதித்துப் போய் உள்ளனர். இந்த விவகாரத்தில் 21 சந்தேக நபர்களை குறிவைத்து தமிழ்நாடு சைபர் கிரைம் போலீஸ் வலைவீசி தேடி வருகிறது. திரையுலகின் இந்த பெரும் நஷ்டத்தை தடுக்க மத்திய அரசு தலையிடுமா? பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா சட்டங்கள் இந்த படக் கசிவை தடுத்து நிறுத்த கை கொடுக்குமா? விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு நேர்ந்த இந்த சிக்கலும், அதன் பின்னணியில் இருக்கும் அதிரடி தகவல்களும் இதோ..

நடிகருமான, தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் நடித்த கடைசி படம் தான் ஜனநாயகன். இது ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கி வந்தது. பல்வேறு சட்ட போராட்டங்களுக்கு பிறகு ஒரு வழியாக வெளியாகும் தேதிக்காக காத்திருந்தது. பொங்கல் விடுமுறைக்கே வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தணிக்கை வாரிய சிக்கல்கள் காரணமாக அது முடியாமல் போனது. இந்த நிலையில் தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுக்குகளுக்கு பிறகு மே மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
கடந்த 9ம் தேதி ஜனநாயகன் படத்தின் சில காட்சிகள் இணையத்தில் கசிந்த நிலையில், முந்தைய தினம் முழு படமும் சட்டவிரோதமாக இணைய தளங்களில் வெளியானது. இந்த சம்பவம் படம் குழுவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கு படக் கசிவுக்கு பல திரையுலகினர், அரசியல் தலைவர்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் படக்குழுவினர் அளித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர முதல் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக, ஜன நாயகன் திரைப்படத்தை சட்டவிரோதமாக வெளியிட்ட இணையதளங்கள், டெலிகிராம் பக்கங்கள் மற்றும் சமூக வலைதள கணக்குகளை முடக்கி தமிழக சைபர் கிரைம் போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
அதோடு இந்த படத்தை முதலில் இணையத்தில் கசிய விட்டது யார் என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். படத்தின் காட்சிகளை பகிர்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என படக்குழு தரப்பில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசியல் களத்தில் விஜய் நுழைந்ததில் இருந்தே, தொடர்ந்து ஒவ்வொரு சர்ச்சையாக வெடித்து வரும் நிலையில், தற்போது பல கோடி செலவில் உருவாக்கப்பட்ட படம் கசிந்திருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தணிக்கை குழுவானது (CBFC) எங்கள் தரப்பில் எந்த பிரச்சனையும் இல்லை என விளக்கம் கொடுத்துள்ளது.
அதிகாரப்பூர்வ தகவலின்படி, அனைத்து திரைப்படங்களும் பாஸ்வேர்டு மூலம் பாதுகாக்கப்பட்ட கீ டெலிவரி மெசேஜ் (KDM) எனும் பாதுகாப்பான தொழில்நுட்ப முறை மூலம் கையாளப்படுவதாக அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். முறையான KDM அனுமதி இல்லாமல், படத்தின் காட்சிகளை யாராலும் பார்க்கவோ அல்லது அணுகவோ முடியாது என்று தணிக்கை வாரியத்தின் பாதுகாப்பு நெறிமுறைகளை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும் படத்தின் டிஜிட்டல் சினிமா பேக்கேஜ் (DCP) கடந்த மார்ச் 17-ம் தேதியே விண்ணப்பதாரரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும், அன்று முதல் அது அவர்களிடமே இருப்பதாகவும் வாரியம் தெரிவித்துள்ளது.
இந்த தகவல் கசிவு, ஜனநாயகன் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூலை கடுமையாக பாதிக்கக் கூடும் என்பதோடு, திட்டமிடப்பட்ட ரிலீஸ் உத்திகளையும் சீர்குலைக்க வாய்ப்புள்ளது.
ஐஏஎன்எஸ் (IANS) செய்தி நிறுவனத்தின் படி, இந்தியத் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் (IMPPA), இந்த படக் கசிவு விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலையிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. சினிமா பைரசியில் ஈடுபடும் நபர்கள் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரதமருக்கு அந்த அமைப்பு கடிதம் எழுதியுள்ளது. இந்திய திரைத்துறையின் பழமையான மற்றும் மிகப்பெரிய அமைப்புகளில் ஒன்றான IMPPA, தயாரிப்பாளர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
More From GoodReturns

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

தவெக தலைவர் விஜய்-இன் பிரமாண பத்திரத்துல இந்த ரூ.100 கோடி விஷயத்த கவனிச்சீங்களா மக்களே..!!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications

