டிக்சன் டெக்னாலஜிஸ் நிறுவனம் இந்தியாவில் தங்களுடைய ஸ்மார்ட் போன் உற்பத்தியை அதிகரிப்பதற்கு திட்டமிட்டு இருக்கிறது. மோட்டோரோலா, கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தேவையான ஸ்மார்ட் ஃபோன்களை தயாரித்து வழங்கி வருகிறது டிக்சன் டெக்னாலஜிஸ் நிறுவனம்.
இந்த நிறுவனம் தங்களுடைய ஸ்மார்ட் போன் உற்பத்தியை மேலும் 50 சதவீதம் அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளது. சர்வதேச அளவில் பல்வேறு நிறுவனங்களும் ஸ்மார்ட் போன் மற்றும் மின்னணு சாதன உற்பத்திக்காக சீனாவை சார்ந்திருக்கும் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என முடிவு செய்திருக்கின்றன. இதற்காக இந்த நிறுவனங்கள் சீனாவை தவிர்த்து மற்ற நாடுகளில் தங்களுடைய உற்பத்தியை பெருக்குவதில் ஆர்வம் காட்டுகின்றன .

அந்த வகையில் இந்தியாவில் டிக்சன் டெக்னாலஜிஸ் நிறுவனம் மோட்டரோலா ,கூகுள், டிரான்ஸியான் ஆகிய நிறுவனங்களுக்கு தேவையான ஸ்மார்ட் போன்களை தயார் செய்து வழங்கி வருகிறது . இங்கே உற்பத்தி செய்யப்படக்கூடிய இந்த பிராண்டுகளின் போன்களானது வட அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது .இந்த நிலையில் அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தக மோதல் உள்ளிட்டவை காரணமாக டிக்சன் டெக்னாலஜிஸ் நிறுவனம் இந்தியாவில் ஸ்மார்ட் போன் உற்பத்தியை உயர்த்துவதற்கு முடிவு செய்து இருக்கிறது.
இது தொடர்பாக இந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனரான அதுல் லால் வெளியிட்டுள்ள தகவலில் தங்கள் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன் உற்பத்தி திறனை மேலும் 50 சதவீதம் உயர்த்துவதற்கு முடிவு செய்து இருப்பதாக தெரிவித்திருக்கிறார். மோட்டோரோலா நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் விற்பனை தற்போது பல மடங்கு உயர்ந்திருப்பதாகவும் இதன் காரணமாக தங்களுக்கு அந்த நிறுவனத்திடம் இருந்து பெரிய அளவிலான ஆர்டர்கள் கிடைத்திருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார் .
அமெரிக்காவில் விற்பனையாக கூடிய பல்வேறு நிறுவனங்களின் ஸ்மார்ட் போன்களை உற்பத்தி செய்வதற்கான ஆர்டர்கள் தங்களுக்கு அதிகரித்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். மோட்டோரோலா மட்டுமில்லாமல் கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஸ்மார்ட் போன்களையும் இந்தியாவில் உற்பத்தி செய்கிறது டிக்சன் நிறுவனம். அதேபோல இன்பினிக்ஸ் உள்ளிட்ட ஸ்மார்ட் போன்களையும் இந்தியாவில் டிக்சன் நிறுவனம் உற்பத்தி செய்து ஆப்பிரிக்க சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.
ஒட்டுமொத்தமாக டிக்சன் நிறுவனம் 10 மில்லியனில் இருந்து 12 மில்லியன் அளவிலான ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதற்கு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. அதுமட்டுமில்லாமல் விவோ நிறுவனத்துடன் இணைந்து ஒரு கூட்டு நிறுவனத்தை ஏற்படுத்தி விவோ பிராண்ட் ஸ்மார்ட்போன்களையும் உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருக்கிறது. 2026 - 27ஆம் நிதியாண்டில் விவோ நிறுவனத்துடன் கூட்டு நிறுவனம் அமைக்கப்பட்டு ஸ்மார்ட் போன்கள் உற்பத்தி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிறுவனம் நொய்டா பகுதியில் ஒரு மில்லியன் சதுரஅடி பரப்பளவிலான மொபைல் போன் உற்பத்தி ஆலையை வருகிறது. அது தவிர மொபைல் ஃபோன்களுக்கு தேவையான கேமரா ,லித்தியம் பேட்டரிகள் மற்றும் மடிக்கணினி, சர்வர்கள், எஸ் எஸ் டி உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்யும் பணிகளையும் தீவிரப்படுத்தி இருக்கிறது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications