இந்தியாவின் மிகப்பெரிய பங்குசந்தையில் DLF என்ற முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனம் மும்பையில் தனது முதல் உயர்தர வீடமைப்பு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, சூப்பர் பிரீமியம் மற்றும் அல்ட்ரா லக்ஸரி (super-premium & ultra-luxury) வீடமைப்பு துறைகளில் நுழைய திட்டமிட்டு வருகிறது. DLF இப்போதுதான் மும்பையில் தனது முதல் பிரீமியம் வீட்டுத் திட்டத்தை தொடங்கியது. தற்போது அது வெற்றி அடைந்ததை அடுத்து, இப்போது கோடிக்கணக்கில் மதிப்பீடு செய்யப்படும் உயர்ந்த நிலை வீடுகள் துறையில் அடியெடுத்து வைத்துள்ளது.
இதுதொடர்பாக DLF நிறுவனத்தின் இணை மேலாளர் இயக்குனரும், முக்கிய வணிகத் தலைவருமான ஆகாஷ் ஓஹ்ரி கூறுகையில், "குருகிராமில் நாங்கள் ஏற்கனவே பல பிரீமியம் மற்றும் லக்ஸரி வீடமைப்பு திட்டங்களை மேற்கொண்டு வருகிறோம். அதேபோல், தற்போது மும்பையிலும் நுழைய நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம். மும்பையில் தற்போது நடைமுறையில் உள்ள எங்களின் முதல் திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றுவதே முன்னுரிமையாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார். உயர்தர வசதிகள், சிறப்பான இடங்கள் மற்றும் அதற்கான தேவைகள் அதிகரித்து வரும் நிலையில், DLF நிறுவனத்தின் வருகை முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

DLF ரியல் எஸ்டேட் நிறுவனம் ஏற்கனவே, The Camellias, The Magnolias, Regal Gardens, மற்றும் The Skycourt ஆகிய மிகவும் பிரபலமான உயர் நிலை வீடமைப்பு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. இவை அனைத்தும் அதிக வருமானம் கொண்ட மக்களை குறித்து வடிவமைக்கப்பட்டவை ஆகும். தற்போது மும்பையிலும் லக்ஸரி மற்றும் சூப்பர் பிரீமியம் வீடமைப்பு திட்டங்களை தொடங்கும் முடிவில் உள்ளது. தற்போது மும்பையில் ஹிரானந்தானி குழுமம் (Hiranandani Group), ஓபராய் ரியால்டி (Oberoi Realty), ரஹேஜா கார்ப் (K Raheja Corp) ஆகிய நிறுவனங்கள் முன்னணியில் உள்ள நிலையில், DLF நிறுவனம் இவற்றிற்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் ஒருபகுதியாக DLF நிறுவனம் மும்பையின் அந்தேரி மேற்கு பகுதியில் "The Westpark" என்ற பெயரில் புதிய அபார்ட்மெண்ட் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இத்திட்டம், மும்பையைச் சேர்ந்த Trident Realty நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட உள்ளது. அதன்படி, வீடுகளின் பரப்பளவு 1,100 சதுர அடியில் இருந்து 2,500 சதுர அடிவரை இருக்கும் என்றும் விலையை பொறுத்தவரை ரூ.4 கோடி முதல் ரூ.8 கோடி வரை இருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.
கடந்த 2005ஆம் ஆண்டு பிரபல DLF ரியஸ் எஸ்டேட் நிறுவனம், மும்பையின் லோயர் பரேல் பகுதியில் உள்ள 17 ஏக்கர் நிலத்தை சுமார் ரூ.704 கோடிக்கு வாங்கியது. இந்த நிலம், நேஷனல் டெக்ஸ்டைல் கார்ப்பரேஷன் நடத்திய ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலத்தை DLF வளர்ச்சிக்கான முதலீடாக வைத்திருந்தது. இந்நிலையில், கடந்த 2012ஆம் ஆண்டில் அதே நிலத்தை Lodha Developers என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு ரூ.2,700 கோடிக்கு DLF நிறுவனம் விற்றது. இதன் மூலம் சுமார் ரூ.2,000 கோடி அளவுக்கு DLF லாபம் பார்த்தது.
மும்பையில் உருவாக்கும் புதிய வீடு திட்டத்தை படிப்படியாக உயர்த்தவே DLF நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முதலில் இந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் இரண்டு கோபுரங்களை கட்டும் பணியை தொடங்குகிறது. முதலாவது இரண்டு கட்டங்களின் மதிப்பு ரூ.5,000 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இதில் மொத்தம் 416 அபார்ட்மெண்ட்கள் அடங்கும். இந்த திட்டத்தில் 50,000 சதுரஅடி பரப்பளவு கொண்ட கிளப் ஹவுஸ், 33,000 சதுரஅடி பரப்பளவு கொண்ட குழந்தைகள் பராமரிப்பு மையம் ஆகியவை இடம்பெற உள்ளன.
கடந்த ஜூன் மாதம் வீட்டு விற்பனை 28% குறைந்தபோதும், DLF நிறுவனம் எவ்விதமான நெருக்கடியையும் சந்திக்கவில்லை என்று அந்நிறுவனத்தின் அதிகாரி ஆகாஷ் ஓஹ்ரி தெரிவித்துள்ளார். கொரோனா காலகட்டத்திற்கு பிறகு வீடு என்பதை மக்கள் முக்கியத்துவமாக பார்க்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications