நாம் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு தொகையை தானமாக கொடுப்பது மிகச்சிறந்த பழக்கம் என கூறுவார்கள். அந்த வகையில் உலக பணக்காரர்களில் பெரும்பாலானவர்கள் அறக்கட்டளைகளை நடத்தி அதன் மூலம் தான தர்ம நடவடிக்கைகளில் ஈடுபட்டு முன் உதாரணமாக திகழ்ந்து வருகின்றனர்.
அப்படி உலகின் முக்கியமான பிரபலங்கள் எந்த வகையான அறக்கட்டளைகளை நடத்துகின்றனர் ,எதற்காக அவர்கள் நிதி உதவி செய்து வருகின்றனர் என்பது பற்றி இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

ரிலையன்ஸ் அறக்கட்டளை: இந்தியாவின் மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யத்தின் தலைவரான முகேஷ் அம்பானி தி ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை செயல்படுத்தி வருகிறார். முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி தொடங்கிய தி ரிலையன்ஸ் பவுண்டேஷன் இந்தியாவில் பல்வேறு பணிகளுக்கு நிதி உதவிகளை செய்து வருகிறது. குறிப்பாக கல்வி, கிராமப்புற மேம்பாடு , பேரிடர் நிவாரணம் மற்றும் சுகாதார பராமரிப்பு ஆகிய துறைகளில் நிதி உதவிகளை செய்து வருகிறது.
டாடா அறக்கட்டளை: இந்தியா மற்றொரு பெரிய தொழில் சாம்ராஜ்ஜியம் டாடா குழுமம். இந்த குழுமம் சார்பில் டாடா பவுண்டேஷன் அல்லது டாடா டிரஸ்ட் அறக்கட்டளை நடத்தப்படுகிறது. ஜாம்செட் ஜி டாடாவால் நிறுவப்பட்ட இந்த அறக்கட்டளை பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நிதி உதவிகளை வழங்குகிறது. குறிப்பாக சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி மற்றும் தண்ணீர் சம்பந்தப்பட்ட ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் அந்த துறை சார்ந்த சேவைகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கும் உதவிகளை செய்து வருகிறது .
தி சான் ஜூக்கர்பர்க் இனிசியேட்டிவ்: பேஸ்புக் நிறுவனரும் மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான மார்க் ஸக்கர்பர்க் மற்றும் அவரது மனைவி இணைந்து தி சான் ஸக்கர்பர்க் இனிசியேட்டிவ் என்ற பெயரில் ஒரு அறக்கட்டளை நடத்தி வருகின்றனர்.
இவர்கள் தொழில்நுட்பம் சார்ந்த ஆய்வுகளுக்கான நிதி உதவிகளை வழங்கி வருகின்றனர். குறிப்பாக கல்வி அறிவியல் உள்ளிட்ட துறைகளில் இருக்கக்கூடிய சவால்களுக்கு தொழில்நுட்ப ரீதியான தீர்வு காண முயற்சி செய்பவர்களுக்கு நிதி உதவி செய்து வருகின்றனர் .
தி இன்ஃபோசிஸ் அறக்கட்டளை: இந்தியாவின் மிக முக்கிய தொழிலதிபர்களான நாராயணமூர்த்தி மற்றும் அவரது மனைவி சுதாமூர்த்தி ஆகியோர் தி இன்போசிஸ் அறக்கட்டளை நடத்தி வருகின்றனர். இந்த அறக்கட்டளை அறிவியல், கல்வி, கலை மற்றும் பெண்கள் மேம்பாடு தொடர்பான முயற்சிகளுக்கு நிதியுதவி செய்து வருகிறது.
பில் & மெலின்டா கேட்ஸ் அறக்கட்டளை: உலகின் பெரும்பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் தி பில் அண்ட் மெலிந்தா அறக்கட்டளையை நடத்தி வருகிறார். உலகின் முன்னணி அறக்கட்டளைகளில் ஒன்று இது.
குறிப்பாக சுகாதாரம், கல்வி மற்றும் வேலை வாய்ப்பு போன்ற மக்கள் நலன் திட்டங்களுக்கு நிதியுதவி செய்து வருகிறது. நவீன மருத்துவ ஆய்வுகளுக்கு இவர்கள் பெருமளவு நிதி வழங்குகின்றனர்.
ஒபாமா அறக்கட்டளை: அமெரிக்க முன்னாள் அதிபரான ஒபாமா மற்றும் குடும்பத்தினர் ஒபாமா அறக்கட்டளையை செயல்படுத்தி வருகின்றனர் .குறிப்பாக இவர்கள் பெண் குழந்தைகளுக்கு கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றில் சம உரிமை வழங்கும் முயற்சிகளுக்கு நிதியுதவி செய்கின்றனர்.
இதே போல எலன் மஸ்க், வாரன் பஃபெட் , மிச்செல் ப்ளூம்பெர்க் ஆகியோரும் அறக்கட்டளைகளை நடத்தி நிதியுதவி செய்கின்றனர். இது வரி செலுத்துவதிலும் அவர்களுக்கு சலுகைகளை பெற்று தருகிறது.
Story Written by : Devika


Click it and Unblock the Notifications