உலக வல்லரசு நாடுகளுக்கிடையே அரசியல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. என்ன நடக்குமோ என்ற அச்சத்தில், உலகப் பொருளாதாரம் என்னவாகுமோ என்ற நிபுணர்கள் எச்சரித்து கொண்டிருக்கும் வேளையில், இந்தியாவிற்கு மட்டும் ஒரு ஜாக்பாட் அடித்துள்ளது எனலாம். அதுதான் பிளாக் கோல்ட் என்று அழைக்கப்படும் கச்சா எண்ணெய்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்து வருவது, இந்திய கருவூலத்திற்கு ஒரு பெரும் வரப்பிரசாதமாக மாறியுள்ளது. உலகமே பதற்றத்தால் தத்தளிக்கும் போது, இந்தியா மட்டும் எப்படி இந்த நெருக்கடியைத் தன் முன்னேற்றத்திற்கான ஏணியாக மாற்றிக் கொள்ளும். இது வெறும் அதிர்ஷ்டமா அல்லது தொலைநோக்கு பார்வையின் வெற்றியா? கோடிக்கணக்கான இந்திய குடும்பங்களின் சமையலறை முதல் நாட்டின் ஜிடிபி வரை இந்த எண்ணெய் மேஜிக் நிகழ்த்தப்போகும் மாற்றங்களை எண்ணி பார்த்தால் வியப்பாக இருக்கிறது. இந்தியா இப்போது உலகரங்கில் அமைதியாகவும், வலிமையாகவும் இருப்பதன் பின்னணியை பார்ப்போம்.
நிம்மதி பெருமூச்சு?
மத்திய கிழக்கு பகுதிகளில் நிலவி வந்த போர் பதற்றமானது தற்காலிகமாகத் தணிந்துள்ளது. குறிப்பாக ஈரான் மீது அமெரிக்கா இராணுவத் தாக்குதலை நடத்தக் கூடும் என்ற பயம், சர்வதேச சந்தையையே ஆட்டம் காண வைக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் பல மாதங்கள் காணாத அளவில் கச்சா எண்ணெய் விலை எகிறியது. ஆனால் இப்போது அந்த அபாயம் குறைந்துள்ளது. எண்ணெய் விநியோகத்தில் தடை ஏற்படாது என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. இதன் விளைவாக சூடாக உச்சத்தில் இருந்த எண்ணெய் சந்தை, தற்போது குளிர்ச்சியடைய தொடங்கியுள்ளது. இந்த குளிர்ச்சியானது இந்தியாவுக்கு ஒரு ஜாக்பாட் போல வந்துள்ளது எனலாம். இது எரிபொருள் விலை குறைய உதவும் என்பதோடு, இந்திய பொருளாதாரம், பணவீக்கம், ரூபாய் மதிப்பு, நடப்பு கணக்கு பற்றாக்குறை என அனைத்திலும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தலாம்.முன்னணி இறக்குமதி நாடு!
பெரிய ஆறுதல்!
தனது எண்ணெய் தேவையில் பெரும்பகுதியை இறக்குமதி செய்யும் இந்தியாவிற்கு, தற்போதைய விலை வீழ்ச்சி ஒரு பெரிய ஆறுதலாகும்.தற்போது சந்தையின் போக்கை ஒரு போர் நடவடிக்கையோ அல்லது அரசியல் மாற்றமோ மட்டும் தீர்மானிக்கவில்லை. மாறாக, தேவைக்கு அதிகமான விநியோகம் இருப்பதும் விலையை கட்டுக்குள் வைத்திருக்கிறது. எந்த ஒரு தனிப்பட்ட நிகழ்வும் இந்த சரிவை இப்போதைக்கு மாற்ற முடியாது என சந்தை வல்லுநர்கள் கருதுகின்றனர்.
மேலும் வரும் மாதங்களில் எண்ணெய் விநியோகம் மேலும் அதிகரிக்கும் என்றே நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். 2022-ல் விலையை உயர்த்த போடப்பட்ட உற்பத்தி கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளன. இதனால் கச்சா எண்ணெய் வரத்து தடையின்றியும் ஏராளமாகவும் கிடைக்கிறது. உலகில் மிகப்பெரிய எண்ணெய் நுகர்வோர் நாடான இந்தியா, தனது தேவையில் 90% இறக்குமதியையே நம்பியுள்ளது. ஆக கச்சா எண்ணெய் விலை என்பது இந்தியாவின் ஒவ்வொரு துறையையும் நேரடியாக பாதிக்கிறது. ஆக இதனால் கச்சா எண்ணெய் விலையின் சிறு மாற்றமும் இந்திய முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்க்கிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications