இந்திய கலாச்சாரம் மற்றும் பொருளாதாரத்தில் தங்கம் ஒரு முதன்மையான முதலீடாக இருந்து வருகிறது. பிற முதலீட்டு திட்டங்களைக் காட்டிலும் முதலீடு செய்வதற்கு ஏற்ற ஒன்றாகவும் தங்கம் உள்ளது. இந்தியா முழுவதும் தங்கத்தின் விலை சீராக இருப்பதில்லை. இது வெவ்வேறு நகரத்திற்கும் ஏற்ப மாறுபடுகிறது. ஏன் தங்கத்தின் விலை வெவ்வேறு நகரங்களிலும் ஒரே மாதிரியாக இல்லை என்ற குழப்பம் உங்களுக்கு எழலாம். அதற்கான விடையை இந்தப் பதிவில் பார்ப்போம்.
தங்கத்தின் விலையில் மாநில வரிகளின் தாக்கம்: பல்வேறு நகரங்களில் தங்கத்தின் விலையை பாதிக்கும் காரணிகளில் ஒன்று, அந்த மாநிலங்களில் விதிக்கப்படும் வரி. எனவே இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் அதற்கு ஏற்றார் போல் வரி விதிக்கப்படுகிறது. சில மாநிலங்கள் தங்கத்தின் மீது அதிக வரி விதிக்கலாம். இதனால் அந்த பகுதிகளில் விலை அதிகமாக இருக்கும். மாறாக குறைந்த வரி விதிப்பைக் கொண்ட மாநிலங்களில் உள்ள நகரங்களில் தங்கம் விலை குறைவாக இருக்கலாம். இந்த வரி விதிப்பு மாறுபாடு தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளுக்கு வழிவகுக்கும். எனவே தங்கத்தின் விலை நுகர்வோர் வசிக்கும் இடத்தை பொறுத்து மாறுபடும்.

தங்கத்திற்கான தேவை: மக்கள் தொகை , கலாச்சாரம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் காரணமாக தங்கத்திற்கான தேவை வெவ்வேறு பகுதிகளிலும் மாறுபடுகிறது. எடுத்துக்காட்டாக மும்பை போன்ற பெரு நகரங்களில் அதிக மக்கள் தொகை உள்ளது. இந்த உயர்ந்த தேவையின் காரணமாக அங்கு போட்டி விலையில் தங்கம் விற்பனையாகிறது.
அதிக தேவை உள்ள பகுதிகளில் தள்ளுபடிகள் பொதுவாக அதிக அளவில் வழங்கப்படுகின்றன. மேலும் விலையை இது குறைக்க உதவுகிறது. இதற்கு நேர் மாறாக குறைந்த மக்கள் தொகை கொண்ட அல்லது பொருளாதார ரீதியாக பின்தங்கிய நகரங்களில் தேவை அந்த அளவு இருக்காது. இதன் விளைவாக குறைந்த அளவு விற்பனையின் காரணமாக அதிக விலையில் தங்கம் விற்பனை ஆகிறது.
புவியியல் காரணங்கள்: போக்குவரத்து செலவுகளும் தங்கத்தின் விலை நிர்ணயத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியா தனது தங்கத் தேவைகளில் கணிசமான பகுதியை கடல் வழியாகத்தான் கொண்டு வருகிறது. இதனால் டெல்லி போன்ற நகரங்களுடன் ஒப்பிடும்போது கடற்கரைக்கு அருகில் உள்ள சென்னை போன்ற நகரங்களில் தங்கம் விலை குறைவாக இருக்கும். கடலோர நகரங்களில் குறைந்த விலைகள். குறைந்த உள்நாட்டு போக்குவரத்து கட்டணங்கள் மற்றும் தளவாட செலவுகள் காரணமாக இருக்கலாம். இது துறைமுகங்களுக்கு அருகில் வசிப்பவர்களுக்கு கூடுதல் நன்மை அளிக்கும் ஒன்றாக இருக்கும்.
உள்ளூர் சங்கங்கள்: பல நகரங்களில் உள்ளூர் சங்கங்கள் தங்க விலையை நிர்ணயிக்கின்றன. நகை வியாபாரிகள் மற்றும் வர்த்தகர்களை கொண்ட இந்த சங்கம் தேவை மற்றும் போட்டி போன்ற பல்வேறு காரணங்களின் அடிப்படையில் உள்ளூர் தங்க நகை விலையை நிர்ணயிப்பதில் பங்கு வகிக்கின்றன.
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தங்கத்தின் விலையில் ஏற்படும் மாறுபாடுகளுக்கு மாநில வரிகள், தேவை ஏற்ற இறக்கங்கள், புவியியல் அம்சங்கள் மற்றும் உள்ளூர் சங்கங்கள் உள்ளிட்ட காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது இதிலிருந்து தெளிவாகிறது.


Click it and Unblock the Notifications