வாஷிங்டன், அமெரிக்கா: அமெரிக்காவை சேர்ந்த பல்வேறு நிறுவனங்களும் ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையை தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. மார்ச் மாதம் தொடங்கி 5 நாட்களே முடிந்திருக்கின்றன. இந்த நிலையில் 100க்கும் அதிகமான அமெரிக்க நிறுவனங்கள் ஊழியர்கள் பணி நீக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவில் 100 பேருக்கு மேல் ஊழியர்களை கொண்டிருக்கக்கூடிய நிறுவனங்கள் Worker Adjustment and Retraining Notification Act என்ற சட்டத்தின்படி ஊழியர்களை பணி நீக்கம் செய்தால் அதனை அந்த உள்ளூர் அரசுக்கும், மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் தகவல் தெரிவித்தாக வேண்டும். இவ்வாறு பதிவு செய்யப்பட்ட தரவுகளில் தான் சுமார் 100 நிறுவனங்கள் ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கை எடுத்திருப்பது தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் சில்லறை வணிகத்தில் தொடங்கி டெக் நிறுவனங்கள் வரை பணிநீக்க நடவடிக்கையை கையில் எடுத்துள்ளன. சில்லறை வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் Joann Fabrics மற்றும் Walgreens ஆகிய நிறுவனங்கள் பெருமளவில் ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளன. கலிபோர்னியா மற்றும் பிற மாநிலங்களில் வேலை செய்யும் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக இவை தெரிவித்துள்ளன.
தற்போது பலரும் ஆன்லைனில் ஷாப்பிங் செய்வதால் கடைகளில் வந்து பொருட்களை வாங்கும் மக்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இந்நிலையில் அமெரிக்காவில் இயங்கும் சில்லறை விற்பனை நிறுவனங்கள் தங்களை மறு கட்டமைப்பு செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி இருக்கின்றன. இதன் காரணமாகவே ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையை எடுத்து இருக்கின்றன என தெரிய வருகிறது.
அதேபோல தொழில்நுட்ப மற்றும் லாஜிஸ்டிக் நிறுவனங்களும் கூட ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையை எடுத்துள்ளன. Intel, FedEx, மற்றும் John Deere ஆகிய நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளன. அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பலவும் தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் காரணமாக பல்வேறு பணிகளை தானியங்கு முறைக்கு மாற்றி வருகின்றன. இதன் காரணமாக அவை தங்களுடைய நிறுவனங்களை மறுகட்டமைப்பு செய்கின்றன.
மனிதர்கள் செய்த வேலையை தொழில்நுட்பத்தின் மூலமே நிறைவேற்ற முடியும் என்பதால் டெக் நிறுவனங்கள் ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. இந்த நிறுவனங்கள் நஷ்டத்தில் இருக்கிறோம் என்பதற்காக ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையை எடுக்கவில்லை அவர்கள் தொழில்நுட்பத்தின் உதவியால் சில வேலைகளை முடிக்க முடிகிறது என்பதாலேயே பணிநீக்க நடவடிக்கையை மேற்கொள்கின்றனர் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்க வேலைவாய்ப்பு சந்தை பெருமளவில் மாற்றம் கண்டு வருவதையே இது காட்டுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே அமெரிக்காவில் வேலைவாய்ப்புகள் உருவாகாமல் இருக்கிறது இந்நிலையில் நிறுவனங்களின் பணிநீக்க நடவடிக்கையும் பெரும் பிரச்சினையாக உருவாகலாம் என எச்சரிக்கின்றனர்.
Story written : devika
More From GoodReturns

எத்தனை AI வந்தாலும் இந்த வேலையை மனுஷங்க தான் செய்ய முடியும்!! ஒரு மணி நேரத்துக்கு ரூ.900 சம்பளம்!!

உழைப்பை யாரும் மதிக்கவில்லை!கார்ப்பரேட் வெற்றிக்கு அதிர்ஷ்டம் முக்கியமா- மைக்ரோசாப்ட் ஊழியர் வேதனை?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications