சென்னை: தமிழ்நாடு அரசு வடசென்னையின் முக்கிய பகுதியான மாதவரத்தில் மாநிலத்தின் முதல் டெக் சிட்டி-ஐ அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக 150 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தைத் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் (TIDCO) செயல்படுத்துவதாக அறிவிப்புகள் வெளியானதில் இருந்து இந்த டெக் சிட்டி எங்கு அமையப்போகிறது..? இதனால் தமிழ்நாட்டுக்கு என்ன லாபம்..? என்ற 2 கேள்விகள் மக்கள் மத்தியில் உள்ளது.
TECH CITY எங்கு வரப்போகிறது?: டெக் சிட்டி தொடர்பாக சமுகவளைத்தளத்தில் பகிரப்பட்ட தகவல்களில், சென்னை மெட்ரோ ரயில் கழகம் (CMRL) முன்பு மாதவரம் பகுதியில் கலப்பு பயன்பாட்டு வளர்ச்சி திட்டத்தைச் செயல்படுத்து திட்டமிட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் மாதவரம் டிப்போட் பகுதியில் வெறும் 65 ஏக்கர் பரப்பளவிலான நிலம் மட்டுமே உள்ளது. எனவே இந்த 150 ஏக்கர் இடத்திற்காக TIDCO மாதவரம் டிப்போட் அருகில் உள்ள தோட்டக்கலைத் துறையிடமிருந்தும் கூடுதல் நிலம் பெறப்படலாம் எனக் கூறப்பட்டு உள்ளது.

TIDCO வெளியிட்ட டெண்டரில், தமிழ்நாடு அரசின், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் (TIDCO) சென்னையில் TN-TECH சிட்டியை நிறுவுமாறு உத்தரவிட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, TIDCO முன்மொழியப்பட்ட TN-TECH சிட்டிக்கு விரிவான மாஸ்டர் பிளான் தயாரிக்க ஒரு கன்சல்டென்ட் தேர்வு செய்ய விரும்புகிறது. இதற்கான டென்டர் வெளியிட்டு உள்ளோம் என தெரிவித்துள்ளது.
டெக் சிட்டி-யின் நோக்கம்: தமிழ்நாடு அரசின் டெக் சிட்டி திட்டத்தின் நோக்கம் தகவல் தொழில்நுட்பம் (IT), IT சார்ந்த சேவைகள் (ITeS), உலகளாவிய திறன் மையங்கள் (GCC), ஃபின்டெக் மற்றும் டீப்டெக் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்நாட்டு மற்றும் உலகளாவிய முதலீடுகளை ஈர்ப்பதாகும்.
சிறப்பு கட்டமைப்புகள்: டெக் சிட்டி சிறந்த அலுவலக இடங்கள், சமூக கட்டமைப்பு மற்றும் குடியிருப்பு இடங்களை வழங்க உள்ளது. இதைத் தவிர, இந்த டெக் சிட்டி திட்டத்தில் சென்டர் பார் எக்ஸ்சலென்ஸ், இன்னோவேஷன் ஹப் மற்றும் உலகத் தரம் வாய்ந்த கன்வென்ஷன் சென்டர் ஆகியவையும் இருக்கும். இதோடு மிக முக்கியமாகப் பெரிய அளவிலான டேட்டா சென்டரும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
TIDCO தகவல்: "தமிழ்நாடு மின்னணு கழகம் (ELCOT) ஏற்கனவே டெக் சிட்டிக்கான ஆரம்பக்கட்ட ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. தற்போது விரிவான சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ள உள்ளோம், இதற்காக ஒரு கண்சல்டென்சியை இணைத்துக் கொள்ள உள்ளோம்" என்று TIDCO மேலாண்மை இயக்குனர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா: "இந்த புதிய டெக் சிட்டி முயற்சி செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சியைப் பயன்படுத்தி புதிய முதலீடுகளையும், புதிய வேலைவாய்ப்புகளை ஈர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, தமிழ்நாட்டை AI துறையில் முன்னணியில் நிலைநிறுத்துகிறது கட்டாயம் பயனளிக்கும். ஏனெனில் தமிழ்நாட்டில் திறன் படைத்த ஊழியர் படை கொண்டுள்ளது மற்றும் பெரிய டேட்டா சென்டர்களை நடத்துவதற்கான திறன் கொண்டது" என்று தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார்.
தெலுங்கானா அரசின் முயற்சி: சமீபத்தில் தெலுங்கானா அரசு ஹைதராபாத் புறநகர் பகுதியில் இந்தியாவின் முதல் மற்றும் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு (AI) நகரத்தை நிறுவத் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து தெலுங்கானா மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர் துடிள்ளா ஸ்ரீதர் பாபு பேசுகையில் "ஹைதராபாத் நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப மையமாக விளங்குகிறது. இனி அதை இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு தலைநகராக மாற்ற விரும்புகிறோம்" என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications