திருச்சியில் மாஸ் காட்டிய முதல்வர் விஜய்! இதுக்காக தான் கோட் சூட் போடுறேன்! விமர்சனங்களுக்கு பதிலடி!

2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் விஜய் 2 தொகுதிகளில் போட்டியிட்டார். 2 தொகுதிகளிலும் வெற்றியும் பெற்றார். ஒன்று பெரம்பூர் தொகுதி மற்றொன்று திருச்சி கிழக்கு தொகுதி. சட்டப்படி ஒரு தேர்தல் வேட்பாளர் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றால், ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும். அந்த வகையில் முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். இன்று திருச்சி மக்களுக்கு நன்றி கூறும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விஜய் வழக்கம் போல தன் பாணியில் பேச்சைத் தொடங்கினார். "என் நெஞ்சில் குடியிருக்கும் என ஆரம்பித்து.. திருச்சி மக்களுக்கு நன்றி தெரிவித்தார்! பின்னர் தேர்தல் விதியினால் நான் பெரம்பூர் தொகுதிக்கு மட்டும் MLA-வாக இருக்கிறேன். எப்படி திருச்சி தமிழ்நாட்டுக்கு ஒரு இதயம் போல செயல்படுகிறதோ? அதே போல திருச்சி மக்களும் எனக்கு மிக மிக நெருக்கமுடையவர்கள். அதில் எந்த மாற்றமும் இல்லை.

இத்தனை வருடங்களாக தமிழக மக்களாகிய உங்களை ஏமாற்றி வந்த இரண்டு பெரிய கட்சிகளை ஒதுக்கிவிட்டு இன்று என்னை தமிழகத்தின் முதல்வராக, இல்லை.. இல்லை.. தமிழகத்தின் சேவகனாக மாற்றியிருக்கிறீர்கள். இதற்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுக்கு ஆதரவு தெரிவித்து முதல்வர் நாற்காலியில் அமர வைத்த கட்சிகளுக்கும், இந்த நேரத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

திருச்சியில் மாஸ் காட்டிய முதல்வர் விஜய்! இதுக்காக தான் கோட் சூட் போடுறேன்! விமர்சனங்களுக்கு பதிலடி!

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் முதல் தேர்தலில் அவர் வாங்காத வாக்கு வித்தியாசத்தில் என்னை ஜெயிக்க வைத்திருக்கீர்கள். அதற்காக நான் எம்ஜிஆர் அவர்களோடு போட்டி போடவில்லை. எம்ஜிஆர் எப்போதும் எம்ஜிஆர் தான். அவர்களுடைய வழியில் உங்கள் விஜய்யாகத்தான் இங்கு பேசிக் கொண்டிருக்கிறேன்.

ஏற்கனவே விஜய் தனது பரப்புரையில் கூறியது போலவே திருச்சி நிகழ்ச்சியிலும் இரண்டே இரண்டு கட்சிக்கு நடுவில் தான் போட்டி. ஒன்று TVK மற்றொன்று DMK என்று அழுத்தமாக தனது கருத்தை பதிவு செய்தார். முன்பெல்லாம் சட்டசபையில் யார் பேசிக் கொள்கிறார்கள்? யார் அடித்துக் கொள்கிறார்கள்? என்பதை எல்லாம் கவனிக்காத கூட்டம், தற்போது சட்டசபையில் என்ன நடக்கிறது? என்பதை தெரிந்து கொண்டிருக்கிறது. இது யாரால் நடந்திருக்கிறது என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. உங்களுக்கே தெரியும்.

திமுக ஸ்டைலில் சொல்ல வேண்டுமானால் முன்பு ரில்ஸ் பார்த்த கூட்டம் இப்பொழுது நியூஸ் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இளம்தலைமுறை அரசியல் என்ன என்பதை தெரிந்து கொள்ள விரும்புகின்றனர். இப்படி ஒரு மாற்றம் நடந்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. இப்படிப்பட்ட மக்களை எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பதற்காக தற்குறி என்று கூறுகிறார்கள். ஆனால் இந்த கூட்டம் தான் தேர்தல் முடிவுகளை முடிவு செய்துள்ளது.

நான் கோட் சூட் போடுவதை பார்த்து பலர் என்னை விமர்சனம் செய்கின்றனர். ஏன் நாங்கள் கோட் சூட் போடவே கூடாதா? ஆதிக்கம் செய்பவர்கள் மட்டும் தான் கோட் சூட் போட வேண்டுமா? இரண்டே இரண்டு கலரை மட்டும்தான் போட்டு வருகிறேன். ஒன்று பிளாக் மற்றொன்று வைட். அனைத்து விஷயத்திலும் விஜய் பிளாக் அண்ட் ஒயிட்டாக தான் இருப்பான் என்பதை காட்டுவதற்காகத்தான் இந்த கோட் சூட். எல்லாத்துக்கும் விளக்கம் கொடுத்து இதே போல பேசும் டைப் நான் இல்லை. இது உங்களுக்கே தெரியும். இதுவரை எனது பரப்புரை அனைத்திலும் 20 நிமிடத்திற்கு மேல் நான் பேசியதே இல்லை என்று கூறி விஜய் திருச்சி தொகுதியை ராஜினாமா செய்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+