செங்கடலில், கடலுக்கு அடியில் நிறுவப்பட்டுள்ள கேபிள்கள் சேதம்: இந்தியாவில் இணைய சேவை பாதிப்பு!!

உலக அளவில் இணைய இணைப்பு ஏற்படுத்தியதில் மிக முக்கியமான ஒரு தொழில்நுட்பம் தாம் கடலுக்கு அடியில் கேபிள்கள் மூலம் கொண்டு வரப்பட்ட இணைப்பு. அந்த வகையில் செங்கடல் பகுதியில் கடலுக்கு அடியில் இருந்த கேபிள்கள் சேதம் அடைந்ததால் இந்தியா , சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் இணைய சேவையில் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்பட்டது.

பல இடங்களிலும் கிளவுட் மற்றும் நெட்வொர்க் சேவைகள் கிடைக்காமல் லட்சக்கணக்கானவர்கள் தவிப்புக்கு ஆளாகும் சூழல் உண்டானது. செங்கடல் பகுதியை பொருத்தவரை ஐரோப்பாவில் இருந்து ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளை நாடுகளுக்கு தொலை தொடர்பு இணைப்பினை ஏற்படுத்துவதற்கு மிக முக்கியமான ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது. செங்கடல் வழியாக கடலுக்கு அடியில் பல ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட்டிருக்கும் கேபிள்கள் தான் உலகம் முழுவதும் தேவையான இணையதள இணைப்பு சேவையை வழங்குகின்றன.

செங்கடலில், கடலுக்கு அடியில் நிறுவப்பட்டுள்ள கேபிள்கள் சேதம்: இந்தியாவில் இணைய சேவை பாதிப்பு!!

இந்த கேபில்களில் ஏற்படக்கூடிய எந்த ஒரு சிறிய சேதமும் பல்வேறு நாடுகளுக்கான இணைய சேவையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கடலுக்கு அடியில் இருந்த இந்த கேபில்கள் எப்படி துண்டிக்கப்பட்டன என்ற கேள்வி எழுகிறது . பல்வேறு கப்பல்கள் அந்த பகுதியில் பயணம் செய்கின்றன அவற்றுக்கான நங்கூரம் போடும்போது இந்த கேபிள்கள் சேதம் அடைந்து இருக்கலாம் அல்லது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கூட இந்த கேபில்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி இருக்கலாம் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

தற்போது கடலுக்கடியில் இருக்கக்கூடிய இந்த கேபிள்களில் ஏற்பட்டிருக்க கூடிய சேதங்களை சரி செய்வது என்பது மிகவும் சவாலான ஒரு விஷயமாக இருக்கும். ஏனெனில் குறிப்பிட்ட இடத்தில் கப்பல்களை நிறுத்தி நிபுணர்களை கொண்டு இதனை சரி செய்வது என்பது பல மாதங்கள் பணி. இந்த பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஹமாஸ் டையினருக்கு ஆதரவாக இஸ்ரேல் படையை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அப்போது இந்த கேபிள்கள் மீது சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்ன சொல்லப்படுகிறது.

ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளுக்கான இன்டர்நெட் தேவைக்கான இணைப்பினை இந்த செங்கடல் பகுதியில் நிறுவப்பட்டுள்ள கேபிள்கள் தான் வழங்குகின்றன. இந்தியாவிலும் இந்த கேபிள் இணைப்பு என்பது முக்கியமானது. ஃபைபர் கேபிள்கள் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு கடலுக்கு அடியில் நிறுவப்பட்டுள்ள . இந்தியாவில் ஈமெயில் ,வீடியோ கால், கிளவுட் சேவைகள் தடையின்றி கிடைக்க இந்த கேபிள்கள் தான் காரணமாக இருக்கின்றன.

இந்த கேபிள்களை அமைப்பது மற்றும் பராமரிப்பது என்பது தனித்துவ தொழில்நுட்ப நிபுணத்துவம் பெற்ற நிறுவனங்களால் மட்டுமே சாத்தியம் . தனியார் நிறுவனங்கள் சர்வதேச நாடுகளோடு கூட்டமைப்பு செய்து இந்த வேலையை செய்கின்றன . இந்தியாவில் பொறுத்தவரை டாடா கம்யூனிகேஷன், ரிலையன்ஸ் ஜியோ ,பாரதி ஏர்டெல் ,சிஃபி டெக்னாலஜிஸ் மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய நிறுவனங்கள் இந்த சேவையை பெறுகின்றன.

சென்னை, மும்பை கொச்சின், திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் எல்லாம் இந்த கேபில்களை நிர்வாகம் செய்வதற்காகவே 14 நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மொத்தம் 17 கேபிள்கள் இவற்றின் மூலம் மேலாண்மை செய்யப்படுகின்றன. இவற்றில் கேபிள் லேண்டிங் ஸ்டேஷன் என அழைக்கின்றனர். மார்க் ஜக்கர்பர்க்கின் மெடா நிறுவனம் இது போலவே கடலுக்கு அடியில் கேபிள்கள் மூலம் உலகம் முழுவதையும் இணைக்கும் பணிகளை தொடங்கியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+