அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே கனடா, மெக்சிகோ, சீனா மீது அதிகப்படியான வரியை விதிக்க முடிவு செய்திருந்த நிலையில், அதிபராக பதவியேற்ற நாளே பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் வரியை விதிக்க உத்தரவிட்டார். இதனிடையில் பிப்ரவரி 1 ஆம் தேதி வரி விதிப்புகள் நடைமுறைக்கு வந்த உடன் 3 நாட்களுக்கும் அமெரிக்க பொருட்கள் மீது வரி விதிப்போம் என அறிவித்தது.
ஆனால் கடந்த 3 நாளில் நிலைமை மொத்தமாக மாறியது மட்டும் அல்லாமல் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாட்டு தலைவர்கள் மத்தியில் நீண்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது, இந்த பேச்சுவார்த்தையின் விளைவாகவே தற்போது வரி விதிப்பை 30 நாட்களுக்குத் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. டிரம்ப் வரி விதிக்க என்ன காரணம்..? டிரம்ப் வரி விதிப்பை திரும்ப பெற என்ன காரணம்..? கனடா, மெக்சிகோ கொடுத்த வாக்குறுதி என்ன..?

டிரம்ப் கனடா, மெக்சிகோ, சீனா மீது அதிகப்படியான வரியை விதிக்க முக்கியமான காரணம் எல்லை பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் கடத்தல் குறித்த பிரச்சனைகள் தான். இதை சரி செய்ய தற்போது இரு நாடுகளும் வாக்குறுதி கொடுத்துள்ளது. எனவே அமெரிக்கா திட்டமிட்ட வரி விதிப்பை 30 நாட்களுக்கு ஒத்திவைத்துள்ளது.
"இந்த ஆரம்ப முடிவுகளால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். கனடாவுடன் இறுதி பொருளாதார ஒப்பந்தத்தை வகுக்க முடியுமா என்பதைப் பார்க்க 30 நாட்களுக்கு அறிவிக்கப்பட்ட தண்டுகள் நிறுத்தி வைக்கப்படும். அனைவருக்கும் நியாயம்!" என்று டிரம்ப் அறிவித்தார்.
கனடாவின் வாக்குறுதி
கனடா, அமெரிக்காவிற்குள் பென்டனில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் வகையில் 1.3 பில்லியன் டாலர் மதிப்பிலான எல்லை பாதுகாப்பு திட்டத்தைச் செயல்படுத்த உறுதியளித்ததைத் தொடர்ந்து இந்த தற்காலிக நிறுத்தம் நடைமுறைக்கு வந்துள்ளது.
புதிய ஹெலிகாப்டர்கள், தொழில்நுட்பம் மற்றும் பணியாளர்கள், எங்கள் அமெரிக்க கூட்டாளிகளுடன் (கனடா, மெக்சிகோ) மேம்படுத்தப்பட்ட ஒருங்கிணைப்பு மற்றும் பென்டனில் போதைப்பொருள் கடத்தலை நிறுத்த போதுமான வளங்களை அதிகரித்தல் போன்ற எங்கள் வடக்கு எல்லை பாதுகாப்பானதாக இருப்பதைக் கனடா உறுதி செய்யும்" என்று டிரம்ப் தனது X பதிவில் தெரிவித்துள்ளார்.
மெக்சிகோவின் வாக்குறுதி
மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷெய்ன்பாம் உடனான பேச்சுவார்த்தைக்குப் பின்னர் மெக்சிகோவிற்கு எதிரான வரிகளையும் டிரம்ப் 30 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைத்தார், இதற்காக இரு நாடுகளுக்கு மத்தியில் ஒரு முக்கியமான ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி, மெக்சிகோ, பென்டனில் கடத்தலைத் தடுக்கவும், சட்டவிரோத குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தவும் 10,000 ராணுவ வீரர்களை அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் குவிக்கும். அதே நேரத்தில் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், மூன்று நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்குப் பின்னர் தண்டுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை அமெரிக்கா மற்றும் அதன் வர்த்தக கூட்டாளி நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவுகளில் முன்னேற்றம் காணப்பட்டு உள்ளது. இருப்பினும், இந்த தற்காலிக ஒத்திவைப்பு, வர்த்தகப் போர் அச்சுறுத்தல் முற்றிலும் முடிவுக்கு வந்துவிட்டதாக அர்த்தமல்ல.
இந்த முடிவு உலகளாவிய பங்குச் சந்தைகளில் சிறிய அளவிலான லாபம் பெறும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், வர்த்தகப் போர் குறித்த அச்சுறுத்தல் முற்றிலும் முடிவுக்கு வராத நிலையில், முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாகவே செயல்படுகின்றனர்.
இந்த நிலையில் அமெரிக்காவின் வரிக்கு அடிபணியாத நாடாகச் சீனா மட்டும் எஞ்சியுள்ளது, இதனால் டிரம்ப் அரசின் கவனம் தற்போது மொத்தமாகச் சீனா மீது திருப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு நாடுகள் மத்தியில் வரி தொடர்பான எவ்விதமான பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை, இதேபோல் 10 சதவீத வரி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications