அமெரிக்க அதிபராக வரும் 20 தேதி டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்க இருக்கிறார். அவர் பதவியேற்ற உடன் பல்வேறு கொள்கைகளை மாற்றக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இவ்வாறு டொனால்ட் ட்ரம்ப் தற்போது இருக்கக்கூடிய வர்த்தக மற்றும் வரி கொள்கைகளை மாற்றினால், இந்தியாவை சேர்ந்த பல துறைகளும் அதனால் பாதிக்கப்படும் என தெரியவந்துள்ளது.
டிரம்புக்கு தேர்தலுக்காக பெரிய அளவில் நன்கொடை தந்து ஆதரவளித்தவர் தான் எலான் மஸ்க். நீண்ட காலமாக இந்தியாவில் டெஸ்லா மின்சார கார்களை விற்பனை செய்ய வேண்டும் என எண்ணி வருகிறது, ஆனால் இந்தியாவில் அதிகபட்ச வரி இருப்பதால் அதனை தவிர்த்து வருகிறது.

இந்த நிலையில் டொனால்ட் டிரம்ப் அதிபராக இருக்கும் இந்த பதவி காலத்தை பயன்படுத்தி வர்த்தக முறைகளில் சில தளர்வுகளை ஏற்படுத்தி எலான் மஸ்க் இந்திய சந்தையில் நுழையலாம் என சொல்லப்படுகிறது. இந்திய சந்தையில் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் கால் பதித்தால் தற்போது இந்தியாவில் மின்சார வாகனங்களை விற்பனை செய்து வரக்கூடிய நிறுவனங்களுக்கு பெரிய சவாலாக அமையும்.
இந்தியாவில் சேட்டிலைட் அடிப்படையிலான டேட்டா சேவைகளை வழங்குவதற்கு எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முன் வரலாம் என சொல்லப்படுகிறது.. இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக கொள்கைகளில் ஏதேனும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டால் இது எளிதாகிவிடும் என நிபுணர்கள் கூறுகின்றனர் . இது தற்போது இது முகேஷ் அம்பானியின் ஜியோ மற்றும் சுனில் மிட்டலின் ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.
டிரம்ப் அரசு இந்தியாவை இந்தோ பசிபிக் எக்கானமிக் பிரேம்ஒர்க்-இல் இணைய வேண்டும் என வலியுறுத்தலாம் என சொல்லப்படுகிறது. இவ்வாறு ட்ரம்ப் தரப்பிலிருந்து அழுத்தம் தந்து இந்தியா இந்த வர்த்தக கூட்டமைப்பினுள் இணைந்தால் இரு நாடுகளுக்கு இடையில் எந்த ஒரு தடையும் இல்லாமல் தரவுகள் பரிமாற்றம் நடைபெறும். இது இந்தியாவின் டிஜிட்டல் இறையாண்மையை பாதிக்கலாம் என சொல்லப்படுகிறது.
ஹெச்1பி விசா நடைமுறைகளில் மாற்றங்களை கொண்டு வந்தால் அது இந்தியாவை சேர்ந்த ஐடி நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை அமெரிக்காவிற்கு அனுப்பி பணி செய்ய வைப்பதை பாதிக்கும். இதனால் இந்தியாவை சேர்ந்த ஐடி நிறுவனங்களின் வளர்ச்சியில் சற்றே தொய்வு ஏற்படலாம் என சொல்லப்படுகிறது.
அதேபோல இந்தியாவிலிருந்து பெருமளவிலான ரத்தினங்களும் வைர நகைகளும் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன . இரு நாடுகளுக்கு இடையிலான ஏற்றுமதி இறக்குமதி கொள்கையில் ஏதேனும் மாற்றம் வந்தால் இந்த துறையும் பாதிக்கும்.
இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஓர் ஆண்டுக்கு 15.9 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள வைரமும் , 4.74 பில்லியன் டாலர் மதிப்புள்ள தங்க நகைகளும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ஒருவேளை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி அதிகரித்தால் இங்கிருக்கும் தங்க மற்றும் வைர நகை நிறுவனங்கள், வாகன பாகங்களை தயாரிக்கும் நிறுவனங்கள், சோலார் உற்பத்திக்கான உபகரணங்களை ஏற்றுமதி செய்யும் தொழில்கள் பாதிக்கப்படும்.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீத வரி விதித்தால் கூட அது இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சியில் 30 அடிப்படை புள்ளிகள் வரை குறைக்க வாய்ப்பு உள்ளது என மார்கன் ஸ்டான்லி நிறுவனம் கணிக்கிறது.
Story written by: Devika
More From GoodReturns

ஈரான் போர்: டிரம்ப் நிர்வாகத்திலேயே ஒரு கருப்பு ஆடு? செய்தியாளர்களிடம் உண்மையை போட்டுடைத்த டிரம்ப்

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் Toll Gate- ஆ? வாய்ப்பில்ல ராஜா என்கிறார் டிரம்ப்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?



Click it and Unblock the Notifications