டெல்லி: அனைத்து திறமைகளோடும் தகுதிகளோடும் பிரதமர் பதவியில் இருந்தாலும் பல கிண்டல்களுக்கும் விமர்சனங்களுக்கும் ஆளானவர் தான் மன்மோகன் சிங். பல முறை மக்களையும் பத்திரிக்கையாளர்களையும் நேரில் எதிர்கொண்டு பேசிய மாமனிதர் வரலாறு என்னிடம் கனிவாக இருக்கும் என நம்புகிறேன் என்ற தனது அரசியல் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான காலத்தில் தெரிவித்தார். இதை ஏன் தெரிவித்தார்? எதற்காக தெரிவித்தார்?
மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போதும் சரி, அமைச்சராகவும், அதிகாரியாகவும் இருந்த போதும் சரி நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்தியவர். இந்தியாவை பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீட்ட தாராளமயமாக்கல் கொள்கையின் சிற்பி என கூறலாம்.

ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து பிறந்து நாட்டின் மிக உயர்ந்த பதவிக்கு வந்தவர். தற்போது பாகிஸ்தானில் இருக்கக்கூடிய அப்போதைய பிரிக்கப்படாத பஞ்சாபில் 1932 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 ஆம் தேதி பிறந்தார். சிறுவயதிலிருந்தே மன்மோகன் சிங் படிப்பில் சுட்டி என கூறலாம். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் ஃபர்ஸ்ட் கிளாஸ் டிகிரி முடித்த அவர் 1960களில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் சென்று அங்கே டி பில் படித்தார்.
இதன் பின்னர் அவர் தலைமை பொருளாதார ஆலோசகர், திட்டமிடல் ஆணையத்தின் துணைத் தலைவர், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் மற்றும் மத்திய நிதி செயலாளர் என நாட்டின் முக்கியமான பொறுப்புகளை வகித்தார். இந்த பொறுப்புகளில் எல்லாம் அவர் சிறப்பாக செயல்பட்டதை அறிந்து தான் பிரதமர் நரசிம்மராவ் அவருக்கு நிதித்துறை அமைச்சர் என்ற மிக முக்கியமான பொறுப்பை வழங்கினார். இந்திய பொருளாதாரம் மிகப் பெரிய போராட்டத்தில் சிக்கியிருந்த காலத்தில் தான் மன்மோகன் சிங்குக்கு நிதி அமைச்சராகும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
பல்வேறு கொள்கைகளை புதிதாக அறிமுகம் செய்து இந்திய பொருளாதாரத்தை நிலை நிறுத்திய பெருமை மன்மோகன் சிங்கையே சாரும். பின்னர் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பிரதமராகும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. மன்மோகன் சிங் தான் பிரதமராக பதவி வகித்த காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை சரியான பாதைக்கு கொண்டு செல்வதற்கு ஏற்ற வகையிலான பல்வேறு கொள்கைகளை அறிமுகம் செய்தார் .
தன்னுடைய 10 ஆண்டு கால ஆட்சியிலும் நாட்டின் பொருளாதாரத்தை சராசரியாக 8. 5 சதவீதம் என்ற அளவீட்டிலேயே வைத்திருந்தது மன்மோகன் சிங் தலைமையிலான அரசு. அது தவிர மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியில் தான் இந்தியா தன்னுடைய வெளியுறவுக் கொள்கையில் பெரிய மாற்றங்களை கொண்டு வந்தது குறிப்பாக இந்தியா அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
சர்வதேச சமூகத்தின் முன்னணியில் இந்தியாவை கொண்டு வந்தது மன்மோகன் சிங் தலைமையிலான அரசின் வெளியுறவு கொள்கைகள் என கூறலாம் மன்மோகன் சிங் ஆட்சியின் கீழ் பல்வேறு ஊழல்கள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அவர் மீது அவருடைய தனிப்பட்ட நேர்மை தொடர்பாக ஒருபோதும் யாரும் கேள்வி எழுப்பியதில்லை.
அந்த வகையில் எதிர்க்கட்சியினராலும் விரும்பப்படக்கூடிய ஒரு நபராக இருந்தவர் தான் மன்மோகன் சிங். இவர் பிரதமராக இருந்தாலும் அதிகாரம் அனைத்தும் சோனியா காந்தி இடம்தான் இருந்தது என தொடர்ந்து அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு வந்தது.
அவருடைய ஆட்சியில் பல்வேறு ஊழல் புகார்கள் இருந்தாலும் அதன் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் ஒரு பொம்மை பிரதமராக தான் அவர் செயல்படுகிறார் என எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தன. அவரை ஒரு ஆக்சிடென்ட் பிரைம் மினிஸ்டர் என்றும் கூறின. ஆனால் மன்மோகன் சிங் இவற்றை அனைத்தையும் பெரிதளவில் கண்டுகொள்ளாமல் தன்னுடைய பணியில் மட்டுமே கவனம் செலுத்தினார்.
ஜனவரி 2014 ஆம் ஆண்டு இறுதியாக பிரதமராக பத்திரிக்கையாளர்களை சந்தித்த மன்மோகன் சிங் தற்போது இருக்கும் சமகால ஊடகங்களை விட நாடாளுமன்றத்தில் இருக்கும் எதிர்க்கட்சிகளை விட வரலாறு எனக்கு கனிவாக இருக்கும் என நான் நேர்மையாக நம்புகிறேன் என தெரிவித்தார்.
Story written by: Devika
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications