துபாயில் வருமான வரி செலுத்த வேண்டிய தேவை இல்லை என்பதால் இந்தியாவை விடுத்து பல பெரும் பணக்காரர்களும் துபாய்க்கு குடிப்பெயர எண்ணுவதாக அண்மையில் ஒரு ஆய்வறிக்கை வெளியானது. இந்த நிலையில் இந்தியாவில் வாழ்க்கை செலவினங்கள் குறித்தும் துபாயில் வாழ்க்கை செலவினங்கள் குறித்தும், சார்ட்டட் அக்கவுன்டன்ட் நிதின் கவுசிக் என்பவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் விரிவான பதிவினை வெளியிட்டுள்ளார்.
அதில் இந்தியாவுடன் ஒப்பிடும்போது துபாயில் வாழ்க்கைச் செலவினங்கள் அதிகம் எனக் குறிப்பிட்டுள்ளார். உதாரணமாக துபாயில் ஒரு படுக்கை அறை கொண்ட ஒரு வீட்டின் வாடகை மாதத்திற்கு 1.5 லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை இருக்கும், இதுவே இந்தியாவின் மெட்ரோ நகரங்களில் 40 ஆயிரத்திலிருந்து 70 ஆயிரம் ரூபாய்க்குள் தான் இருக்கும் என குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் மளிகை பொருட்களுக்கு நீங்கள் இந்தியாவை விட அதிகம் செலவு செய்ய வேண்டி இருக்கும் எனக் கூறியிருக்கிறார்.

குறிப்பாக ஒரு லிட்டர் பால் கூட துபாயில் 120 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டி இருக்கும் என அவர் தெரிவித்திருக்கிறார். இந்தியாவில் மும்பை நகரத்தில் மாதாந்திர மெட்ரோ பாஸுக்கு 350 ரூபாய் செலவு செய்தால் போதும் ஆனால் துபாயில் 8500 ரூபாய் செலவிட வேண்டும் என அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இந்தியாவில் திடீரென வேலை இழந்துவிட்டால் வேறு நிறுவனங்களில் வேலை தேடி விட முடியும். ஆனால் துபாயில் நீங்கள் வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள் திடீரென உங்களை பணிநீக்கம் செய்துவிட்டார்கள் என்றால் உங்களுடைய விசா காலாவதி ஆகிவிடும் என கூறியுள்ளார்.
அதாவது வேலை இல்லாமல் நீங்கள் 30 லிருந்து 60 நாட்கள் வரை மட்டுமே அங்கே தங்க முடியும், அதற்குள் நீங்கள் புதிய வேலையை தேடிக் கொள்ள வேண்டும் இல்லை எனில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என தெரிவித்திருக்கிறார். துபாயில் பல்வேறு நிறுவனங்கள் குறித்த நேரத்திற்கு ஊதியம் வழங்காது என குறிப்பிட்டு இருக்கும் அவர் கட்டுமானம், சில்லறை வணிகம் உள்ளிட்ட பிரிவுகளில் வேலை செய்யும் வெளிநாட்டவர்கள் நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டி இருக்கும் ஓவர் டைம் வேலைக்கு கூடுதல் சம்பளம் வழங்கப்படுவது கிடையாது, பணி பாதுகாப்பும் கிடையாது என தெரிவித்துள்ளார்.
துபாய்க்கு செல்ல வேண்டும் என்ற உங்களுடைய விருப்பம் முற்றிலும் தவறானது என நான் கூற மாட்டேன், ஆனால் அது அனைவருக்குமான நகரமல்ல என்பதுதான் என்னுடைய கருத்து என தெரிவித்துள்ளார். உங்களிடம் மிக வலுவான திறமைகள் இருக்கின்றன, போதிய அளவு சேமிப்பு இருக்கிறது, சரியான நபர்களை தேடிச் சென்று உங்களால் நல்ல வேலை பெற முடியும் எனும்போது நீங்கள் நிச்சயமாக துபாய்க்கு செல்ல முயற்சி செய்யலாம் என கூறியுள்ளார்.
கண்மூடித்தனமாக மற்றவர்கள் துபாய் செல்கிறார்கள் என்பதற்காக நாமும் அங்கே சென்று தங்கிவிடலாம் என கனவு காண கூடாது, உண்மை நிலவரத்தை அறிந்து கொண்டு முடிவெடுங்கள் என கூறியுள்ளார்.
More From GoodReturns

துபாய் முதல் கத்தார் வரை.. ஈரானின் திடீர் தாக்குதலால் ஷாக்.. அமெரிக்காவின் அடுத்த திட்டம் என்ன..?

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!



Click it and Unblock the Notifications