அமெரிக்க அரசின் செயல் திறன்களை சீர்படுத்துவதற்காக டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு செயல் திறன் துறை என்ற ஒரு புதிய துறையை உருவாக்கியது, ஒரு திங்க் டேங்க் அமைப்பாக இருந்தாலும் அரசுடனும், அரசு அதிகாரிகள் உடனும் நெருங்கி பணியாற்றக்கூடிய அமைப்பு. இதனை Department of Government Efficiency - DOGE என அழைக்கிறார்கள்.
அமெரிக்கா அதிபராக பதவி ஏற்பதற்கு முன்னதாகவே இந்த துறையை அமைத்துவிட்டார் டிரம்ப். இந்தத் துறைக்கு தலைவராக உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க்கை நியமனம் செய்துள்ளார். இந்த குழுவின் வேலை அமெரிக்க அரசு செயல் திறன்களின் மேம்படுத்துவது ,அரசு ஊழியர்களின் செயல் திறன்களை மேம்படுத்துவது மற்றும் தேவையற்ற அரசு செலவினங்களை குறைப்பது என கூறப்பட்டது.

இந்த துறை தொடங்கப்பட்டதிலிருந்து இதில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளும் தொடர்ந்து சர்ச்சைக்குள்ளாகி வருகின்றன. துறை அமைக்கப்பட்ட இந்த ஒரு மாத காலத்தில் ஒரு பில்லியன் டாலர்களை அமெரிக்கா அரசுக்கு சேமித்துக் கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
குறிப்பாக இந்த செயல்திறன் துறை தான் அமெரிக்க அரசு ஊழியர்களை தானாக வேலையை விட்டு செல்லலாம் என்றும் அவர்களுக்கு ஏழு மாத காலத்திற்கான ஊதியம் வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டது.
தொடர்ந்து ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பது, அரசு ஊழியர்களுக்காக செய்யும் செலவினங்களை தவிர்ப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை இந்த செயல் திறன் துறை மேற்கொண்டு வருகிறது. இந்த அரசு செயல் திறன் துறைக்கு தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள எலான் மஸ்க் அரசு துறைகளை தான் நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மாற்றப் போவதாக அறிவித்துள்ளார்.
இதற்காக 19 முதல் 24 வயதுக்கு உட்பட்ட இளம் பொறியாளர்கள் பலரையும் இவர் பணிக்கு அமர்த்தியுள்ளார். இவர்களில் ஒரு ஒரு மாணவர் இன்னும் கல்லூரி படிப்பை கூட முழுமையாக முடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
இவர்களில் ஆகாஷ் பொப்பா என்பவர் 21 வயதான இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பொறியாளர் ஆவார். இவர் அரசு செயல் திறன் துறையில் மூத்த ஆலோசகராகவும் கோடிங் செய்வதில் நிபுணர் என்றும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அரசின் அனைத்து ஐடி அமைப்புகளையும் அணுகும் நபராக மாறி இருக்கிறார்.
அதேபோல நிகில் ராஜ்பால் என்ற இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டு மற்றொரு 30 வயதான பொறியாளரும் அமெரிக்க அரசின் செயல் திறன் துறையில் நிபுணர் என்ற பெயரில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்பு ட்விட்டர் நிறுவனத்தில் இவர் பணியாற்றியவர் என தெரிய வருகிறது.
இவ்வாறு எலான் மஸ்க்கால் நியமனம் செய்யப்பட்டுள்ள அனைவரும் அமெரிக்க அரசின் ரகசிய தகவல்களை அணுகும் உரிமையை பெற்றுள்ளனர். மேலும் கோடிக்கணக்கான அமெரிக்க மக்களின் நிதி சம்பந்தப்பட்ட தகவல்களை அணுக கூடிய உரிமையும் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது .
இதுதான் தற்போது அமெரிக்காவில் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது. சிறு வயது மற்றும் அனுபவமே இல்லாதவர்களை எப்படி முக்கியமான இடத்தில் பணிக்கு அமர்த்தலாம் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications