உலகின் பெரும் பணக்காரராக இருக்கும் எலான் மஸ்க் டிவிட்டரை வாங்குவதாக அறிவித்த நாளில் இருந்து இன்று வரையில் அதிரடிகள் குறையாமல் டிவிட்டரை சுற்றி ஒரு பரபரப்பு நிலவி வருகிறது. டிவிட்டர் தளத்தின் பெயரை X என மாற்றியதில் இருந்து அடுத்தடுத்து பல சேவைகளை அறிவித்து வருவது வரையில் பல சமுகவலைத்தளங்கள் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் டிவிட்டரின் முன்னாள் சிஇஓ மற்றும் இந்தியரான பராக் அகர்வால்-ஐ முதல் நாளே எலான் மஸ்க் பணிநீக்கம் செய்ய என்ன காரணம் என தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வருகிற செப்டம்பர் 12 ஆம் தேதி பிரபல எழுத்தாளர் Walter Isaacson எழுதிய எலான் மஸ்க்-ன் வாழ்க்கை வரலாறு குறித்த புத்தகம் வெளியாக உள்ளது.

இந்த புத்தகத்தில் இதுவரையில் எலான் மஸ்க் பொதுவெளியில் பகிராத பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். Walter Isaacson என்பவர் ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை எழுதிய பிரபல எழுத்தாளர்.
இந்த நிலையில் எலான் மஸ்க்-ன் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அச்சிட்டு வெளியிடுகிறது. இந்த புத்தகத்திற்காக பல சிஇஓ, தொழிற்துறை வல்லுனர்கள், எலான் மஸ்க் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
எலான் மஸ்க் டிவிட்டரை வாங்குவதாக அறிவித்து இதற்கான பணிகள் முழுமையாக முடிவதற்கு முன்பு, எலான் மஸ்க் ஒரு இரவு டின்னரில் இந்திய சிஇஓ-வான பராக் அகர்வால்-ஐ தனிப்பட்ட முறையில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் பாரக் அகர்வால் சிற்ப்பான மனிதராக எலான் மஸ்க்-கிற்கு தோன்றினாலும், ஒரு நிர்வாக தலைவருக்கான குவாலிட்டி பராக் அகர்வாலிடம் இல்லை என்பதை உணர்ந்துள்ளார்.
இந்த டின்னர் முடிந்த உடன் எலான் மஸ்க், டிவிட்டருக்கு தற்போது நெருப்பு துப்பும் டிராகன் வேண்டும், அது பராக் அகர்வால் இல்லை என தெரிவித்துள்ளார். இதன் பின்பு டிவிட்டர் நிர்வாகத்தில் பல பிரச்சனைகள் உருவானதில் எலான் மஸ்க் தலைமை ஏற்ற பின்பு பராக் அகர்வால் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
எலான் மஸ்க், பராக் அகர்வால் மத்தியிலான டின்னரில் டிவிட்டரின் அப்போதைய நிர்வாக குழு தலைவர் Bret Taylor இருந்துள்ளாதாக இந்த புத்தகத்தில் Walter Isaacson தெரிவித்துள்ளார். இருவருக்கும் மத்தியிலான பேச்சுவார்த்தை குறித்து டிவிட்டர் தொடர்பான வழக்கு விசாரணையின் போது செப்டம்பர் 2022ல் வெளியானது.
மார்ச் 27, 2022ல் பராக் அகர்வால் Hey Elon - great to be connected directly. Would love to chat என மெசேஜ் அனுப்பியுள்ளார், இதற்கு எலான் மஸ்க் Great dinner 😄 என பதில் கொடுத்துள்ளார். ஆனால் ஏப்ரல் மாதம் முதல் டிவிட்டரில் பராக் அகர்வால் தலைமையிலான நிர்வாகம் எலான் மஸ்க்கிற்கு எதிராக திரும்பியது. இதனால் இருவருக்கும் மத்தியிலான நட்பு உடைந்தது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications