டிவிட்டர் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு எலான் மஸ்க் மீது தொடுத்த வழக்கின் விசாரணையில் எலான் மஸ்க் மனம் மாறி ஏப்ரல் மாகம் வாக்குறுதி அளித்தது போல் டிவிட்டர்-ஐ கைப்பற்ற விரும்புவதாக அறிவித்தார்.
இதைத் தொரட்ரந்து நீதிமன்றம் அக்டோபர் 28 கைப்பற்ற வேண்டும் வேண்டும் என உத்தரவிட்டது.
இதன் வாயிலாக எலான் மஸ்க், டிவிட்டர் நிறுவனத்தைக் கைப்பற்ற போதுமான பணத்தைத் தயாராக வைத்திருந்த நிலையில் 27 ஆம் தேதியை எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை வாங்கினார் மொத்தமாக டிவிட்டரை கைப்பற்றினார்.
எலான் மஸ்க் டிவிட்டரை கைப்பற்றிய கையோடு முதல் வேலையாக டிவிட்டர் சிஇஓ-வான பராக் அகர்வால்-ஐ பணிநீக்கம் செய்தார். பராக் அகர்வால்-ஐ டிஸ்மிஸ் செய்ய என்ன காரணம்..?
பராக் அகர்வால்
டிவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ-வான பராக் அகர்வால் ஐஐடி பாம்பே கல்லூரியில் பிடெக் கம்பியூட்டர் சையின்ஸ் இன்ஜினியரிங்-ம், அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் கம்பியூட்டர் சையின்ஸ் பிரிவில் Phd பட்டம் பெற்றவர். டிவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ-வாக இவரை அறிவிக்கும் வரையில் இவருடைய பெயர் தெரியாது.
டிவிட்டர்
டிவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ வாகப் பராக் அகர்வால் நவம்பர் 2021ல் அறிவிக்கப்பட்டார், டிவிட்டரின் முதல் இந்திய சிஇஓ, அமெரிக்க நிறுவனத்தில் இளம் வயதில் சிஇஓ பதவிக்கு உயர்ந்தவர் எனப் பல பெருமைக்குச் சொந்தக்காரர். டிவிட்டரில் 2011 ஆம் ஆண்டு வெறும் 1000 ஊழியர்கள் மட்டுமே இருந்த போது சேர்ந்தார், 2017ல் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக உயர்ந்தார்.
எலான் மஸ்க்
இந்த நிலையில் ஏப்ரல் மாதம் எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தின் 9 சதவீத பங்குகளை 3 பில்லியன் டாலருக்கு வாங்கியுள்ள செய்தி பங்குச்சந்தை அறிக்கை மூலம் வெளிச்சத்திற்கு வந்தது. இதைத் தொடர்ந்து டிவிட்டர் நிர்வாகக் குழுவில் சேர எலான் மஸ்க் விரும்பி பராக் அகர்வால் உட்படப் பல நிர்வாக அதிகாரிகளிடம் பேசினார்.
நட்பு
இந்தப் பேச்சுவார்த்தையின் போது டிவிட்டர் வளர்ச்சி, தொழில்நுட்பம் போன்ற பல முக்கியமான விஷயத்தை எலான் மஸ்க் மற்றும் பராக் அகர்வால் விவாதித்து இருவரும் நெருங்கிய நண்பர்கள் போல் இருந்தனர். ஆனால் பராக் அகர்வால் டிவிட்டரில் எலான் ஆதிக்கம் அடைய கூடாது என முடிவு செய்தார்.
நிர்வாகக் குழுவில் இடம்
இதனால் டிவிட்டர் நிர்வாகம் எலான் மஸ்க்-கிற்கு நிர்வாகக் குழுவில் இடம் கொடுத்ததாலும், 14.9 சதவீத பங்குகளுக்கு மேல் வாங்கக் கூடாது எனக் கண்டிஷன் வைத்தது. இது எலான் மஸ்க் வெறுப்பை ஏற்படுத்தியது மட்டும் அல்லாமல் டிவிட்டரில் இருக்கும் பல ஓட்டைகளைக் கண்டுபிடிக்கத் துவங்கினார்.
நட்புறவு உடைந்தது
இதில் எலான் மஸ்க் மற்றும் பராக் அகர்வால் மத்தியில் வாக்குவாதத்தை ஏற்படுத்திய நிலையில், எலான் மஸ்க்-ன் Is Twitter dying? டிவீட் செய்து பிரச்சனை வெளியுலகத்திற்குக் கொண்டு வந்தது மூலம் பராக் அகர்வால் - எலான் மஸ்க் மத்தியிலான நட்புறவு உடைந்தது. இதைத் தொடர்ந்து ஏப்ரல் 11, 2022ல் டிவிட்டர் நிர்வாகக் குழுவில் சேர எலான் மஸ்க் மறுப்பு தெரிவித்தார்.
poison pill திட்டம்
அடுத்தச் சில நாட்களிலேயே எலான் மஸ்க் மொத்த டிவிட்டர் நிறுவனத்தையும் அதன் சந்தை விலையைக் காட்டிலும் அதிகப்படியான விலையான 44 பில்லியன் டாலருக்கு வாங்கும் திட்டத்தை அறிவித்தார். இதைத் தடுக்கும் வகையில் பராக் அகர்வால் தலைமையில் டிவிட்டர் முதலீட்டாளர்கள் பேசி எலான் மஸ்க் வருவதைத் தடுக்க "poison pill" திட்டத்தைக் கொண்டு வந்ததார் பராக்.
போலி கணக்குகள்
இதன் பின்பு போலி கணக்குகள் குறித்து எலான் மஸ்க், டிவிட்டர், பராக் அகர்வால் மத்தியில் பல விவாதங்கள் வெளிப்படையாகவும், ரகசியமாகவும் நடந்தது. இதேவேளையில் பராக் அகர்வால் தனது எதிராக நின்ற பல உயர் அதிகாரிகளைப் பணிநீக்கம் செய்தார். இது டிவிட்டர் குறித்த ரகசிய தரவுகள் வெளியான பின்பு நடந்தது.
பராக் அகர்வால் பணிநீக்கம்
டிவிட்டரை எலான் மஸ்க் வாங்குவதைக் கடைசி வரையில் எதிர்த்தவர் பராக் அகர்வால் என்பதால், டிவிட்டரை கைப்பற்றிய எலான் மஸ்க் முதலில் செய்த வேலை பராக் அகர்வால் மற்றும் அவருக்கு ஆதரவாக இருந்த மூத்த அதிகாரிகளைப் பணிநீக்கம் செய்வது தான்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது



Click it and Unblock the Notifications