மார்க் ஜூக்கர்பெர்க், எலான் மஸ்க் சம்பளம் வெறும் 1 டாலர் தானா? இதுல எதும் உள்குத்து இருக்கா?

அமெரிக்கா: ஒரு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவி என்பது பல்வேறு பொறுப்புகள் நிறைந்தது. இந்த பதவியை அடைவதும், அதற்குரிய பொறுப்புகளை திறம்பட செய்வதும் சவால்கள் நிறைந்தது.

நிறுவனத்தில் நிகழும் சிறு தவறுகள் தொடங்கி பெரிய சாதனைகள் வரை நஷ்டமோ , லாபமோ தலைமை செயல் அதிகாரியின் தலையில் தான் விழும். இவ்வளவு பொறுப்பு நிறைந்த பதவிக்கு கோடிக்கணக்கில் சம்பளம் கிடைக்க வேண்டும்.

மார்க் ஜூக்கர்பெர்க், எலான் மஸ்க் சம்பளம் வெறும் 1 டாலர் தானா? இதுல எதும் உள்குத்து இருக்கா?


ஆனால் அதற்கு மாறாக பல்வேறு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருப்பவர்கள் 1 அமெரிக்க டாலரை மட்டுமே ஊதியமாக பெறுகின்றனர்.

உலகின் புகழ்பெற்ற தலைமை செயல் அதிகாரிகலான பேஸ்புக்கின் மார்க் ஸக்கர்பர்க், டெஸ்லாவின் எலன் மஸ்க், கூகுளின் லாரி பேஜ், செர்ஜி பிரின், ஆப்பிளின் ஸ்டீவ் ஜாப்ஸ், ஒராக்களின் லேரி எலிசன் ஆகியோர் தங்களின் நிறுவனங்களின் 1 டாலரை மட்டுமே ஊதியமாக பெற்றுள்ளனர்.

அமெரிக்காவில் செயல்படும் பெரு நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் இப்படி 1 டாலரை ஊதியமாக பெறுவதற்கு முக்கிய காரணம் வரி விதிப்பு. இப்படி 1 டாலரை ஊதியமாக பெற்றால் பெருமளவில் வரி செலுத்துவதில் இருந்து தப்பித்து கொள்ளலாம். ஆனால் 1 டாலரை ஊதியமாக கொண்டு அவர்களின் செலவை எப்படி சமாளிப்பது?

இதற்கு கான் தலைமை பதவிகளில் இருப்பவர்கள் சம்பளத்தை தவிர நிறுவன லாபத்தில் பங்கு, நிறுவன பங்குகளில் குறிப்பிட்ட சதவிகிதத்தை தங்கள் பெயரில் கொண்டிருப்பது, போனஸ் என ஒரு பேக்கேஜாக பெறுகின்றனர். இந்த பேக்கேஜின் ஒரு பகுதி தான் சம்பளம்.

சம்பளம் 1 டாலராக இருந்தாலும் மற்ற கொடுப்பனவு பல கோடிகளில் இருக்கும். இதற்கு சம்பளம் என ஒன்றை பெறாமலேயே இருக்கலாமே என தோன்றலாம்.ஆனால் சட்டப்படி இவர்கள் சம்பளம் பெற்றாக வேண்டும்.

அது அதிகமாக இருந்தால் வரி செலுத்த வேண்டும். எனவே வரியும் செலுத்த கூடாது என , சட்டப்படியும் நடக்க வேண்டும் எனவே தான் 1 டாலர் சம்பளத்தை தேர்வு செய்கின்றனர். 1900களில் தான் இந்த வழக்கம் முதன்முதலில் நடைமுறைக்கு வந்தது.

இரண்டாம் உலகப் போரின் போது சில நிறுவன தலைவர்கள் தாமாகவே முன் வந்து அரசு சேவைகளில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் இலவசமாக சேவை செய்ய முன் வந்தனர். ஆனால் அரசின் விதிகள் இதனை அனுமதிக்கவில்லை. எனவே 1 டாலர் ஊதியம் என்ற முறை நடைமுறைக்கு வந்தது.

1978ஆம் ஆண்டு Chrysler Corporation நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி Lee Iacocca தன்னுடைய நிறுவனத்தில் 1 டாலர் ஊதியத்தை அறிமுகம் செய்தார். தற்போது பெரும்பாலான நிறுவன தலைமை செயல் அதிகாரிகள் இந்த முறையை பின்பற்றுகின்றனர்.


Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+