சம்பளம் அதிகமா கொடுங்க.. மூன்லைட்டிங் பிரச்சனை வராது.. ஐடி நிறுவனங்களுக்கு அதிகரிக்கும் நெருக்கடி!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மூன்லைட்டிங் என்பது சமீபத்திய வாரங்களாகவே பெரும் விவாதமாகவே மாறியுள்ளது. குறிப்பாக மூன்லைட்டிங்-கினை சுட்டி காட்டி விப்ரோ நிறுவனத்தின் பணி நீக்கத்திற்கு பிறகு இது பெரும் சர்ச்சையாகவே மாறி வருகின்றது.

 

குறிப்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் இது குறித்து தங்களது கருத்து மழையை பொழிந்து வருகின்றனர்.

ஐடி துறையை சேர்ந்த பெரும்பாலான முன்னணி நிறுவனங்கள் மூன்லைட்டிங்-க்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன.

சரியான விஷயம் அல்ல

சரியான விஷயம் அல்ல

இது ஐடி துறையில் பெரும் பிரச்சனையை கிளப்பி வருகின்றது. டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களும் மூன்லைட்டிங் ஒரு சரியான செயல் அல்ல, இது நெறிமுறை அற்றது என கூறி வருகின்றன. ஐடி நிறுவனங்கள் ஒவ்வொன்றும் மூன்லைட்டிங் குறித்து பிளவுபட்டுள்ளன. இதற்கிடையில் ட்விட்டரிலும் பயனர்கள் பலவாறு தங்களது கருத்துகளை கூறி பிளவுபட்டுள்ளனர்.

மூன்லைட்டிங்-ன் பலன்

மூன்லைட்டிங்-ன் பலன்

நிறுவனங்களை போல பல பயனர்களும் இந்த மூன்லைட்டிங்-கில் பிளவுபட்டுள்ளனர். சிலர் நீண்டகால நோக்கில் இது பாதிப்பினை ஏற்படுத்தும் என நம்புகின்றனர். ஒரு பயனர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நீங்கள் எளிதாக மூன்லைட்டிங்-கில் ஒரு மணி நேரத்திற்கு 50 - 100 டாலர்கள் எளிதாக சம்பாதிக்கலாம். மாதத்திற்கு 40 மணி நேரம் வேலை செய்தால், மாதத்திற்கு 4000 டாலர்கள் முதல் 3,20,000 டாலர்கள் வரையில் பெறலாம் என, மூன்லைட்டிங்கின் மூலம் எப்படி பயனடையலாம் என விளக்கமாக கூறியுள்ளார். இதன் மூலம் வருடத்திற்கு 38 லட்சம் வரையில் சம்பாதிக்கலாம். கவலை வேண்டாம். திறமை இருந்தால் போதும் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளார்.

சம்பளத்தினை அதிகரியுங்கள்
 

சம்பளத்தினை அதிகரியுங்கள்

இதே மற்றொரு பயனர் 2003 - 04ல் ஆரம்பகால சம்பளம் ஐடி நிறுவனங்களில் 2.5 - 3 லட்சம் ரூபாய் கிடைக்கும். ஆனால் இது 2022லும் 3 - 3.5 லட்சம் ரூபாய் சம்பளம் கிடைக்கும். பணவீக்கம் என்பது வருடத்திற்கு 5 - 6% ஆக உள்ளது. ஆனால் சம்பள அதிகரிப்பு அப்படி இல்லை. ஆக 2.5 லட்சம் ரூபாய் சம்பளம் என்பது, தற்போது 6.5 - 7 லட்சம் ரூபாயாக இருக்க வேண்டும். ஆக ஊழியர்களுக்கு சம்பளத்தினை அதிகரியுங்கள். அதன் பிறகு அவர்கள் ஏன் இரண்டாம் வேலை குறித்து யோசிக்க போகிறார்கள் என பதிவிட்டுள்ளார்.

சம்பளம் எப்படி?

சம்பளம் எப்படி?

மற்றொரு பயனர் மொத்த சம்பளம் என்பது பார்க்கும்போது மிக பெரியதாக தோன்றும். ஆனால் பிடித்தம் போக அது சுருங்கிவிடும் என ஒரு ஆட்டின் படத்தினை பதிவிட்டு கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

உண்மையில் இன்றும் சில நிறுவனங்கள் தங்கள் கைகளில் இருந்து செலுத்தும் பிஎஃப்-பினையும் சேர்த்து சம்பளம் அதிகம் என கூறி கொடுக்கின்றன. இது மட்டும் அல்ல, இன்சூரன்ஸ் என பலவற்றையும் ஊழியர்களே தான் பிரீமியம் செலுத்தும் நிலையில் உள்ளனர். இது பார்ப்பது சம்பளம் அதிகமாக தோன்றினாலும் இதனைச் செலுத்திய பிறகு கைக்கு கிடைக்கும் சம்பளம் குறைவாகவே இருக்கும்.

இதுவும் மூன்லைட்டிங் தான்

இதுவும் மூன்லைட்டிங் தான்

நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிகள், உயர் மட்ட அதிகாரிகள், உயர்மட்ட நபர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிகளை ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் எப்படி வகிக்க முடியும் என சில நெட்டிசன்கள் கேள்வி எழுப்பிகின்றனர். இதனையும் மூன்லைட்டிங் என கூறலாம் என விவாதம் செய்துள்ளனர்.

கூடுதல் பணத்திற்கான வாய்ப்பு

கூடுதல் பணத்திற்கான வாய்ப்பு

மூன்லைட்டிங் என்பது கூடுதல் பணம் சம்பாதிப்பதற்கான வழியாக பார்க்கப்படுகிறது. இது ஐடி துறையில் கொரோனாவின் வருகைக்கு பிறகு நிறுவனங்கள் வீட்டில் இருந்து பணி என்ற ஆப்சனை ஏற்றுக் கொண்ட பிறகு வந்துள்ளது.

டிசிஎஸ், ஐபிஎம்,இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்கள் மூன்லைட்டிங் குறித்து எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

ஐடி நிறுவனங்களின் கருத்து?

ஐடி நிறுவனங்களின் கருத்து?

விப்ரோவினை தொடர்ந்து இன்ஃபோசிஸ் நிறுவனமும் பணி நீக்கத்திற்கு வழிவகுக்கும் என எச்சரித்துள்ளது. டிசிஎஸ் குறுகிய கால பலனுக்காக நாம் இதனை செய்தால், நீண்டகால பலனை இழக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதே டெக் மகேந்திராவின் தலைமை செயல் அதிகாரி சிபி குர்னானி தங்களது வேலையில் உற்பத்தி திறன் சரியாக இருக்கும் பட்சத்தில், எங்களுக்கு இரண்டாம் தரப்பு பணி குறித்து எந்த பிரச்சனையும் இல்லை என கூறியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Why Employees Will Take Second Jobs If Paid More: A Debate on Moonlighting

Why Employees Will Take Second Jobs If Paid More: A Debate on Moonlighting
Story first published: Sunday, September 25, 2022, 12:17 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X