அந்நிய செலாவணி இருப்பு சரிவு ஏன்.. இந்தியாவுக்கு இதனால் என்ன பிரச்சனை வரலாம்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில வர்த்தக அமர்வுகளாகவே தொடர்ந்து சரிவினையே கண்டு வருகின்றது. இது நடப்பு வாரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு சரிவினைக் கண்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த வியாழக்கிழமையன்று 77.63 ரூபாயாக சரிவினைக் கண்டு இருந்தது. தொடர்ந்து இந்த வாரம் முழுக்கவே 77 ரூபாய்க்கு மேலாகவே சரிவினைக் கண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

105 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. டாடா ஸ்டீல் பங்குகள் 7% சரிவு..! 105 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. டாடா ஸ்டீல் பங்குகள் 7% சரிவு..!

பல நிபுணர்களும் இதன் மதிப்பு இன்னும் சரியலாம் என்றே எதிர்பார்க்கின்றனர். இது மேற்கொண்டு 80 ரூபாயினை தொடலாம் என மதிப்பிட்டுள்ளனர்.

 அன்னிய செலாவணி சரிவு

அன்னிய செலாவணி சரிவு

சர்வதேச நாணய நிதியம் 2029ம் நிதியாண்டில் ரூபாயின் மதிப்பானது 94 ஆக சரிவினைக் காணலாம் என மதிப்பிட்டுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் ரூபாயின் மதிப்பானது 4% சரிவினைக் கண்டுள்ளது. இதற்கிடையில் அன்னிய செலாவணி இருப்பானது செப்டம்பர் 3, 2021, இருந்து 45 பில்லியன் டாலர் சரிவினைக் கண்டுள்ளது. இது ஆல் டைம் உச்சமான 642 பில்லியன் டாலர்களாக இருந்த நிலையில், அதில் இருந்து 600 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது.

சொத்துமதிப்பு சரிவு காரணமா?

சொத்துமதிப்பு சரிவு காரணமா?

இதே ரிசர்வ் வங்கி அறிக்கையின் படி, மே 6வுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அன்னிய செலாவணி இருப்பானது, 1.774 பில்லியன் டாலர்கள் சரிவினைக் கண்டு, 595.954 பில்லியன் டாலராக சரிவினைக் கண்டுள்ளது. இது ரிசர்வ் வங்கி பொருளாதாரத்தினை ஆதரிப்பதற்காக எடுத்த நடவடிக்கையினால் இருக்கலாம் என நம்பப்படுகிறது. எனினும் ரிசர்வ் வங்கி டாலரில் வைத்திருக்கும் சொத்துகளின் மதிப்பு குறைந்துள்ளதும் ஒரு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

சொத்துகள் சரிவு
 

சொத்துகள் சரிவு

உதாரணத்திற்கு ரிசர்வ் வங்கி போர்ட்போலியோவில் உள்ள யூரோவில் இருந்தால், டாலரின் மதிப்பு அதிகரிப்பால் யூரோ மதிப்பும் சரிவினைக் காணலாம். இதன் காரணமாக அன்னிய செலாவணி இருப்பும் சரியலாம். எந்தவொரு நாணயத்தின் மதிப்பும் அதன் தேவை மற்றும் சப்ளையினால் தீர்மானிக்கிறது. ஒரு நாணயத்தின் விநியோகம் அதிகரிக்கும்போது, அதன் மதிப்பு சரிகிறது. இதே தேவை அதிகரிக்கும்போது அதன் மதிப்பு அதிகரிக்கிறது.

எண்ணெய் இறக்குமதியால் சரிவு

எண்ணெய் இறக்குமதியால் சரிவு

அன்னிய செலாவணி சந்தையில் இறக்குமதிக்கான தேவை மற்றும் பல்வேறு வெளிநாட்டு சொத்துகளின் மதிப்பால் தீர்மானிக்கப்படுகின்றது. ஆக எண்ணெய் இறக்குமதி தேவையானது அதிகரித்தால், அது ரூபாயின் மதிப்பு சரிவினைக் காண வழிவகுக்கலாம். இது அன்னிய செலவாணி கையிருப்பும் சரிய வழிவகுக்கலாம்.

டாலர் மதிப்பு ஏற்றம்

டாலர் மதிப்பு ஏற்றம்

நடப்பு ஆண்டு மார்ச் மாதம் முதல் அமெரிக்கா வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றது. இதனால் சர்வதேச முதலீட்டாளர்கள் அதிக வருமானத்தினை எதிர்பார்த்து, வளரும் நாடுகளில் இருந்து வெளியேறி வருகின்றன. இதற்கிடையில் தான் ரூபாய், யூரோ, யென் போன்ற பல கரன்சிகளின் மதிப்பானது சரிவினைக் கண்டு வருகின்றது. இதே காலகட்டத்தில் அமெரிக்க டாலரின் மதிப்பானது 8% அதிகமாக அதிகரித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Why fall in India’s foreign exchange reserves?

Foreign exchange reserves have declined amid a number of factors, including rising interest rates and the appreciation of the US dollar.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X