உலகளவில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில் பல டெக் ஜாம்வான்கள் தொடங்கி, ஸ்டார்ட் அப்கள் வரையில் பணி நீக்கம் செய்து வருகின்றன. இதன் தாக்கம் இந்தியாவிலும் இருந்து வருகின்றது. இந்தியாவிலும் ஐடி நிறுவனங்கள் தொடங்கி, ஸ்டார்ட் அப்களிலும் இது பெரிய அளவில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பன்வேறு தரப்பினரும் தங்களது கருத்துளை கூறி வரும் நிலையில், பாரத்பே-யின் இணை நிறுவனர் அஷ்னீர் குரோவரும் பணி நீக்கம் குறித்தான தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
மோசமான சந்தை காரணமாக பலரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் ஒரு நிறுவனராக நீண்டகாலம் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும்.
சம்பளத்தினை குறைக்கலாம்
பணி நீக்கம் குறித்து தனது கருத்தினை கூறிய அஷ்னீர் குரோவர், தனது லிங்க்ட் இன் பக்கத்தில், ஒவ்வொரு நாளும் பணி நீக்கம் குறித்து கேட்பது வருத்தமளிக்கிறது. மோசமான சந்தைகளின் காரணமாக நான் ஒரு போதும் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டியதில்லை. ஏனெனில் நான் எப்போதும் கவனமுடன் பணியமர்த்தினேன். ஒரு நிறுவனராக நீங்கள் நீண்டகால பிரச்சனை குறித்து யோசிக்க வேண்டும்.
சம்பள குறைப்பு செய்யலாம்
அதனையும் தாண்டி பணி நீக்கம் செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தால் நீங்கள், 25% - 40% சம்பள குறைப்பினை செய்யலாம். நிறுவனர்கள் ஏன் இதனை தேர்வு செய்வதில்லை. எனக்கு இது புரியவில்லை. பணி நீக்கத்திற்கு மாற்றாக 25 - 40% வரையிலான சம்பள குறைப்பு குறித்து சில காலத்திற்கு முன்பே பதிவிட்டிருந்தேன். நிறுவனங்கள் ஏன் அந்த பாதையில் செல்ல மறுக்கிறார்கள் என எனக்கு புரியவில்லை. எனர்ஜி, கேப்பிட்டல், டெக்னாலஜி என அனைத்துமே மறுவிலையில் கிடைக்கும்.
எனது குழுவை திரும்ப பெற்றுள்ளேன்
அவர் தனது வரவிருக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் அதிகபட்சம் 50 பேரை பணியமர்த்தியுள்ளார். தனது அணியில் சேருபவர்கள் வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறினார். மேலும் எனது குழுவை நான் திரும்ப பெற்றுள்ளேன் என தனது லிங்க்ட் இன் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
டெக் துறையில் வீழ்ச்சி
அஷ்னீர் குரோவர் மைக்ரோசாப்ட், கூகுள், மெட்டா, அமேசான், ட்விட்டர், சிஸ்கோ மற்றும் சேல்ஸ்போர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் பல ஸ்டார்ட் அப்கள் மற்றும் நிறுவனங்களும் பணி நீக்க நடவடிக்கையினை தொடங்கியுள்ள நிலையில், குரோவரின் இந்த கருத்தானது வந்துள்ளது.
விசாவில் உள்ளவர்கள் பணி நீக்கம்
இந்த பணி நீக்க நடவடிக்கையில் ஹெச்1 பி விசா மற்றும் எல் 1 விசாவினால் பெரியளவில், சுமார் 30 - 40% இந்திய ஐடி ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்விக்கி, டன்சோ, இன்மொபி, கோமெக்கானிக் உள்ளிட்ட இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பணி நீக்கம் செய்துள்ளன.
சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் தேவையானது சரிவில் காணப்படுகின்றது. இந்த காலகட்டத்தில் ஒப்பந்தங்களும் சரிவினைக் கண்டுள்ளன. இதன் காரணமாக வேலை வாய்ப்புகளும் குறைந்துள்ளன. இதற்கிடையில் தான் பணி நீக்கமும் அதிகளவில் இருந்து வருகின்றது.
சம்பளத்தினை குறைத்து கொள்ளலாம்
பணி நீக்கத்தின் மத்தியில் புதிய வேலைகளை ஊழியர்கள் தேடும் நிலையில், அவர்களுக்கு குறைவான சம்பளமே கொடுக்கப்பட்டு வருகின்றது. இது முந்தைய வேலையை விட குறைவான சம்பளமே என்ற நிலையே இருந்து வருகின்றது. ஆனால் தற்போது நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் புத்திசாலிதனமாக இருக்க வேண்டும். செலவினங்களை குறைத்துக் கொள்ளலாம். நிறுவனங்களும் ஊழியர்களை வெளியே அனுப்புவதை விட, சம்பளத்தை குறைத்து வைத்துக் கொள்ளலாம். முன்னதாக ஒரு அறிக்கையில் நிபுணர்கள் கூறுகின்றனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications