2021-22 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (ஜிடிபி) விகிதம் 9.2 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இன்று மத்தி அரசு அக்டோபர் - டிசம்பர் காலாண்டுக்கான வளர்ச்சி விகிதத்தை வெளியிட உள்ள நிலையில் வர்த்தகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஆனால் 2022ஆம் நிதியாண்டின் அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6 சதவீதமாக இருக்கும் எனக் கணிப்புகள் வெளியாகியிருக்கும் நிலையில் முதலீட்டாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி
2022ஆம் நிதியாண்டின் அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் முதல் முன்கூட்டிய மதிப்பீடுகளில் 9.2 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்ட நிலையில், தற்போது வெளியாகியுள்ள கணிப்பின் படி வெறும் 6 சதவீதம் மட்டுமே இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா தொற்று
கொரோனா தொற்றுப் பாதிப்பின் தாக்கத்தால் கடந்த சில மாதங்களில் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்தப் பாதிப்புகளை முதல் கணிப்பின் போது சேர்க்கப்படவில்லை. இதன் மூலம் 2022ஆம் நிதியாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.5 சதவீதமாக இருக்கும் எனத் தற்போதைய கணிப்புகள் கூறுகிறது.
NSO ஆய்வு
கொரோனா தொற்றின் 2வது அலைக்குப் பின்பு இந்திய வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்த வந்த காரணத்தால், ஜனவரி 31ஆம் தேதி National Statistical Office (NSO) வெளியிட்ட கணிப்பில் 2022ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 9.2 சதவீதம் வரையில் கணிக்கப்பட்டது.
ஒமிக்ரான் தொற்று
ஆனால் ஒமிக்ரான் தொற்றுக் குறைந்த காலகட்டத்தில் வேகமாகப் பரவி வந்த காரணத்தால் பண்டிகை காலம் முடிந்த பின்பும் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டது. இதேவேளையில் பணவீக்கம், விலைவாசி உயர்வு ஆகியவற்றாலும் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications