இந்தியாவில் திருமணம் என்று வந்துவிட்டாலே ஆடம்பராக தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஆழமான கருத்தாக மாறிவிட்டது. சாமானிய மக்களே இப்படி இருக்கும் போது பெரும் பணக்காரர்களை பற்றி சொல்லவா வேண்டும், சமீபத்தில் கூட முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம் பல நூறு கோடி ரூபாய் செலவில் இந்திய மக்களை மட்டும் அல்லாமல் உலக மக்களையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் இவர்களின் திருமணத்தை அம்பானி குடும்பம் நடத்தியது.
ஆனால் இந்திய பணக்காரர் பட்டியில் முகேஷ் அம்பானியின் முதல் இடத்திற்கு போட்டிப்போடும் கௌதம் அதானி தனது இளைய மகனின் திருமணத்தை மிகவும் எளிமையாக குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு மிகவும் பிரைவேட் விழாவாக நடத்தியுள்ளார்.

அகமதாபாத்தின் அதானி சாந்திகிராம் டவுன்ஷிப்பில் உள்ள பெல்வெடெர் கிளப்பில் வெள்ளிக்கிழமை மதியம் முதல் திருமண சடங்குகள் நடைபெற்றது, மாலையில் ஜீத் அதானி மற்றும் வைர வியாபாரி ஜெய்மின் ஷாவின் மகள் திவாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம் போல் ஆடம்பரமாக இல்லை என்றாலும், அதானி குடும்பம் செய்துள்ள செயல் பலரையும் பாராாட்ட வைத்துள்ளது.
தொழிலதிபர் கௌதம் அதானி தனது மகன் ஜீத் அதானியின் திருமணத்தை முன்னிட்டு ரூ.10,000 கோடி மதிப்பிலான தொகையை நன்கொடையாக அளிப்பதாக அறிவித்துள்ளார். இந்த நிதி முழுவதும் சமூக நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். ஆடம்பரமாக திருமணம் செய்துக்கொவதை விரும்பாத ஜீத் அதானி - திவா ஜெயின் ஷா ஜோடி திருமணத்திற்கு ஆகும் செலவை விடவும் அதிக தொகையை நன்கொடையாக அளிக்க முடிவு செய்து இந்த அறிவிப்பை அதானி குடும்பம் அறிவித்துள்ளது.
இந்த 10000 கோடி நிதியானது சுகாதாரம், கல்வி மற்றும் திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் பெரிய அளவிலான கட்டமைப்பு திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. அனைத்து தரப்பினரும் பெறக்கூடிய வகையில் தரமான மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதற்கு இந்த நிதி முக்கியமாக பயன்படுத்தப்படும் என கௌதம் அதானி தனது குடும்பத்தின் சார்பாக தெரிவித்துக்கொண்டார்.
மேலும், இந்த நிதியை பயன்படுத்தி தரமான கல்வி வாய்ப்புகளை வழங்கும் வகையில், தரமான K-12 பள்ளிகள் நிறுவப்படும். வேலைவாய்ப்பு உறுதி செய்யும் வகையில், மேம்பட்ட உலகத்தரம் வாய்ந்த திறன் மேம்பாட்டு அகாடமிகள் நிறுவப்படும் என்றும் அதானி குடும்பத்தின் சார்பாக ஜீத் அதானி மற்றும் திவா ஜெயின் ஷா-வின் திருமணத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டு உள்ளது.
திருமணத்திற்கு முன்னதாகவே, ஜீத் அதானி மற்றும் திவா ஜெயின் ஷா ஆகியோர் சமூக பொறுப்புணர்வுடன் செயல்பட்டு, ஆண்டுக்கு 500 மாற்றுத்திறனாளி பெண்களின் திருமணத்திற்கு ரூ.10 லட்சம் வீதம் நிதி உதவி அளிப்பதாக அறிவித்தனர். ஜீத் அதானி தனது திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு 21 புதுமண தம்பதிகளை சந்தித்து இந்த திட்டத்தை அறிவித்தார்.


Click it and Unblock the Notifications