இந்திய நுகர்வோர் சந்தையில் பெரும் ஆதிக்கத்தை கொண்டிருக்கும் அதானி வில்மார் நிறுவனத்தில் இருக்கும் பங்குகளை விற்பனை செய்யும் முயற்சியில் கௌதம் அதானி தலைமையிலான அதானி எண்டர்பிரைசர்ஸ் திட்டமிட்டு இதற்கான பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனை துவங்கியுள்ளது.
இந்த அறிவிப்பு வெளியான உடனேயே அதானி வில்மார் பங்குகள் மளமளவென சரிய துவங்கியது. இன்று காலையில் இருந்து தொடர் சரிவு பாதையில் இருக்கும் அதானி வில்மார் பங்குகள் அதிகப்படியாக 5 சதவீதம் வரையில் சரிந்தது. இதன் மூலம் ஒரு பங்கு விலை 374.00 ரூபாய்க்கு வந்தது, இந்நிறுவனத்தின் 52 வார குறைவான விலை 327.00 ரூபாய்.

2023 ஆம் ஆண்டில் அதானி வில்மார் பங்குகள் 37.49 சதவீத சரிவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதானி வில்மார் மட்டும் அல்லாமல் பெரும்பாலான அதானி பங்குகள் அதிகப்படியான சரிவை பதிவு செய்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம் ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை தான்.
ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை வாயிலாக அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு சுமார் 150 பில்லியன் டாலர் இழப்பை எதிர்கொண்டது. இந்த இழப்பில் இருந்து மீண்டு வர அதானி குழுமம் பல மறுசீரமைப்பு பணிகளை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தான் சில நாட்களுக்கு முன்பு Adani Capital, Adani Housing மொத்தமாக பெயின் கேப்பிடல் நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக தனக்கு அதிக வர்த்தக வாய்ப்பு கொண்ட சிமெண்ட் துறையில் பெறும் தொகையை முதலீடு செய்து சங்கி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் பெரும் பங்குகளை வாங்கினார். இதை தொடர்ந்து மீண்டும் மறுசிரமைப்பு பணியில் இறங்கிய கௌதம் அதானி 2023ல் பெரும் சரிவை கொடுத்த அதானி வில்மார் நிறுவன பங்குகளை விற்பனை செய்யும் முயற்சியை கையில் எடுக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் சமையல் எண்ணெய் விற்பனையில் இறங்குவதற்காக அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் மற்றும் சிங்கப்பூர் வில்மர் இன்டர்நேஷனல் லிமிடெட் இணைந்து உருவாக்கிய ஒரு நிறுவனம் தான் அதானி வில்மார். இக்கூட்டணி நிறுவனத்தில் அதானி மற்றும் வில்மார் தலா 44 சதவீத பங்குகளை கொண்டு உள்ளது.
அதானி வில்மார் நிறுவனத்தின் 44 சதவீத பங்குகளை Adani Commodities LLP என்ற நிறுவனம் வைத்துள்ளது, ஜூன் 30 முடிவில் அதானி வில்மார்-ன் 43.97 சதவீதம் பங்குகள் சுமார் 57,14,74,430 பங்குகளை வைத்துள்ளது. இந்த Adani Commodities LLP நிறுவனத்தின் 99.99 சதவீத பங்குகளை அதானி எண்டர்பிரைசர்ஸ் வைத்துள்ளது. Adani Commodities LLP நிறுவனத்தின் முழு பங்கு இருப்பும் கௌதம் அதானி, ராஜேஷ் அதானி, வினோத் அதானி ஆகியோருக்கு சொந்தமானது.
அதானி வில்மார் நிறுவனம் தற்போது 6 பில்லியன் டாலருக்கு மதிப்பிடப்படும் வேளையில் அதானி கட்டுப்பாட்டில் இருக்கும் 44% பங்குகள் சுமார் 2.7 பில்லியன் டாலர் மதிப்பிடப்படுகிறது. கௌதம் அதானி மற்றும் குடும்பம் மொத்தமாக 44 சதவீத பங்குகளையும் விற்கலாம் அல்லது சிறு அளவிலான பங்குகளை வைத்திருக்கவும் வாய்ப்புகள் உள்ளது.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அதானி வில்மார் ஐபிஓ வெளியிட்டு 18 மாதங்கள் மட்டுமே ஆகியுள்ளது. கௌதம் அதானியின் இத்தகைய மறுசீரமைப்பு நடவடிக்கை மூலம் இக்குழுமத்தின் கோர் வர்த்தகம் வலிமையாவது மட்டும் அல்லாமல் விற்பனை மூலம் திரட்டப்படும் நிதி கடன் சுமை குறைக்கவும், கடனுக்கான வட்டியை செலுத்தவும் பயன்படுத்தப்பட்டு நிதியியல் அளவில் மேம்படுத்தப்படும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications