வாழ்க்கையை எதிர்கொள்வது, எதிர்காலத்தை திட்டமிடுவது, வேலைக்கு செல்வது ஆகியவை ஒவ்வொரு தலைமுறைக்கும் மாற்றம் கண்டு வருகின்றன. அந்த வகையில் GEN Z தலைமுறையினர் வேலை என வரும் போது முதலில் பார்ப்பது நல்ல ஊதியமும், பதவி உயர்வும் தான் ஆய்வில் தெரியவந்துள்ளது.
அப்படி இருந்தும் பெரும்பாலான GEN Z தலைமுறையினருக்கு அவர்கள் செய்யும் வேலைகளில் திருப்தி இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.

GEN Z என்றால் யார்: 1997 ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் பிறந்தவர்கள் தான் GEN Z தலைமுறையினர் என அழைக்கிறோம். இவர்கள் பெரும்பாலும் 11 முதல் 26 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கின்றனர்.
இன்றைய வர்த்தக சந்தையை தீர்மானிக்கும் முக்கிய சக்தி இவர்களிடம் தான் உள்ளது, இதனால் ஒட்டுமொத்த உலகமும் இவர்களை சுற்றி தான் இயங்குகிறது. இதேவேளையில் இவர்களின் வாழ்க்கை முறை பொருளாதார வளர்ச்சிக்கு புதிய வேகத்தை கொடுத்தாலும், பல பிரச்சனைகளையும் கொண்டு வருகிறது.
நவீன தொழில்நுட்பங்களோடு சேர்ந்து வளர்ந்தவர்கள் என்பதால் இந்த தலைமுறையினரின் வாழ்க்கை எதிர்பார்ப்புகள் முந்தைய தலைமுறையினரை விட முற்றிலும் மாறுபட்டிருக்கின்றன.
சம்பளத்துக்கு தான் முன்னுரிமை: படித்து முடித்து வேலைக்கு என வரும் போது GEN Z தலைமுறையினர் இரண்டு விஷயங்களுக்கு தான் முன்னுரிமை கொடுக்கின்றனர் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நல்ல சம்பளம் மற்றும் வேலையில் அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும். கூடிய விரைவில் சம்பள உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கும் GEN Z தலைமுறையினரில் 66 விழுக்காட்டினர் தாங்கள் செய்யும் வேலைகள் குறித்து அதிருப்தி தெரிவிக்கின்றனர் என அமெரிக்காவில் நடந்த ஆய்வு தெரிவிக்கிறது.
அடிக்கடி நிறுவனங்கள் மாறும் போக்கு: GEN Z தலைமுறையினரில் பெரும்பாலானவர்கள் தாங்கள் பணி நிறுவனத்தின் மீது நம்பிக்கை அற்றவர்களாக இருக்கின்றனர். இதன் காரணமாக அடிக்கடி நிறுவனங்களை மாற்றி கொள்கின்றனர் என்கிறது ஆய்வின் முடிவு.
இந்த துறையில் அனுபவம் கிடைக்க வேண்டும், மனதிற்கு பிடித்த வேலை, மனதிற்கு பிடித்த இடம் இவை எல்லாம் முந்தைய தலைமுறையோடு சென்றுவிட்டது. நல்ல ஊதியம் தந்தால் வேலை செய்வேன், இல்லையெனில் வேறு நிறுவனத்திகு சென்று விடுவேன் என்பதுதான் பெரும்பாலானவர்களின் பதிலாக இருந்தது என ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது.
முந்தைய தலைமுறையினர் பலன்களை எதிர்பார்க்க மாட்டார்கள், நல்ல முறையில் வேலை செய்து முடித்தாலே திருப்தி அடைவர், ஆனால் GEN Z தலைமுறையினர் செய்த வேலைக்கு பலன் இல்லையெனில் அதிருப்தி அடைகின்றனர் என தெரிய வந்துள்ளது.
ஓராண்டிலேயே பதவி உயர்வுக்கு எதிர்பார்ப்பு: ஒரே நிறுவனத்தில் நீண்ட நாள் பணி செய்தால் பதவியும் பாராட்டும் கிடைக்கும் என்பதெல்லாம் அந்த காலம், தற்போதுள்ள தலைமுறையினர் நீண்ட காலம் ஒரே நிறுவனத்தில் இருந்தால் வளர்ச்சி இருக்காது என நினைக்கிறார்களாம்.
வேலை தேடும் போது எந்த காரணியை முன்னிலைப்படுத்துகிறீர்கள் என்ற கேள்விக்கு 62 விழுக்காட்டினர் ஊதியம் என பதில் அளித்துள்ளனர் என ஆய்வு தெரிவிக்கிறது. ஓராண்டிலேயே பதவி உயர்வு வேண்டும் என்றும் அடிக்கடி வேலை மாற வேண்டும் என்றும் 82 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
செலவுகள் அதிகமாக இருப்பதே GEN Z தலைமுறையினர் ஊதியத்தின் மீது அதிக கவனம் செலுத்த காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள். இவர்கள் நிதி பாதுகாப்பின்மையை அடிக்கடி எதிர்கொள்வதாலேயே இந்த நிலை நீடிக்கிறது, ஆனால் எதிர்காலத்தில் இது மாற்றமடையும் என்கின்றனர்.
Story written by: Devika Manivannan
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications