Tier - II ஐடி நிறுவனங்களுக்கு காத்திருக்கும் சவால்கள்.. ஊழியர்களே கவனமா இருங்க!

கடந்த ஆண்டில் அல்லது நடப்பு ஆண்டில் இதுவரையில் டயர் 2 ஐடி சேவை நிறுவனங்கள், முன்னணி ஐடி நிறுவனங்களை விட நல்ல வளர்ச்சியினை கண்டு வருகின்றன.

குறிப்பாக எல் & டி இன்ஃபோடெக், மைண்ட் ட்ரீ மற்றும் எம்பஸிஸ் உள்ளிட்ட நிறுவனங்கள், டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல் டெக் மற்றும் டெக் மகேந்திரா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களை விட நல்ல வளர்ச்சியினை வேகமாக கண்டு வருகின்றன.

இந்த இரு குழுக்களுக்கான வருவாய் இடைவெளியானது குறைந்துள்ளது. முன்னணி நிறுவனங்களின் வளர்ச்சி தற்போது சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் குறைந்திருக்கலாம். இது மேற்கொண்டு மந்தமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐடி துறையில் வங்கி துறையின் பங்கு

ஐடி துறையில் வங்கி துறையின் பங்கு

சர்வதேச சந்தையில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் ஐடி துறையில் தேவையானது குறைந்து வருகின்றது. இதற்கிடையில் இந்திய ஐடி துறைக்கான அவுட்சோர்ஸிங் பணியும் குறைந்து வருகின்றது, உதாரணத்திற்கு அமெரிக்க வங்கி துறையை எடுத்துக் கொள்ளலாம். இரண்டாவது காலாண்டில் அமெரிக்க வங்கித் துறையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்திய ஐடி துறையில் வங்கி துறையின் பங்கு 30% ஆகும்.

ஐடி செலவுகள் குறையலாம்

ஐடி செலவுகள் குறையலாம்

மொத்தத்தில் செப்டம்பர் காலாண்டிலும் வங்கித் துறையின் வளர்ச்சி விகிதமானது சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பாவிலும் வளர்ச்சி விகிதம் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக வணிக சூழ்நிலையானது சற்று கடினமான சூழ்நிலையில் , 2022 மற்றும் 2023ல் சர்வதேச அளவில் ஐடி சேவைக்கான செலவினங்கள் குறையலாம் என கார்ட்னர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முன்னணி நிறுவனங்கள் Vs டயர் 2 நிறுவனங்கள்

முன்னணி நிறுவனங்கள் Vs டயர் 2 நிறுவனங்கள்

டயர் 2 நிறுவனங்கள் குறைந்த அடித்தளம் காரணமாக தங்கள் பெரிய போட்டியாளர்களை விஞ்சலாம். எனினும் முன்னணி நிறுவனங்களை போல பல இருக்க முடியாது. ஏனெனில் அவை பன்முகத்தன்மை கொண்டவை. ஏற்கனவே பல வாடிக்கையாளர்கள் உள்ளனர். அவர்களிடம் இருந்தும் புதிய வணிகத்தினை பெற முடியும். மேலும் நிதி நிலையும் ஆரோக்கியமானதாக உள்ளது. மார்ஜின் நன்றாக இருந்து வருகின்றது. ஆக அவர்கள் புதிய ஒப்பந்தங்களை நிர்வகிக்க முடியும். இதனால் உற்பத்தி திறனும் அதிகரிக்கலாம்.

எபிட்டா மார்ஜின்

எபிட்டா மார்ஜின்

கடந்த சில காலாண்டுகளாகவே தொடர்ந்து முன்னணி நிறுவனங்களின் எபிட்டா விகிதம் தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது. டயர் 1 நிறுவனங்களின் எபிட்டா மார்ஜின் சராசரியாக 1.7% சரிவினைக் கண்டுள்ள நிலையில், டயர் 2 நிறுவனங்களின் சராசரி மார்ஜின் விகிதமானது 1.1% ஆக சரிவினைக் கண்டுள்ளது. எனினும் டயர் 1 நிறுவனங்கள் பெரிய பின்னணியினை கொண்டுள்ளன. ஆக சரிவினைக் கண்டாலும் கூட, அதனை எளிதில் எதிர்கொள்ளலாம்.

 மார்ஜினில் தாக்கம்

மார்ஜினில் தாக்கம்

2021 - 22ல் ஐடி நிறுவனங்கள் அதிகளவிலான பிரெஷ்ஷர்களை பணியமர்த்தின. அதேசமயம் அதன் பயன்பாட்டு விகிதங்கள் குறைந்துள்ளதால் அழுத்தத்தினை கண்டுள்ளன. இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பயன்பாட்டு விகிதம் 84.7% ஆக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டு 88.5% ஆக இருந்தது. இதே மைண்ட் ட்ரீ நிறுவனத்தின் பயன்பாட்டு விகிதமானது 81.1% ஆக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டு 83.2% ஆக குறைந்துள்ளது. எனினும் நிறுவனங்கள் சம்பள உயர்வினைக் கொடுத்துள்ளன. இதன் காரணமாக மார்ஜினில் தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அட்ரிஷன் விகிதம்

அட்ரிஷன் விகிதம்

தொடர்ந்து அதிகரித்துள்ள அட்ரிஷன் விகிதமானது மார்ஜினில் மேற்கோண்டு தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து ஊழியர்கள் வெளியேறி வரும் நிலையில், அதுவும் நிறுவனங்களின் செயல்பாட்டில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. நிறுவனங்கள் பணியமர்த்தலுக்கான செலவினங்களை அதிகரிக்க இது வழிவகுத்தது. இது தொடர்ந்து 5வது காலாண்டாக 20% மேலாக இருந்து வந்தது. இது செப்டம்பர் காலாண்டில் 1.3% குறைந்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்து இன்ஃபோசிஸ் நிறுவனத்தின்cfo நிலஞ்சன் ராய் தொடர்ந்து ஊழியர்கள் வெளியேறிய விகிதமானது, செலவினை அதிகரிக்க வழிவகுத்ததாக தெரிவித்துள்ளார்.

பணியமர்த்தல் அதிகரிப்பு

பணியமர்த்தல் அதிகரிப்பு

டாப் 5 நிறுவனங்களின் சராசரி அட்ரிஷன் விகிதம் ஜூன் காலாண்டில் 23.4% ஆக இருந்தது.. இது முந்தைய ஆண்டினை காட்டிலும் 13% அதிகரித்துள்ளது. இதே டயர் 2 நிறுவனங்களில் 25.1% ஆக அதிகரித்துள்ளது. இது முன்னதாக 16.1% ஆக இருந்தது. இதனை தொடர்ந்து தான் ஐடி நிறுவனங்கள் வரலாறு காணாத அளவு பணியமர்த்தலை செய்துள்ளன. டிசிஎஸ் நிறுவனம் கடந்த 5 காலாண்டுகளில் 1,17,000 ஊழியர்களை பணியமர்த்தியுள்ளது. இதே இன்ஃபோசிஸ் 75,000 பேரை பணியமர்த்தல் செய்துள்ளது.

உற்பத்தி திறன் எப்படி?

உற்பத்தி திறன் எப்படி?

இதற்கிடையில் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது டாப் 5 நிறுவனங்களின் ஊழியர்களின் உற்பத்தி திறனும் சரிவினைக் கண்டுள்ளன. முன்னணி நிறுவனங்களை காட்டிலும் டயர் 2 நிறுவனங்களின் உற்பத்தி திறன் வெகுவாக குறைந்துள்ளது. இது மேற்கோண்டு மார்ஜினில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+