சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் பொருளாதாரம் சரிவினைக் காணலாமோ என்ற அச்சம் இருந்து வருகின்றது. இதற்கிடையில் பல்வேறு ஆய்வு நிறுவனங்களும் ஜிடிபி குறித்த கணிப்பினை கீழ் நோக்கி திருத்தம் செய்து வருகின்றன.
பல டெக் நிறுவனங்களில் பங்குகள் மோசமான சரிவினைக் கண்டு வருகின்றன. பல டெக் நிறுவனங்களின் வருவாய் விகிதம் சரிவினைக் கண்டு வருகின்றன. டிஜிட்டல் உலகில் விளம்பரம் மூலம் கிடைக்கும் வருவாய் விகிதமானது சரிவினை கண்டு வரும் நிலையில், பலருக்கும் வருவாயில் வீழ்ச்சியினை கண்டு வருவதாக தெரிவித்துள்ளன.
இதில் உலகின் டெக் ஜாம்பவான்கள் என்று அழைக்கப்படும் மைக்ரோசாப்ட் மற்றும் ஆல்பாஃபெட், மெட்டா உள்ளிட்ட நிறுவனங்களும் அடங்கும்.
வட்டி அதிகரிக்கலாம்
இதனால் ஏற்கனவே இவற்றின் பங்கு விலையானது வால் ஸ்ட்ரீட்டில் சரியத் தொடங்கியுள்ளது. இதற்கிடையில் தற்போது சர்வதேச அளவில் பல நாடுகளில் ரெசசன் அச்சம் நிலவி வருகின்றது. இதன் காரணமாக பொருளாதாரம் சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து பணவீக்கத்தினை கட்டுப்படுத்த மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றன.
வளர்ச்சி சரிவடையலாம்
இதன் காரணமாக பொருளாதாரம் மேற்கொண்டு அழுத்தத்தினை காணலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது தேவையை குறைக்கலாம். இதனால் நிறுவனங்களின் வளர்ச்சியானது சரிவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதத்தினை 4.5% மேலாக அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக நிறுவனங்களின் செலவினங்கள் மேற்கோண்டு அதிகரிக்கலாம் என் எதிர்பார்க்கப்படுகிறது.
கோல்ட்மேன் கணிப்பு
வங்கிகளின் வட்டி அதிகரிப்பால் ஊழியர்கள் சந்தையிலும் இது தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இந்த தாக்கத்தில் இருந்து பொருளாதாரம் வெளியேறுவது கடினம் என நிபுணர்கள் கணித்துள்ளனர். இதற்கிடையில் தான் கோல்ட்மேன் ஆய்வு நிறுவனம் 2888 ஆக சரியலாம் என்று எதிர்பார்க்கின்றாது. இது சுமார் 25% சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கிறது.
சந்தைகள் வலுவாக இல்லை
இந்த வாரத் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட ஆய்வின் படி, அமெரிக்கா பங்கு சந்தைகள் அவ்வளவாக வலுவாக இல்லை. இயல்பு நிலைக்கான அறிகுறியானது இன்னும் தெளிவாக தெரியவில்லை என்று இந்த வாரத் தொடக்கத்தில் ஒர் ஆய்வானது தெரிவித்துள்ளது.
வட்டி அதிகரிக்கலாம்
நவம்பர் மற்றும் டிசம்பரில் ஃபெடரல் விகிதங்கள் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அடுத்த ஆண்டிலும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க மத்திய வங்கியானது பணவீக்கத்தினை 2% அருகில் குறைக்கும் வரையில், கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என முன்னதாக கூறியிருந்தது. இது மேற்கொண்டு கடுமையான நடவடிக்கைக்கு வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பணவீக்கம் எதிர்பார்ப்பு
பணவீக்கம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 6% ஆக இருக்கும் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். இது கடன்களுக்கான வட்டி விகிதத்தினை அதிகரிக்க வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பணப்புழக்கத்தினை குறைக்கலாம். இது கடனை வாங்குவதை குறைக்க வழிவகுக்கலாம்.
தாக்கம் இருக்கலாம்
அடமானம் மற்றும் கிரெடிட் கார்டு கடனுக்கு வாங்கினால் அதிக பணம் செலவாகும். மக்கள் செலவழிப்பது குறையும். வருமானம் குறைவாக இருக்கும். மக்கள் குறைந்த பணத்தை செலவழிக்கும்போது, குறைவான தேவை உள்ளது. குறைவான தேவையானது பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
More From GoodReturns

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications