பிரிட்டன்: உலகிலேயே மிகவும் பிரபலமானதேடுபொறியாக கூகுள் செயல்பட்டு வருகிறது. இந்த கூகுள் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்து பிரிட்டனை சேர்ந்த ஒரு தம்பதி 21,000 கோடி ரூபாய் நஷ்ட ஈடு பெற்றுள்ளனர்.
சிவான் மற்றும் ஆடம் ரேஃப் தம்பதி பிரிட்டனில் வசித்து வருகின்றனர். 2006 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் இணைந்து பவுண்டேம்(Foundem) என்ற ஒரு இணையதளத்தை தொடங்கினர். ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்களுக்கு ஒரே பொருளுக்கான விலைகளை பல்வேறு தளங்களில் இருந்து தேர்வு செய்து ஒப்பீடு செய்வதற்கான வாய்ப்பினை வழங்குவது தான் இந்த இணையதளத்தின் நோக்கம். 2006 ஆம் ஆண்டு பவுண்டேம் இணையதளம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது .

ஆனால் திடீரென கூகுள் நிறுவனம் சர்ச் ரிசல்ட்டுகளில் இருந்து பவுண்டேம் இணையதளத்தை நீக்கியது. எனவே பவுண்டேம் இணையதளம் கூகுள் சர்ச்சில் காட்டப்படவில்லை. பொதுவாக இணையதளத்தை மக்கள் எத்தனை முறை கிளிக் செய்கிறார்களோ அதன் அடிப்படையில் தான் வருமானம் கிடைக்கும்.
கூகுளின் இந்த நடவடிக்கை காரணமாக தங்களுடைய இணையதளம் தேடு பொறியில் ரேங்க் ஆகவில்லை என்றும் முதலில் இது ஒரு தொழில்நுட்பக் கோளாறாக இருக்கும் என கருதியாகவும் இந்த தம்பதியினர் கூறுகின்றனர்.
கூகுள் நிறுவனத்தை நாடியதாகவும் இரண்டு ஆண்டுகளாக கூகுள் நிறுவனம் இதற்கு எந்த ஒரு தீர்வையும் வழங்கவில்லை என்றும் தெரிவிக்கின்றனர். ஆனால் மற்ற தேடுபொறிகளில் தங்களுடைய இணையதளம் காட்டுவதை உறுதி செய்த இந்த தம்பதி,உலக அளவில் பலரும் பயன்படுத்தக்கூடிய ஒரு தேடுபொறி என்றால் அது கூகுள் தான் இந்த கூகுளில் தங்களுடைய இணையதளம் ரேங்க் ஆகவில்லை என்றால் நிச்சயமாக தங்களுக்கு லாபம் கிடைக்காது என்பதை உணர்ந்தனர்.
அடுத்தடுத்து பலமுறை கூகுள் நிறுவனத்தை நாடி தங்களுடைய இணையதளத்தை அவர்களின் தேடுபொறியில் வர வைப்பதற்காக போராடியுள்ளனர். இருந்தாலும் அவர்களது போராட்டம் வெற்றி பெறவில்லை எனவே அமெரிக்கா பிரிட்டன் மற்றும் பிரச்சல்ஸ்ஆகிய பகுதிகளில் உள்ள ஒழுங்குமுறை அமைப்புகளிடம் மனு தாக்கல் செய்தனர். தொடர்ச்சியாக இவர்கள் மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக 2010 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஆணையம் இந்த விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிட்டது.
2017 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஆணையம் கூகுள் நிறுவனம் இந்த தம்பதிக்கு 21, 800 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியது. ஆனால் இந்த தீர்ப்பை ஏற்றுக் கொள்ளாத கூகுள் நிறுவனம் தொடர்ந்து இந்த தீர்ப்புக்கு எதிராக சட்ட போராட்டம் நடத்தியது. இந்த தம்பதியும் விடாமல் நீதிமன்றங்களுக்கு சென்று தங்கள் தரப்பை முன் வைத்தனர்.
தற்போது ஐரோப்பிய மேல்முறையீட்டு நீதிமன்றமும் கூகுளின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து விட்டது. எனவே கூகுள் நிறுவனம் இந்த தம்பதிக்கு 21,000 கோடியை நஷ்ட ஈடாக வழங்கிய ஆக வேண்டும் என அறிவித்துள்ளது. பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் தேடு பொறி என்பதை பயன்படுத்தி வளர்ந்து வரும் நிறுவனத்தை முடக்கியது தவறு என நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications