டெல்லி: அமெரிக்காவை சேர்ந்த முன்னணி டெக் நிறுவனங்களின் கவனம் தற்போது இந்தியாவின் மீது விழ தொடங்கி இருக்கிறது. பல்வேறு அமெரிக்க டெக் நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றன.
கூகுளை தொடர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனமும் இந்தியாவில் ஏஐ பிரிவில் முதலீடு செய்வதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது . ஆசியாவிலேயே இதுவரை இல்லாத வகையில் இந்தியாவில் 1.57 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்ய போகிறோம் என மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லா கூறியிருக்கிறார்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சத்ய நாதெல்லா இந்தியாவிற்கு வருகை தந்திருக்கிறார். அவர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது இந்தியாவில் ஏஐ வாய்ப்புகள் குறித்து, பிரதமர் மோடியுடன் ஆக்கப்பூர்வமாக கலந்துரையாடியதாக சத்ய நாதெல்லா தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஏஐ லட்சியங்களை ஆதரிக்க ஆசியாவிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய முதலீடாக 1.57 லட்சம் கோடி ரூபாயை இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப எதிர்காலத்துக்கு தேவையான உள்கட்டமைப்பு திறன்கள் உள்ளிட்டவற்றை உருவாக்குவதற்காக முதலீடு செய்ய மைக்ரோசாப்ட் நிறுவனம் உறுதிப்பூண்டுள்ளது என சத்ய நாதெல்லா தன்னுடைய அறிக்கையில் தெரிவித்திருக்கிறார் .
செயற்கை நுண்ணறிவு துறையை பொறுத்தவரை இந்தியா மீது உலக நாடுகள் நம்பிக்கையுடன் உள்ளன என பெருமிதம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறார்.
முன்னதாக கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் 15 பில்லியன் டாலர்கள் முதலீட்டில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மிகப்பெரிய ஏஐ டேட்டா மையத்தை நிறுவுவதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அமெரிக்காவுக்கு வெளியே கூகுள் அமைக்கும் மிகப்பெரிய டேட்டா மையம் இதுவாகும். இந்த சூழலில் மைக்ரோசாப்ட் நிறுவனம் 17.5 பில்லியன் டாலரை இந்தியாவில் முதலீடு செய்வதாக தற்போது அறிவித்திருக்கிறது.

முன்னதாக இண்டெல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி Lip-bu Tan பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது நாட்டின் செமி கண்டக்டர் உற்பத்தி பிரிவில் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்வதாகவும் அவர் வாக்குறுதி தந்தார். இது தொடர்பாக டாடா குழுமத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் இன்டெல் நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது.
அதே போல காக்னிசண்ட் தலைமை அதிகாரிகளும் பிரதமர் மோடியை சந்தித்து இந்தியாவின் பல்வேறு பிரிவுகளிலும் ஏஐ தொழில்நுட்பத்தை அமல் படுத்துவதில் தங்களுடைய பங்களிப்பு குறித்து வாக்குறுதி தந்தனர் . அமெரிக்க டெக் நிறுவனங்கள் இந்தியாவை ஒரு சந்தையாக மட்டுமே பார்த்த காலம் மாறி தற்போது தங்களின் முக்கியமான டெக் மையமாக மாற்ற முன் வந்துள்ளது.
கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பெரிய டெக் நிறுவனங்களின் நீண்ட கால திட்டமிடலில் இந்தியாவுக்கு முக்கிய இடம் உள்ளது இதன் மூலம் தெரிய வருகிறது. அந்த வகையில் ஏஐ மையமாகவும் , கிளவுட் உள்கட்டமைப்பு, டேட்டா மையம், செமி கண்டக்டர் மையமாகவும் இந்தியா மாற உள்ளது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தனலட்சுமி DL-47 லாட்டரி முடிவுகள் வெளியீடு: யாருக்கெல்லாம் ஜாக்பாட் கிடைத்தது?

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!



Click it and Unblock the Notifications