பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்காவுக்கான முதல் அரசு பயணம் மிகவும் முக்கியமானதாக அமைந்தது. இப்பயணத்தில் நியூயார்க், வாஷிங்டன் ஆகிய இரு நகரங்களுக்கு சென்று பல முக்கிய தலைவர்களையும், அரசு அதிகாரிகளையும் சந்தித்தார்.
இந்த பயணத்தில் மோடி - ஜோ பைடன் சந்திப்பும், அவர்களுடைய டின்னர் விருந்து மிகவும் முக்கியமானதாக பார்க்கப்பட்ட நிலையில் அமெரிக்க பயணத்தின் இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி பல தொழிலதிபர்களை சந்தித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியை 23 ஆம் தேதி சுந்தர் பிச்சை நேரில் சந்தித்து பேசியதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூகுள் விரைவில் குஜராத் GIFT CITY-யில் குளோபல் பின்டெக் ஆப்ரேஷன் சென்டரை துவங்க உள்ளதாக அறிவித்தார். இது குஜராத்-க்கு மட்டும் அல்லாமல் இந்தியாவுக்கும் முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது. எதற்காக இப்புதிய பின்டெக் ஆப்ரேஷன் சென்டர்..? சுந்தர் பிச்சை திட்டம் என்ன..?
சுந்தர் பிச்சை செய்தியாளர்களிடம் பேசிய போது, கூகுள் குஜராத் GIFT CITY-யில் குளோபல் பின்டெக் ஆப்ரேஷன் சென்டரை துவங்க உள்ளதாகவும், இதன் மூலம் பின்டெக் பிரிவில் இந்தியாவின் தலைமைதுவத்தை உறுதியாக்கும் என அறிவித்தார். இதற்கு முக்கிய காரணம் UPI மற்றும் ஆதார் செய்ய புரட்சி அதற்கு நன்றி..
இந்த குஜராத் GIFT CITY-யில் குளோபல் பின்டெக் ஆப்ரேஷன் சென்டர் மூலம் UPI மற்றும் ஆதார் கட்டமைப்பில் மேம்பட்ட சேவையை உருவாக்கி உலகளவில் கொண்டு செய்ய திட்டமிட்டு உள்ளோம் என தெரிவித்துள்ளார். இந்த பாதையின் வளர்ச்சியை காண மிகவும் ஆர்வமாக உள்ளது, இதோடு AI துணையுடன் இந்தியா வேகமாக வளர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளர்.

இந்தியாவில் இந்திய அரசால் உருவாக்கப்பட்ட UPI தற்போது உலக நாடுகளுக்கு சென்று வரும் வேளையில் கூகுள் இதே வேகப்படுத்த உள்ளதாக தெரிகிறது. கூகுள் நிர்வாகம் UPI தளத்தை வைத்து எப்படி தனது சேவையை உருவாக்கப்போகிறது என்பது தெரியவில்லை, கூகுள் போன்ற நிறுவனம் இதில் இணையும் பட்சத்தில் உலகளவிலான நிதிபரிமாற்றத்தை UPI வாயிலாக செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் அமெரிக்க மற்றும் இந்திய வணிகத் தலைவர்களை சந்தித்தனர். பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்தில் மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படும் வேளையில் இந்த முக்கிய நிகழ்ச்சிக்கு பல முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் முக்கியமாக மைக்ரோசாப்ட் சிஇஓ சத்ய நாடெல்லா, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, ஜெரோதா & ட்ரூ பீக்கன் இணை நிறுவனர் நிகில் காமத், OpenAI நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications