கூகுள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு கடந்த வாரம் ஒரே நாளில் 200 பில்லியன் டாலருக்கும் அதிகமாக குறைந்துள்ளது. கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் சந்தை மூலதன மதிப்பு ஒரே நாளில் 211 பில்லியன் டாலர்கள் குறைந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி அன்று அமெரிக்க பங்குச்சந்தையான நாஸ்டாக்கில் கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் பங்கு மதிப்பு திடீரென சரிவை சந்தித்தது. கூகுள் நிறுவனத்தின் காலாண்டு நிதி விவரங்கள் வெளியானதை அடுத்து இந்த சரிவு ஏற்பட்டது.

ஒரே நாளில் பங்கு மதிப்பு 8% வரை குறைந்தது, இதனால் இந்த நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பும் 211 பில்லியன் டாலர் குறைந்தது. இதன் மூலம் 207 டாலருக்கு வர்த்தகமான ஆல்பபெட் பங்குகள் தற்போது 187.14 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு பிறகு முதல் முறையாக கூகுள் நிறுவனத்தின் பங்கு மதிப்பு பெரிய அளவிலான சரிவை சந்தித்திருக்கிறது. இதுவரை கூகுள் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு மற்றும் பங்கு விலை ஒரே நாளில் இவ்வளவு அதிகமாக சரிந்தது இதுவே முதல்முறை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூகுள் நிறுவனத்தின் கடைசி காலாண்டு வருமானம் 96.47 பில்லியன் டாலர்களாக இருக்கிறது இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 12 சதவீதம் அதிகம். ஆனால் பங்குச்சந்தை நிபுணர்கள் கணித்த அளவை இந்த நிறுவனத்தின் வருமானம் எட்டவில்ல. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் கூகுள் நிறுவன பங்குகளை விற்பனை செய்ய தொடங்கினர். இதுவே பங்கு மதிப்பு சரிவடைவதற்கு காரணமாக சொல்லப்பட்டது.
அதேபோல கூகுள் நிறுவனம் தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த பணிகளுக்கு அதிக தொகையை முதலீடு செய்து வருகிறது. இந்த ஆண்டு 58 டாலர்கள் வரை கூகுள் நிறுவனம் ஏஐ சார்ந்த ஆய்வுகளுக்கு முதலீடு செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 75 பில்லியன் டாலர்களை மூலதன செலவினமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களுக்கு நாங்கள் பயன்படுத்த போகிறோம் என சுந்தர் பிச்சை அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுவும் முதலீட்டாளர்கள் தங்களுடைய பணத்தை திரும்ப பெற்றதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.
ஏனெனில் இதற்கு முந்தைய ஆண்டில் கூகுள் நிறுவனம் சுமார் 52 பில்லியன் டாலர்களை தான் ஏஐ தொடர்பான ஆய்வுகளுக்காக ஒதுக்கீடு செய்தது. தற்போது அதனை அதிகரித்துள்ளது இந்த நிலையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் அதிக அளவிலான வாய்ப்புகள் இருப்பதாலேயே அந்த துறைக்கான ஒதுக்கீட்டை அதிகப்படுத்தி இருக்கிறோம் என தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை விளக்கம் தந்துள்ளார்.
தற்போது கூகுள் உள்ளிட்ட அமெரிக்காவை சேர்ந்த பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. சீனா அண்மையில் அறிமுகம் செய்த டீப்சீக் செயலி அமெரிக்க டெக் நிறுவனங்களுக்கெல்லாம் பெரிய போட்டியாக அமைந்திருக்கிறது.
டீப்சீக் செயலி சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது என கூறும் சுந்தர் பிச்சை டீப்சீக் குழுவினர் மிகச் சிறந்த முறையில் பணிபுரிந்துள்ளனர் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது என கூறியுள்ளார். டீப் சீக் செயலிக்கு நிகரான மாடல்களை கூகுளும் கொண்டிருக்கிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
இதனாலேயே தங்கள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பங்களுக்கு அதிக பணத்தை செலவிடுவதாக அவர் கூறியுள்ளார்.
இதனிடையே கூகுள் நிறுவனம் தங்களுடைய கிளவுட் கம்ப்யூட்டிங் பிரிவில் கடந்த ஆண்டு 35 சதவீத லாபம் பெற்ற நிலையில் நடப்பாண்டு அது 30 சதவீதமாக குறைந்து இருக்கிறது.
கிளவுட் பிரிவில் வருவாய் குறைந்தது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு அதிக தொகையை செலவிடுவது ஆகியவை காரணமாக பங்கு மதிப்பு சரிவடைந்ததாக கூறப்படுகிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications