அமெரிக்க வர்த்தகச் சந்தையில் சீனாவில் ஆதிக்கத்தைக் குறைக்க வேண்டும் என டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு சீனா பொருட்கள் மீது அதிகளவிலான வரி விதித்தது மட்டும் அல்லாமல் சீன நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்யும் அமெரிக்க நிறுவனங்களைக் கடுமையாக எச்சரித்துள்ளது.
இதன் எதிரொலியாக உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகிள் ஹூவாவே நிறுவனத்திற்கு வழங்கும் தொழில்நுட்ப சேவைகளை முழுமையாக முடக்கியது. இதில் அதிர்ச்சி அடைந்த சீன நிறுவனம் ஹூவாவே கூகிள் நிறுவனத்தைப் போன்றே அனைத்து விதமான சேவைகளையும் சொந்தமாகத் தயாரிக்க முடிவு செய்தது.
இதில் ஷாக்காகி போன கூகிள் தற்போது மன மாறி ஹூவாவேக்கு மீண்டும் சேவை அளிக்க அமெரிக்க அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கூகிள்
கூகிள் நிறுவனம் ஹூவாவே போன்ற முக்கியமான வாடிக்கையாளரைக் கைவிட விருப்பம் இல்லாமல் அமெரிக்க அரசு சீன நிறுவனங்கள் மீது விதித்துள்ள தடையை நீக்க கோரி டிரம்ப் தலைமையிலான அரசிடம் கூகிள் ஆலோசனை நடத்தி வருவதாகக் கூகிள் நிறுவனத்தின் கூகிள் ப்ளே வர்த்தகத்தின் துணைத் தலைவர் சமீர் சமத் தெரிவித்துள்ளார்.
18.52 சதவீத சந்தை
2019ஆம் ஆண்டில் அமெரிக்க அரசு விதித்த தடையின் மூலம் கூகிள் சேவை இல்லாமல் ஹூவாவே தனது மேட் 30, மேட் 30 ப்ரோ மொபைலை வெளியிட்டது. மக்கள் மத்தியில் இந்தப் போனுக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு இருந்தாலும் கூகிள் இல்லாமல் வெளியானது மக்களை இதை வாங்கத் தயங்க வைத்தது.
ஆயினும் 2019ஆம் நிதியாண்டில் மட்டும் சுமார் 238.5 மில்லியன் போன்களை விற்பனை செய்து 18.52 சதவீத சந்தையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது ஹூவாவே.
அமெரிக்க அரசு
டெலிகாம் மற்றும் மொபைல் தயாரிப்பில் உலகளவில் சக்திவாய்ந்த நிறுவனமாக மாறிவரும் ஹூவாவே-வின் வளர்ச்சியைக் கண்டு வியந்துபோன நிலையில் டிரம்ப்-இன் எச்சரிக்கையை அடுத்து இந்நிறுவனத்திற்கு அளிக்கும் கூகிள் சேவை அனைத்தையும் நிறுத்த முடிவு செய்தது கூகிள். இதனால் ஹீவாவே நிறுவனத்தின் விற்பனையில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது மறந்திருக்க முடியாது.
ஹூவாவே
இந்தப் பிரச்சனையைச் சமாளிக்க ஹீவாவே மற்றும் இதர மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் ஒரு தனி மொபைல் எகோசிஸ்டத்தை உருவாக்க முடிவு செய்தது. இதில் கூகிள் நிறுவனத்திற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காரணம் தற்போது உலகில் பயன்பாட்டில் இருக்கும் ஸ்மார்ட்போன்களில் 50 சதவீத சீன நிறுவன தயாரிப்புகள் தான். இவர்களை இழந்துவிட்டால் நிச்சயம் பெரிய நஷ்டத்தைக் கூகிள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
இதன் காரணமாகவே தற்போது கூகிள் அமெரிக்க அரசிடம் ஹூவாவே நிறுவனத்திற்குச் சேவை அளிக்க ஒப்புதல் கொடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளது.
டிரம்ப்-க்கு செக்
கூகிள் நிறுவனத்தின் இந்த கோரிக்கையை சற்றும் எதிர்பார்க்காத டிரம்ப் அரசு, இக்கோரிக்கையை மறுக்கவும் முடியாத நிலையில் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கூகிள் நிறுவனத்திற்கு கொடுத்தால் அடுத்து பிற துறை நிறுவனங்களும் தடையை நீக்க கோரிக்கை விடுக்கும். இப்படியிருக்கையில் டிரம்ப் அரசு கடுமையான நெருக்கடியில் சிக்கியுள்ளது.
சீனாவில் அமர்க்களம்
கூகிளை எதிர்க்க பங்காளிகள் இணைந்தனர்.. சீனாவில் அமர்க்களம்..!
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications