டெல்லி: மத்திய நிதிநிலை அறிக்கையில் பல்வேறு வரி சம்பந்தப்பட்ட சலுகைகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய வரி கணக்கு நடைமுறையில் மட்டும் சில குறிப்பிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.
இந்தியாவில் தற்போது வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் பழைய வரி கணக்கு முறை மற்றும் புதிய வரி கணக்கு நடைமுறை இரண்டு முறைகளில் தங்களுடைய கணக்கினை தாக்கல் செய்யலாம். பழைய வரி கணக்கு நடைமுறையில் வருமானவரிக் கணக்கினை தாக்கல் செய்பவர்களுக்கு 80c உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வரி விலக்குகள் கிடைக்கின்றன. அதுவே புதிய வரி நடைமுறையின் கீழ் கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு பெரிய சலுகைகள் எதுவும் கிடைக்காது ஆனால் அங்கே வருமான வரி உச்ச வரம்பு சற்றே அதிகம்.

பெரும்பாலான மக்கள் புதிய வருமான வரி கணக்கு முறைக்கு மாற வேண்டும் என்பதுதான் அரசின் இலக்கு. எனவே தான் மத்திய அரசு தொடர்ச்சியாக புதிய வரி கணக்கு தாக்கல் நடைமுறையில் மட்டும் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. எனவே பழைய வரி நடைமுறையை அரசு கைவிடப் போகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பழைய வரிக்கணக்கு நடைமுறையில் வீட்டு வாடகை கொடுப்பனவு, ஆயுள் காப்பீட்டு பிரிமியங்கள் மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி திட்ட பங்களிப்பு, மருத்துவ காப்பீடு பிரிமியங்கள் என்பன உள்ளிட்டவற்றுக்கு செய்யும் பங்களிப்புகளை கணக்கு காட்டி வரி விலக்கு பெற முடியும்.
பழைய வரி கணக்கு நடைமுறை:
ரூ.2.5 லட்சம் : வரி இல்லை
ரூ.2.5 லட்சம் - ரூ.3 லட்சம் : 5%
ரூ.3 லட்சம் - ரூ.5 லட்சம் : 5%
ரூ.5 லட்சம் - ரூ.10 லட்சம் :20%
ரூ.10 லட்சம் மேல்: 30%
ஆனால் இதில் 80சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் வாயிலாக நமக்கு வரிச்சலுகைகள் கிடைக்கின்றன. அதுவே புதிய வரி கணக்கு நடைமுறையில் இவ்வாறு சலுகைகள் எதுவும் வழங்கப்படுவதில்லை .ஆனால் வருமான வரி உச்சவரம்பு அதிகம்.
புதிய வரி கணக்கு நடைமுறை:
ரூ.4 லட்சம் : வரி இல்லை
ரூ. 4 லட்சம் - ரூ.8 லட்சம் : 5%
ரூ.8 லட்சம் - ரூ.12 லட்சம் : 10%
ரூ.12 லட்சம் - ரூ.16 லட்சம் :15%
ரூ.16 லட்சம் - ரூ.20 லட்சம்: 20%
ரூ. 20லட்சம்- ரூ.24 லட்சம் : 25%
ரூ.24 லட்சத்திற்கு மேல்: 30%
தற்போது கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்களின் படி ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுபவர்கள் எந்த வரியும் செலுத்த தேவையில்லை என நிதி அமைச்சர் கூறியுள்ளார். இவ்வாறு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்படுவதால் பெரும்பாலான வரி செலுத்துவோர் பழைய வரி நடைமுறையை கைவிட்டு தாங்களாகவே புதிய வரி நடைமுறைக்கு மாறிவிடுவார்கள் என அரசாங்கம் திட்டமிடுகிறது.
இரண்டு வரி நடைமுறைகளையும் நாம் ஒப்பீடு செய்தால் ஆண்டுக்கு 16 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டக்கூடிய ஒரு நபர் புதிய வரி நடைமுறையில் வருமானவரி கணக்கினை தாக்கல் செய்யும்போது. தற்போது அறிவித்துள்ள மாற்றங்களின் படி தற்போது செலுத்துவதை விட 50,000 ரூபாய் குறைவாக 1.20 லட்சம் ரூபாயை வருமான வரியாக செலுத்தியாக வேண்டும். இதுவே நீங்கள் பழையவரி கணக்கு முறையில் 16 லட்சம் ரூபாய் வருமானம் கொண்டவர் 1.72 லட்சம் ரூபாயை வரியாக செலுத்த வேண்டும். எனவே பெரும்பாலானவர்கள் தாங்களாகவே புதிய வரி நடைமுறைக்கு மாறி விடுவார்கள் என்பது தான் அரசின் கணக்கு.
இதனால் தான் பழைய வரி கணக்கு நடைமுறையில் பெரிதளவில் எந்த மாற்றங்களையும் கொண்டு வராமல் புதிய வரி கணக்கு நடைமுறைக்கு மட்டுமே பல்வேறு சலுகைகளை தொடர்ச்சியாக அறிவித்த வண்ணம் இருக்கிறது. கூடிய விரைவில் மத்திய அரசு புதிய வருமான வரி சட்டத்தை கொண்டு வர இருக்கிறது. பழைய வரி நடைமுறையை முற்றிலும் கைவிடும் வகையிலான அம்சங்களை இது கொண்டு இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டை பொறுத்தவரை ஆகஸ்ட் மாதம் அரசு வெளியிட்ட தகவலின் படி கிட்டத்தட்ட 72 சதவீதம் பேர் புதிய வருமான வரி கணக்கு முறையை தேர்வு செய்துள்ளனர். புதிய வரி கணக்கு நடைமுறையை தேர்வு செய்பவர்கள் வரி சேமிப்புக்காக சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்ற கட்டாயத்திலிருந்து வெளியே வருவார்கள். இதனால் அவர்கள் கையில் அதிக பணம் இருக்கும் அதனை அவர்கள் செலவு செய்வார்கள் இதன் நாட்டின் பொருளாதாரத்திற்கு உதவியாக இருக்கும். ஆனால் பின்னாளில் மக்கள் சேமிப்பு பழக்கத்தை விட்டு வெளியே வருவதற்கான ஒரு காரணியாகவும் அமைந்துவிடும் .
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications