அமெரிக்கா வெனிசுலாவில் ராணுவ தாக்குதல் நடத்தி அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கைப்பற்றிய பிறகு, கிரீன்லாந்து மீது அமெரிக்காவின் கவனம் திரும்பியுள்ளது. டிரம்ப்-ன் இந்த முடிவு ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளுக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது என்றால் மிகையில்லை.
கிரீன்லாந்து நாட்டை எப்படியெல்லாம் கைப்பற்ற முடியும் என்பதை டிரம்ப் நிர்வாகம் தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது, வெனிசுலாவில் நடந்தியது போல் ராணுவத்தை இறக்கி கைப்பற்றவும் தயாராக உள்ளது எனவும், ஆனாலும் முதல் கட்டமாக பேச்சுவார்த்தை வாயிலாகவும், அரசியல் ரீதியாக முடிக்க முயற்சிகள் எடுக்கப்படும் என வெள்ளை மாளிகை செய்திதொடர்பாளர் Karoline Leavitt தெரிவித்தார்.

ஆனால் அமெரிக்காவின் முயற்சிக்கு டென்மார்க் மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. டென்மார்க் பிரதமர் Mette Frederiksen, கிரீன்லாந்து மக்கள் அமெரிக்காவுடன் இணையவோ அல்லது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு பகுதியாக இருக்க விரும்பவில்லை என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளனர்.
கிரீன்லாந்தின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கையை கட்டுப்படுத்தும் டென்மார்க், டிரம்பின் கருத்துகளை ஏற்க முடியாதது என்றும், வலுக்கட்டாயமாக கைப்பற்றினால் NATO கூட்டுறவை பாதிக்கும் என்றும் எச்சரித்தது.
கூட்டு எதிர்ப்பு:
மேலும் டென்மார்க், பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போலந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளின் தலைவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டு, அமெரிக்காவின் முடிவை எதிர்த்தும், கிரீன்லாந்து அதன் மக்களுக்கு சொந்தமானது என்றும், டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து மட்டுமே அவர்களின் உறவுகளை முடிவு செய்யலாம் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
அமெரிக்கா கிரீன்லாந்து நாட்டை கைப்பற்றல் குறித்த ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து NATO ஒற்றுமையை வலியுறுத்திய சிறிது நேரத்திலேயே டிரம்ப் கடுமையான சமுக வலைத்தள பதிவை வெளியிட்டார். NATO அமைப்பு முற்றிலும் அமெரிக்காவை சார்ந்து உள்ளது, தனது தலையீட்டுக்கு முன்பு பெரும்பாலான NATO உறுப்பு நாடுகள் தங்களுடைய நிதி முதலீட்டு உறுதிமொழியை நிறைவேற்றவில்லை என்றும் ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டார். அமெரிக்கா இல்லையெனில் NATO வலுவிழந்து போகும் எனவும் தெரிவித்தார்.
ரஷ்யா உடனான உக்ரைன் போரில் ஐரோப்பிய நாடுகள் மொத்தமாக அமெரிக்காவுடன் இணைந்து பெரும் போர் தொடுத்து வரும் வேளையில், அமெரிக்காவின் இந்த நிலைப்பாடு பெரும் அதிர்ச்சி கொடுத்துள்ளது. இந்த நிலையில் உக்ரைன் போரில் இக்கூட்டணி வலுவிலக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அமெரிக்காவுக்கு கிரீன்லாந்து ஏன் முக்கியம்..?
கிரீன்லாந்து உலகின் மிகப்பெரிய தீவாகும், கனடாவின் வடகிழக்கு கடற்கரையில் அமைந்துள்ளது, பெரும்பாலான நிலப்பரப்பு ஆர்க்டிக் வட்டத்துக்குள் பனியால் மூடியுள்ளது. கிரீன்லாந்து நாட்டில் மக்கள் பயன்பாட்டில் இருக்கும் இடம் மிகவும் குறைவு, மக்கள் எண்ணிக்கையும் 1 லட்சத்திற்கும் குறைவாக உள்ளது. இதில் பெரும்பாலான மக்கள் தலைநகர் Nuuk பகுதியில் தான் உள்ளனர். ஆயினும் இந்த இடம் ஏன் அமெரிக்காவுக்கு முக்கியம்..?
அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் அமைந்துள்ள ஒரு முக்கியமான இடம் தான் கிரீன்லாந்து. இது வட அட்லாண்டிக் வான்வழி மற்றும் கடல்வழி பாதைகளின் முக்கிய இணைப்பு பகுதியாக உள்ளது. GIUK கேப் (கிரீன்லாந்து-ஐஸ்லாந்து-யூகே காரிடார்) என்ற முக்கிய பகுதியை கண்காணிக்க உதவுகிறது, இது NATO அமைப்பால் ரஷ்ய நாட்டின் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிகளை கண்காணிக்க பயன்படுத்தப்படுகிறது.
ஆர்க்டிக் பனி உருகுவதால் புதிய கடல் வழிகள் திறக்கின்றன, ராணுவ போக்குவரத்து எப்போதும் இல்லாத வகையில் எளிதாகிறது, அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகியவற்றுக்கு இடையிலான போட்டி அதிகரிக்கிறது. அமெரிக்கா கிரீன்லாந்தின் வடமேற்கில் இருக்கும் Pituffik Space Base-ஐ நிரந்தர ராணுவ தளமாக இயக்கி வருகிறது, இது ஏவுகணை எச்சரிக்கை மற்றும் விண்வெளி கண்காணிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது.
கிரீன்லாந்தில் புதைந்து கிடக்கும் வளங்கள்
கிரீன்லாந்து தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு துறைகளுக்கு தேவையான கனிம வளங்கள் குவிந்துக்கிடக்கிறது. 2023ஆம் ஆண்டு ஐரோப்பிய கமிஷனால் வெளியிடப்பட்ட டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து ஜியாலஜிக்கல் சர்வே (GEUS) ஆய்வின்படி, 34 "கிரிடிக்கல் ரா மெட்டீரியல்ஸ்"களில் 25 கிரீன்லாந்தில் உள்ளன.
நியோடிமியம், டிஸ்ப்ரோசியம் போன்ற அரிய உலோகங்களின் மிகப்பெரிய இருப்பகு இங்கு உள்ளன. இவை எலக்ட்ரிக் வாகன மோட்டார்கள், காற்றாலை டர்பைன்கள், உயர்தர ஆயுத அமைப்புகள் ஆகியவற்றுக்கு அவசியமானவை.
கிளின் எனர்ஜி முதல் ஏவுகணை தொழில்நுட்பம் வரை பல துறைகளில் இவை முக்கியமான உலோகமாக உள்ளது. அமெரிக்கா தற்போது சீனாவிடம் வாங்கும் பெரும்பாலான அரிய உலோகம் கிரீன்லாந்தில் இருக்கும் காரணத்தால் இதை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என திட்டமிட்டு வருகிறது.
இப்படி பனியால் மூடியுள்ள ஒரு தீவு பாதுகாப்பு நீதியாகவும், கனிவளம், பொருளாதார வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியமான பகுதியாக விளங்குகிறது.
More From GoodReturns

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

டிரம்ப் ஊதும் மகுடிக்கு கெவின் வார்ஷ் ஆடுவாரா..? தலைதூக்கும் ரெசிஷன் அச்சம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!



Click it and Unblock the Notifications