இன்சூரன்ஸ்-ன் முக்கியதுவம், அவசியம் இந்திய மக்களுக்கு மெல்ல மெல்ல தான் உணர துவங்குகிறார்கள். முதலில் ஆயுள் காப்பீட்டை கேட்ட போகும் ஏஜென்ட்களுக்கு அடிவிழுந்த காலத்தில் இருந்து இன்று ஏஜென்ட்களை தேடி போய் ஆயுள் காப்பீடு போட துவங்கிய மக்கள், ஹெல்த் இன்சூரன்ஸ் மீது அக்கறை இல்லாமல் இருந்த வேளையில் கொரோனா அதனை தலைகீழாக புரட்டிப்போட்டது.
வாகனங்களுக்கான காப்பீடு கட்டாயமாக்கப்பட்டு உள்ளதால் மக்கள் இதை வாங்கியாக வேண்டிய நிலை உள்ளது, ஆனால் இன்றும் பலர் வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் ரீனிவல் செய்யாமல் ஓட்டுவது வழக்கமாக தான் உள்ளது. இப்படியிருக்கையில் சமீப காலமாக வீட்டுக் காப்பீட்டின் முக்கியதுவம் குறித்து மக்கள் பேச துவங்கியுள்ளனர்.

இந்தியர்கள் பெரும்பான்மையோரின் ஆகப்பெரிய முதலீடு வீடு. வீட்டின் விலையில் 70-80% கடனாக இருந்தாலும் அதன் முழுப் பொறுப்பும் சொந்தக்காரருக்கே. வீடு இருந்தாலும் சேதமானாலும் வங்கிக்கு மாதாந்திரத் தவணை கட்டியே ஆகவேண்டும்.
50000 ரூபாய் இருசக்கர வாகனத்துக்கும் 5 லட்ச ரூபா காருக்கும் காப்பீடு எடுக்கும் நாம் கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டுக்கு காப்பீடு எடுப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. இது மிகவும் தவறான போக்கு.
வீட்டுக் கடன் வாங்கும் போது வங்கி ஊழியர் உங்களிடம் ஒரு டெர்ம் பாலிசி ஆயுள் காப்பீட்டை விற்க முனைவார், தேவையான அளவு டெர்ம் பாலிசி ஆயுள் காப்பீடு எடுப்பது அத்தியாவசியம் ஆனால் வீட்டுக் கடனுடன் இணைந்த டெர்ம் பாலிசி பெருத்த நஷ்டம் தயவு தாட்சண்யமின்றை அதை நிராகரியுங்கள்.
ஆனால் வீட்டுக்குக் காப்பீடு மிக அவசியம் அதை எடுக்க மறக்காதீர்கள் என ஸ்ரீராம் என்பவர் சமுக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளார். மேலும் வீட்டுக்கான காப்பீடு குறித்தும், அதன் பயன்கள் குறித்தும் விளக்கியுள்ளார். இவருடைய பதிவில் மக்கள் பயன்பெறும் வகையில் என்ன இருந்தது. வாங்க முழுசா பார்ப்போம்.
ஸ்ரீராம் தனது பதிவில் வீட்டுக் காப்பீட்டின் ப்ரீமியம் அதிகமாக இருப்பதை உணர்ந்த மத்திய அரசு IRDAI மூலம் Bharat Griha Raksha Policy ஐ 2021 ஏப்ரல் மாதம் அறிமுகப் படுத்தி அனைத்து General Insurance நிறுவனங்களும் இத்திட்டத்தை வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
இத்திட்டத்தின் படி வீட்டின் விலை அளவுக்கு Coverage பெறலாம். காப்பீட்டு அளவின் 20% (அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய்) க்கு வீட்டில் உள்ள நகைகள் மற்றும் பொருட்களுக்கும் Coverage வழங்கப்படும்.
அதாவது 40 லட்ச ரூபாய் வீட்டுக்குக் காப்பீடு வாங்கினால் 8 லட்ச ரூபாய் வீட்டுக்குள் இருக்கும் பொருட்களுக்கு காப்பீடு கிடைக்கும். வீட்டுக்கு 1 கோடி ரூபாய் காப்பீடு வாங்கினால் பொருட்களுக்கு 10 லட்சரூபாய் காப்பீடு கிடைக்கும். அடிப்படைக் காப்பீடு தவிர இரு வேறு தெரிவுகளும் இத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன
1. நகைகள், பொருட்கள் அதிகம் வைத்திருப்போர் அவற்றுக்கு முழுக்காப்பீடு பெற நினைத்தால், அவற்றை Declare மற்றும் மதிப்பீடு செய்து அதைப் பெறலாம்.
2. வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது கணவர் (அ) மனைவிக்கு 5 லட்ச ரூபாய் விபத்துக் காப்பீடு தேவைப்பட்டால் பெறலாம்.
காப்பீட்டின் காலம் : 10 ஆண்டுகள். பத்தாண்டுகள் முடிவில் இன்னொரு பத்தாண்டுகளுக்கு நீட்டிப்பு செய்து கொள்ளலாம்.
இக்காப்பீட்டை எங்கு பெறலாம்? : யுனைடெட் இன்சூரன்ஸ், பஜாஜ் அலையன்ஸ், ஹெச்டிஎப்சி எர்கோ, ஐசிஐசிஐ லம்பார்ட் உள்ளிட்ட அனைத்து General Insurance நிறுவனங்களிடம் பெறலாம்.
இக்காப்பீடு எதற்காக? : தீ, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களாலோ, கலவரம் போன்ற மனிதச் செயல்களாலோ வீடு சேதாரம் ஆனால் இழப்பீடு பெறவே இக்காப்பீடு. வீட்டில் உள்ள பொருட்கள் சேதாரம் ஆனாலோ களவு போனாலோ அவற்றுக்கும் இழப்பீடு கிடைக்கும்
விலக்குகள் : போரினால் சேதாரம் ஏற்பட்டால் காப்பீட்டு நிறுவனம் பொறுப்பேற்காது. விபத்துக்கோ களவுக்கோ உரிமையாளர் காரணமாக இருந்தாலும் இழப்பீடு கிடைக்காது.
கட்டணம் எவ்வளவு? : அது காப்பீட்டைப் பொறுத்து அமையும். சமீபத்தில் சென்னையில் வீடு வாங்கிய நண்பர் 10 லட்சம் ரூபாய் 10 ஆண்டு காப்பீட்டுக்கு செலுத்திய One Time Payment 9800 க்கும் குறைவு. காப்பீட்டு அளவுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைந்த கட்டணமே.
குடும்பம் நல்லாருக்கணும்னு 80% கடனில் வீடு வாங்குவது முக்கியம் தான். அதை விட முக்கியம் தேவையான அளவு ஆயுள் காப்பீடும் வீட்டின் விலைக்கு Bharat Griha Raksha Policy யும் எடுப்பது அதை விட முக்கியம். வங்கி தரும் நெருக்கடி காரணமா ஒரு கோடி ரூபா வீட்டுக்கு பேருக்கு 10 லட்ச ரூபா காப்பீடு எடுக்காதீங்க, வீடு இடிந்து விழுந்தால் மீண்டும் கட்ட எவ்வளவு செலவாகுமோ அந்த அளவுக்கு காப்பீடு எடுங்க.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications