நம் நாட்டில் பெரும்பாலான மக்கள் தொலைதூர பயணங்களுக்கு ரயில்களையே அதிகம் சார்ந்துள்ளனர். சமீபகாலமாக மக்கள் விமானத்தில் பயணம் செய்வது அதிகரித்து வருகிறது. இருப்பினும், இன்றைய காலகட்டத்தில் விமான பயணம் என்பது பெரும்பாலான இந்தியர்களின் நிதி சக்திக்கு அப்பாற்றப்பட்டதாக இருக்கிறது.
நம் நாட்டின் மொத்த மக்கள்தொகையான 140 கோடியில் 3 சதவீதம் பேர் மட்டுமே வழக்கமாக விமான பயணங்களை மேற்கொள்கின்றனர். அதாவது 140 கோடி பேரில் 4.2 கோடி பேர் மட்டுமே உள்நாட்டுக்குள் விமானங்களில் பறக்கின்றனர். இருப்பினும் எதிர்காலத்தில் மக்கள் விமானங்களில் பயணம் செய்வது பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இனி வரும் காலங்களில் விமான பயணம் என்பது ஆடம்பரமல்ல ஆனால் அவசியமானது என்ற நிலைக்கு மாறும். பீகார் மாநிலம் தர்பங்காவை சேர்ந்த பிரசன்னா குமார் ஜா டெல்லியில் வரி ஆலோசகராக பணியாற்றி வருகிறார். அண்மையில் தர்பங்காவில் வசித்து வரும் தனது தாய்க்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது என்ற தகவலை கேட்டதும் உடனடியாக விமானத்தில் பறந்து சென்ற தனது தாயை பார்த்தார். இதற்காக அவருக்கு ரூ.10,500 செலவானது.
இது குறித்து பிரசன்னா குமார் ஜா கூறுகையில், செலவு அதிகம் எனவே மாற்று வழியில் தர்பங்காவுக்கு செல்ல நான் முடிவு செய்து இருந்தால், டெல்லியில் இருந்து ரயிலில் செல்ல வேண்டும் பின்பு டாக்ஸில் தர்பங்காவுக்கு செல்ல வேண்டும். இதற்கு குறைந்தபட்சம் 30 மணி நேரம் ஆகும். எனவே விமான பயணம் இனி ஆடம்பரமல்ல ஆனால் அவசியமானது என்று தெரிவித்தார்.
விமான பயணம் அவசியமானது என மாறும் என்பதால் விமான பயணத்துக்காக தேவை அதிகரிக்கும். மேலும் நாட்டில் விமான சேவையை விரிவுப்படுத்தும் நோக்கில் பல நகரங்களில் விமான நிலையங்கள் உருவாக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
உதாரணமாக 2014ல் நம் நாட்டில் 74 விமான நிலையங்கள் இருந்தது, ஆனால் இப்போது 148 விமான நிலையங்கள் உள்ளன. 2030ம் ஆண்டுக்குள் விமான நிலையங்களின் எண்ணிக்கை 230ஆக அதிகரிக்கும் என்று விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறுகிறார்.
டெல்லி மற்றும் மும்பை விமான நிலையங்கள் உலகின் பிசியான விமான நிலையங்களில ஒன்றாக மாறிவிட்டன. டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் அடுத்த ஆண்டு 10.90 கோடி பயணிகளை கையாள தயாராக இருக்க வேண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த விமான நிலையம், அமெரிக்காவில் உள்ள ஹார்ட்ஸ் ஃபீல்ட்-ஜாக்சன் அட்லாண்டா சர்வதேச விமான நிலையத்துக்கு அடுத்தப்படியாக உலகின் இரண்டாவது பிசியான விமான நிலையமாக தயாராகி வருகிறது.
மேலும் ஆண்டுக்கு ஆண்டு விமான பயணிகளின் எண்ணிக்கை வளர்ச்சி கண்டு வருகிறது. எனவே அதிகரித்து வரும் விமான பயணிகளின் பூர்த்தி செய்யும் மற்றும் வளர்ச்சிக்கான இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளும் நோக்கிலும் இந்திய விமான சேவை நிறுவனங்கள் விமானங்களை வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
இந்திய விமான சேவை நிறுவனங்கள் இந்த ஆண்டு ஏறக்குறைய ஆயிரம் விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளன. உலகில் வேறு எந்த நாடும் இந்த அளவுக்கு விமானங்களை வாங்கியதில்லை. இந்திய விமான சந்தை விரிவடைந்து வருவது உலகின் மிகப்பெரிய விமான தயாரிப்பாளர்களான அமெரிக்காவின் போயிங் மற்றும் ஐரோப்பாவின் ஏர்பஸ் ஆகிய நிறுவனங்களுக்கு கொண்டாட்டமாக அமைந்துள்ளது.
ஏர் இந்தியா நிறுவனம் மொத்தம் 7,000 கோடி டாலர் மதிப்பில் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 விமானங்களையும், போயிங் நிறுவனத்திடம் இருந்து 220 விமானங்களையும் வாங்க உள்ளது. நாட்டின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான இண்டிகோ, 500 ஏர்பஸ் ஏ230 விமானங்களை வாங்க ஆர்டர் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications