டெல்லி: சாட் ஜிபிடி, ஜெமினி உள்ளிட்ட ஏஐ செயலிகளுக்கு போட்டியாக சீனா உருவாக்கி இருக்கும் டீப் சீக் ஏஐ செயலி உலகம் முழுவதும் தொழில்நுட்ப நிறுவனங்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
அமெரிக்க நிறுவனங்களை மிஞ்சும் வகையில் சீனாவால் எப்படி இப்படி ஒரு செயலியை உருவாக்க முடிந்தது என பலரும் விவாதம் நடத்தி வருகின்றனர். பல்வேறு தொழில்நுட்பங்களிலும் முன்னணியில் இருக்கக்கூடிய இந்தியாவால் ஏன் சீனாவுக்கு முன்னோடியாக ஒரு செயற்கை நுண்ணறிவு செயலியை உருவாக்க முடியவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. சமூக வலைதளங்களில் பலரும் இது தொடர்பாக விவாதம் நடத்தி வருகின்றனர்.

இதற்கு அமேசான் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பிரிவில் செயல்படக்கூடிய ஒரு நபர் எக்ஸ் பக்கத்தில் விளக்கம் தந்துள்ளார். அதில் சீனாவைப் போல இந்தியாவில் உள்ளூர் நிறுவனங்கள் வளர்ச்சி அடைவதற்கான சாதகமான சூழல் இல்லை என தெரிவித்துள்ளார். இதனால் தான் இந்தியாவை சேர்ந்த நிறுவனங்களால் தங்களுக்கு சொந்தமான ஒரு செயற்கை நுண்ணறிவு மாடலை உருவாக்க முடியவில்லை எனக் கூறியுள்ளார்.
சீன அரசு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களின் மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் கொள்கைகளை வகுத்து அது சார்ந்த ஆய்வுகளுக்கு உதவி செய்து வருகிறது. ஆனால் அது போன்ற ஒரு சூழல் இந்தியாவில் இல்லை என கூறியுள்ளார்.
சர்வதேச அளவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இந்தியா போட்டியிட வேண்டும் என்றால் மத்திய அரசு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் குறிப்பாக ஜெனரேட்டிவ் ஏஐ மாடல்களுக்கு தேவையான நிதி உதவிகளை வழங்க வேண்டும் என அவர் கூறியுள்ளார் .
இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு பிரிவில் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன பல நிறுவனங்களும் லாங்குவேஜ் மாடல்களை உருவாக்கி வருகின்றன என்றாலும் அவை அனைத்தும் ஆய்வு நிலையிலேயே இருக்கின்றன. அவை செயல்பாட்டுக்கு வர முடியவில்லை என சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தியர்கள் உருவாக்கக்கூடிய மாடல்களை பரிசோதனை செய்து பார்க்கக் கூடிய அளவில் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியாவில் இல்லாமல் இருப்பது இதற்கு ஒரு முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது.
குறிப்பாக இந்தியாவிற்கு என சொந்தமாக கூகுள், பேஸ்புக் போன்ற நிறுவனங்களும் செயலிகளும் இல்லாமல் இருப்பதை ஒரு காரணமாக கூறுகின்றனர். சீனாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட சோதனைகளுக்கும் ஆய்வுகளுக்கும் என பாதுகாக்கப்பட்ட சந்தை இருக்கிறது.
அப்படி ஒரு பாதுகாக்கப்பட்ட சந்தை இந்தியாவில் இல்லை, சீனா தொழில்நுட்பங்களுக்காக மேற்கத்திய நாடுகளை சார்ந்திருக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டை எடுத்ததை எடுத்து உள்நாட்டிலேயே தொழில்நுட்பங்களை மேம்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது அதன் முடிவுதான் டீப் சீக் தொழில்நுட்பம் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்களிடமிருந்து கடுமையான போட்டியை எதிர்கொள்கின்றன. எனவே தான் இந்தியாவில் எண்ணியபடி சோதனைகளை நடத்தி முடிப்பதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் டீப்சீக் செயலி ஒரு ஆரம்பம் தான் கூடிய விரைவில் அடுத்தடுத்த மாடல்களை நாம் எதிர்பார்க்கலாம் எனவும் சமூக வலைதள பணியாளர்கள் பலரும் கருத்து கூறியுள்ளனர். குறிப்பாக அலிபாபா நிறுவனம், பைட் டான்ஸ் நிறுவனம் என சீனாவ்ன் முன்னணி டெக் நிறுவனங்கள் ஏஐ செயலிகளை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கின்றன.
சாட்ஜிபிடியின் ஓபன் ஏஐ நிறுவனத்துடன் ஒப்பிடும்போது சீனாவில் 10க்கும் மேற்பட்ட செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள் இருக்கின்றன என்றும் 50க்கும் மேற்பட்ட இரண்டாம் நிலை ஆய்வகங்கள் இருக்கின்றன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Story written by: Devika
More From GoodReturns

டொனால்டு டிரம்ப் கொடுத்த டார்ச்சர்.. சீனா தப்பித்தது எப்படி? தடைகளை தகர்த்தெறிந்த வெற்றி பயணம்?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications