இந்தியா சீனா எல்லையில் உலகின் மிகப்பெரிய அணை.. சீனா-வின் திட்டத்தை எதிர்க்கும் இந்தியா.. ஏன்..?

இந்தியா சீனா எல்லையில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே உலகின் மிகப்பெரிய அணையை கட்ட சீனா முடிவு செய்துள்ளது. இது இந்தியா மற்றும் வங்கதேச நாடுகளுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது.

பிரம்மபுத்திரா நதி சீனா , இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளில் பாய்கிறது. இந்தியாவில் இதனை பிரம்மபுத்திரா என்றும் சீனாவில் இந்த நதியை யார்லங் ஸாங்க்போ என்றும் அழைக்கின்றனர். இந்த நதியின் குறுக்கே திபெத்தில் 11 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் சீனா அணையை கட்ட இருக்கிறது.

இந்தியா சீனா எல்லையில் உலகின் மிகப்பெரிய அணை.. சீனா-வின் திட்டத்தை எதிர்க்கும் இந்தியா.. ஏன்..?

உலகிலேயே மிகப்பெரிய அணையாக இது இருக்கும் என சொல்லப்படுகிறது. அதேபோல உலக அளவில் ஒரு அணையின் கட்டுமானத்திற்காக மிகப்பெரிய தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதும் இதுதான் முதன்முறை என சொல்லப்படுகிறது.

பிரம்மபுத்திரா நதியின் கீழ்மட்ட பகுதியில் நீர் மின் நிலையம் அமைப்பதற்கான திட்டத்திற்கு சீன அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது . இதற்காக அங்கே இந்த மிகப்பெரிய அணையானது கட்டமைக்கப்பட இருக்கிறது . ஏற்கனவே சீனா மிகப்பெரிய முதலீட்டில் த்ரீ கார்ஜஸ் என்ற அணையை கட்டியதோடு திபெத்தில் 2500 கோடி மதிப்பிலான நீர்மின் நிலைய திட்டத்தையும் செயல்படுத்தி இருக்கிறது . தற்போது இந்த பிரம்மபுத்திரா அணை திட்டத்தையும் நிறைவேற்றுவதற்கு சீன அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

பூமியின் மேற்கூரை என்று அழைக்கப்படக்கூடிய திபெத்திய பீடபூமி பகுதியில் அணையை கட்ட சீனா முயன்று வருகிறது. இது அடிக்கடி நில அதிர்வு ஏற்படக்கூடிய பகுதி என்பதால் இந்த அணையில் ஏதேனும் சேதம் ஏற்பட்டால் அது சீனா மட்டுமின்றி இந்தியா மற்றும் வங்கதேச மக்களையும் பெருமளவில் பாதிக்கும் என நிபுணர்கள் அச்சப்படுகின்றனர்.

பிரம்மபுத்திரா நதி இந்தியாவுக்குள் நுழையும் அருணாச்சலப் பிரதேச எல்லையை ஒட்டிய பகுதியில் சீனா இந்த அணையை கட்டுவது தான் இந்தியாவிற்கு தற்போது மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நீர் கொள்ளளவு, நீர் வெளியேற்றப்படும் அளவு உட்பட பல கட்டுப்பாடுகளை சீனா விதிக்க வாய்ப்புள்ளதாக இந்தியா கருதுகிறது .

அதேவேளையில் திடீரென அணையில் உடைப்பு ஏற்பட்டாலோ அல்லது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலோ அதிக அளவிலான தண்ணீர் வந்து இந்தியாவை சேர்ந்த மக்களையும் அது பெருமளவில் பாதிக்கும் என கூறப்படுகிறது.

ஆனால் சீனாவோ இந்த அணையால் எந்த ஒரு பாதிப்பு ஏற்படாது என கூறுகிறது. இது தொடர்பாக சீன தலைநகர் பெய்ஜிங்கில் அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் பேசும்போது பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே கட்டப்பட உள்ள அணையால் இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு பாதிப்பு ஏற்படாது என தெரிவித்தார். இந்த அணையை கட்டுவது தொடர்பாக பல ஆண்டுகளாக சீனா புவியியல் ரீதியாகவும் சூழலில் ரீதியாகவும் ஆய்வு மேற்கொண்டது என கூறியுள்ளார்.

சீனாவில் அதிக மழை பொழியும் பகுதியில் இந்த அணை கட்டப்பட இருப்பதால் அங்கு பெருமளவிலான நீரை சேமிக்க முடியும் என நாட்டு அரசு கூறுகிறது. இது தவிர அங்கே அமைக்கப்படக்கூடிய நீர்மின் நிலையத்தில் ஆண்டுக்கு 300 பில்லியன் கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்றும் இதன் மூலம் 30 கோடி மக்களுக்கு ஒரு ஆண்டுக்கான மின்சார தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்றும் சீன அரசு கூறுகிறது.

ஏற்கனவே இந்தியா சீனா எல்லைகளை ஒட்டிய பகுதிகளில் பாய்ந்து ஓடும் நதி சார்ந்த விவகாரங்களை விவாதிக்க 2006 ஆம் ஆண்டு இரு நாடுகளும் நிபுணர் குழுவை அமைத்தன . அதன்படி வெள்ளம் ஏற்படும் சமயங்களில் பிரம்மபுத்திரா மற்றும் சட்லஜ் நதிகளின் நிலை குறித்த தகவல்களை இந்தியாவிற்கு வழங்குவோம் என சீனா ஒப்புதல் தெரிவித்தது. அதனை பின்பற்றுவோம் என சீனா கூறுகிறது.

இருந்தாலும் சீனா அணை கட்ட விரும்பும் இடம் புவியியல் ரீதியாக நிறைய சிக்கல்களை கொண்ட இடம் என்பதால் அத்தனை எளிதாக இந்த திட்டத்தை நிறைவேற்ற முடியாது என சொல்லப்படுகிறது.

Story Written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+