இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்கள் அடுத்தடுத்து விமானங்களை வாங்கிக் குவித்து வருகிறது. இதிலும் முக்கியமாக மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் போது தொடர்ந்து நஷ்டத்திலும், மோசமான சேவை தரத்திலும் இருந்த ஏர் இந்தியா-வை டாடா குழுமம் கைப்பற்றிய பின்பு சுமார் 540 விமானங்களை வாங்கும் அளவிற்குச் சேவை தரத்தையும், வர்த்தகத் திட்டத்தையும் உருவாக்கியுள்ளது.
இது மட்டுமா இண்டிகோ முதல் புதிதாகக் களமிறங்கிய ஆகாச ஏர் வரையில் 1000த்திற்கும் அதிகமான புதிய விமானங்களை ஆர்டர் செய்துள்ளது, இந்த மாபெரும் ஆர்டருக்குப் பின்னால் இருக்கும் காரணம் என்ன..?
இந்திய விமானப் போக்குவரத்துத் துறை எதை நோக்கி செல்கிறது..? இந்த ஆயிரக்கணக்கான விமானங்கள் எங்குப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டு உள்ளது..?
சீனா மற்றும் அமெரிக்கா
சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய உள்நாட்டு விமானச் சந்தையாக இந்தியா உள்ளது. 2019ல் ஆதாவாது கோவிட்-க்கு முந்தைய ஆண்டு உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் 144 மில்லியன் பயணிகளைக் கொண்டு இந்தியா மாஸ் காட்டியது.
இந்திய மக்கள் தொகை
இந்திய மக்கள் தொகையில் 3-4% மட்டுமே விமானப் பயணத்தைப் பயன்படுத்துகின்றனர். இளம் தலைமுறையினர் மத்தியில் அதிகரித்து வரும் வருமான நிலைகள், நடுத்தர மக்களின் வலிமையான வளர்ச்சி, குறைந்த கட்டண விமானச் சேவை அளிக்க விமான நிறுவனங்கள் மத்தியில் இருக்கும் கடுமையான போட்டி மற்றும் மேம்படுத்தப்பட்ட இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றின் மூலம் இந்தியாவில் விமானப் போக்குவரத்து பெரிய அளவில் மேம்படும் என நிபுணர்கள் நம்புகின்றனர்.
சர்வதேச விமானப் போக்குவரத்து சந்தை
அரசாங்கமும் தொழில்துறையும், உலகிலேயே இந்தியா மூன்றாவது பெரிய சர்வதேச விமானப் போக்குவரத்துச் சந்தையாக மாறக்கூடும் என்று கூறுகின்றன, இதேவேளையில் இந்திய பொருளாதார வேகமாக வளரும் காரணத்தால் உள்நாட்டு விமானச் சேவையும் அதிகரிக்க உள்ளது.
இடைவெளி
இந்த நிலையில் விமானப் போக்குவரத்துச் சந்தை வர்த்தகத்திற்கும், தற்போதைய விமான எண்ணிக்கைக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளியைக் கொண்டு உள்ளது. இதை நிரப்பும் விதமாக இந்திய விமான நிறுவனங்கள் அதிகளவிலான விமானங்களை ஆர்டர் செய்து வருகிறது.
உள்நாட்டு விமானச் சேவை
தற்போது இந்திய விமானங்கள் அனைத்தும் உள்நாட்டு விமானச் சேவையை மேம்படுத்துவதில் தீவிரமாக உள்ளது. இதனால் தற்போது ஆர்டர் செய்யப்படும் விமானங்களில் அதிகளவில் 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களை இணைக்கப்பட உள்ளது. இதைவிட முக்கியமாக மெட்ரோ நகரங்கள் மத்தியில் அதிக எண்ணிக்கையிலான விமானங்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர உள்ளது.
90000 கோடி ரூபாய்
மேலும் இந்திய அரசு இந்திய விமான நிலையங்களைச் சுமார் 90000 கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டில் அடுத்த 5 வருடத்தில் Airports Authority of India மேம்படுத்த உள்ளது. இந்த மேம்படுத்தும் திட்டத்தில் தனியார் விமான நிலைய நிறுவனங்களும், சிறிய நகரங்களை இணைக்கும் UDAN திட்டமும் ஈடுபட உள்ளது.
ஏர் இந்தியா
ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் ஜனவரி 2022ல் அதிகாரப்பூர்வமாகக் கைப்பற்றிய நிலையில், ஒரு வருட வளர்ச்சியைக் கொண்டாடும் விதமாக ஏர் இந்தியா நிர்வாகம் ஏர்பஸ் நிறுவனத்திடம் 250 விமானங்களும், போயிங் நிறுவனத்திடம் 220 விமானங்களையும் ஆர்டர் செய்துள்ளது.
470 விமானங்கள்
ஏர் இந்தியா தற்போது ஆர்டர் செய்துள்ள 470 விமானங்களின் மொத்த மதிப்பு 70 முதல் 80 பில்லியன் டாலராக இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஏர் இந்தியாவின் 70 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆர்டர் மூலம் வருவாய், வேலைவாய்ப்பு, உற்பத்தி எனப் பல நாடுகள் இதன் மூலம் பலன் பெற உள்ளதால் உலக நாடுகளின் தலைவர்கள் பாராட்டியும், நன்றி தெரிவித்தும் வருகின்றனர்.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications