இந்தியாவில் ரூ.50 லட்சம் விற்கப்படும் கார் அமெரிக்காவில் வெறும் ரூ.20 லட்சம்! ஏன் இந்த வித்தியாசம்?

இந்தியாவில் கார் என்பது ஆடம்பரம் என்பதை தாண்டி அத்தியாவசியமானதாக மாறிவிட்டது. இப்படியிருக்கும் சூழ்நிலையில் கார்களின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருவதால், சராசரி மக்கள் புதிய வாகனம் வாங்குவது சவாலாக மாறியுள்ளது.

இந்தியா மட்டும் அல்லாமல் உலகளவில் ஒரு காரின் விலை என்பது அதன் உற்பத்தி செலவுகள், அதீத வரிகள், இறக்குமதி கட்டணங்கள், இன்ஜின் திறன் மற்றும் எரிபொருள் வகை என பல வகையில் அதன் விலைகள் மாறுப்படுகிறது. ஆனால் இந்தியாவை காட்டிலும் வெளிநாட்டில் கார்களின் விலை மிகவும் குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது. இதற்கு என்ன காரணம்..?

இந்தியாவில் ரூ.50 லட்சம் விற்கப்படும் கார் அமெரிக்காவில் வெறும் ரூ.20 லட்சம்! ஏன் இந்த வித்தியாசம்?

கார் விலை உயர்வுக்கான முக்கிய காரணங்கள்

உற்பத்தி செலவு: மூலப்பொருட்கள், தொழிலாளர், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D), மற்றும் அசெம்பிளி ஆகியவை உற்பத்தி செலவில் முக்கிய பங்காக உள்ளது. சிறிய கார்களுக்கு இது குறைவாகவும், பெரிய அல்லது தொழில்நுட்பம் மிகுந்த வாகனங்களுக்கு அதிகமாகவும் இருக்கும்.

பொருட்கள் மற்றும் சேவை வரி (GST): இந்தியாவில் பெரும்பாலான கார்களுக்கு 28% GST விதிக்கப்படுகிறது. இது வாகனத்தின் உற்பத்தி செலவில் மீது பெரும் சுமையை ஏற்படுத்துகிறது.

கூடுதல் செஸ் வரி: 1,500cc-க்கு மேல் இயந்திர அளவு கொண்ட வாகனங்கள் அல்லது ஆடம்பர கார்களுக்கு 15% செஸ் வரி விதிக்கப்படுகிறது.

பதிவு மற்றும் சாலை வரி: மாநிலத்தைப் பொறுத்து, இது காரின் ஷோரூம் விலையில் 8-15% வரை இருக்கும். இது இறுதி விலையை மேலும் உயர்த்துகிறது.

இறக்குமதி கட்டணங்கள்: இறக்குமதி செய்யப்படும் கார் பாகங்கள் அல்லது வாகனங்களுக்கு உயர் கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன.

இந்தியாவில் காரின் விலை எப்படி நிர்ணயம் செய்யப்படுகிறது:

இந்தியாவில் கார் விலை எரிபொருள், இன்ஜின் திறன் பொருத்தும் மாறப்படுகிறது. இந்த நிலையில் பிரபலமான மாருதி சுசூகி ஸ்விஃப்ட் மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா மாதிரிகளின் விலைப் பிரிவுகளைப் பார்ப்போம்:

மாருதி சுசூகி ஸ்விஃப்ட்:
*உற்பத்தி செலவு: ரூ.4,00,000
*GST (28%): ரூ.1,12,000
*செஸ் (15%): ரூ.60,000
*எக்ஸ் ஷோரூம் விலை: ரூ.5,72,000
*சாலை வரி: ரூ.45,000
*இறுதி விலை (ஆன்-ரோடு): ரூ.6,17,000

ஹூண்டாய் க்ரெட்டா:
*உற்பத்தி செலவு: ரூ.10,00,000
*GST (28%): ரூ.2,80,000
*செஸ் (15%): ரூ.1,50,000
*எக்ஸ் ஷோரூம் விலை: ரூ.14,30,000
*சாலை வரி: ரூ.1,25,000
*இறுதி விலை (ஆன்-ரோடு): ரூ.15,55,000

இந்தியாவில் ரூ.50 லட்சம் விற்கப்படும் கார் அமெரிக்காவில் வெறும் ரூ.20 லட்சம்! ஏன் இந்த வித்தியாசம்?

ஸ்விஃப்ட்: சிறிய கார் (1,500cc-க்கு கீழ்) மற்றும் அடிப்படை அம்சங்கள் கொண்டதால், உற்பத்தி செலவு குறைவு. ஆனால், GST மற்றும் செஸ் சேர்க்கப்பட்டு, இறுதி விலை ரூ.6.17 லட்சமாக உயர்கிறது.

க்ரெட்டா: பெரிய இயந்திரம் மற்றும் மேம்பட்ட அம்சங்கள் காரணமாக உற்பத்தி செலவு அதிகம். GST, செஸ், மற்றும் உயர் சாலை வரி சேர்க்கப்பட்டு, இறுதி விலை ரூ.15.55 லட்சமாகிறது. இதுவே வெளிநாட்டில் விற்கப்படும் காருக்கும், அதே கார் இந்தியாவில் எவ்வளவு விலை வித்தியாசப்படுகிறது என்பதை இப்போது பார்ப்போம்.

இங்கு உதாரணமாக டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட் காரின் விலை மற்றும் வரி அமைப்பை இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, மற்றும் துபாயில் எவ்வாறு வேறுப்படுகிறது என்பதை பார்ப்போம்.

இந்தியாவில் 28% GST மற்றும் 15% செஸ் உடன் மொத்த விலை ரூ.50 லட்சமாக உயர்கிறது, அதேசமயம் துபாயில் 5% VAT-உடன் விலை ரூ.28 லட்சமாக உள்ளது. இந்த வரி வேறுபாடுகள் கார் வாங்குபவர்களுக்கு எவ்வாறு பாதிக்கின்றன என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது.

இந்தியாவில் ரூ.50 லட்சம் விற்கப்படும் கார் அமெரிக்காவில் வெறும் ரூ.20 லட்சம்! ஏன் இந்த வித்தியாசம்?

நாடு வாரியாக வரி மற்றும் விலை விவரங்கள்

இந்தியா-வில் GST (28%), செஸ் (15%), ரோடு வரி மாநிலத்தைப் பொறுத்து 8% முதல் 12% வரை மாறுபடுகிறது, இதன் வாயிலாக மட்டுமே இக்காரின் விலை சுமார் ரூ.4 லட்சம் கூடுதல் செலவாகிறது.

விலை:
எக்ஸ்-ஷோரூம் விலை: ரூ.46,00,000
ஆன்-ரோடு விலை: ரூ.50,00,000

அமெரிக்கா: விற்பனை வரி என்பது தேசிய அளவில் இல்லை, ஆனால் மாநில அளவில் 0% முதல் 10% வரை மாறுபடுகிறது, சராசரியாக 6% என வைத்துக்கொள்ள முடியும். அமெரிக்காவில் பயணிகள் வாகனங்களுக்கு 2.5% இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது.

விலை:
எக்ஸ்-ஷோரூம் விலை: $27,000 (தோராயமாக ரூ.20,00,000)
ஆன்-ரோடு விலை: $28,500 (தோராயமாக ரூ.21,30,000)

இங்கிலாந்து நாட்டில் கார் வாங்கும் போது VAT (20%), ரோடு வரி மற்றும் CO2 கட்டணம் உள்ளன.

விலை:
எக்ஸ்-ஷோரூம் விலை: £30,000 (தோராயமாக ரூ.30,00,000)
ஆன்-ரோடு விலை: £35,000 (தோராயமாக ரூ.35,00,000)

துபாய்-யில் VAT 5%, வாகனங்களுக்கு 5% இறக்குமதி வரி, இதை தொடர்ந்து ரோடு வரி மிகக் குறைவு, இன்சூரன்ஸ் கட்டாயமாகும் ஆனால் மலிவானது.

விலை:
எக்ஸ்-ஷோரூம் விலை: AED 125,000 (தோராயமாக ரூ.25,00,000)
ஆன்-ரோடு விலை: AED 140,000 (தோராயமாக ரூ.28,00,000, அனைத்து கட்டணங்களும் உட்பட)

ஒப்பீட்டு அளவில் இந்தியா தான் உயர்ந்த வரி விகிதம் (28% GST + 15% செஸ்) உள்ளது. இதன் காரணமாக அமெரிக்காவில் 21 லட்சத்திற்கு விற்கப்படும் கார் இந்தியாவில் 51 லட்சத்திற்கு விற்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+