பல லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் சவுதி அரேபியாவில் உருவாகும் நகரத்தில் முதலீடு செய்வதற்கு இந்திய நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவது தெரியவந்துள்ளது. சவுதி அரேபியா அரசு சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் திரியா என்ற நகரத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
இந்த நகரத்தை சிட்டி ஆப் எர்த் என சவுதி அரேபியா அழைக்கிறது. இங்கே முதலீடு செய்வதற்கு இந்தியாவை சேர்ந்த டாடா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் போட்டி போடுவது தெரியவந்துள்ளது. இந்த தகவலை திரியா நகரை கட்டமைப்பதற்காக நியமனம் செய்யப்பட்டுள்ள தலைமை செயல் அதிகாரி ஜெர்ரி இன்செரிலோ தெரிவித்துள்ளார். டாடா மற்றும் ஓபராய் குழுமங்கள் இந்த நகரத்தில் முதலீடு மேற்கொள்வதற்கு ஒப்பந்தம் கையெழுத்துட்டு இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

பூமியின் நகரம் என அழைக்கப்படும் திரியா சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்திற்கு அருகில் அமைக்கப்பட்டு வருகிறது. பிரம்மாண்டமான முறையில் இதன் கட்டுமான பணிகள் நடைபெற்ற வருகின்றன. தற்போதைக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குடியிருக்கும் வகையிலான வீடுகளும் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வேலை செய்யும் வகையில் அலுவலகங்களும் இந்த பகுதியில் கட்டப்பட்டு வருகின்றன.
இது தவிர சொகுசு விடுதிகள், கடைகள், உணவகங்கள், பல்கலைக்கழகங்கள், அருங்காட்சியகங்கள், கலையரங்கம் மற்றும் விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்டவை இந்த நகரத்தில் நவீன வசதிகளோடு கட்டமைக்கப்பட்டு வருகிறது. இந்த நகர கட்டுமான பணிக்கான தலைமை செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ள ஜெர்ரி இன்செரிலோ பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் வர்த்தக ரீதியாக சவுதி அரேபியாவும் இந்தியாவும் நெருங்கிய நட்பு நாடாக இருக்கிறது என கூறியுள்ளார்.
கட்டுமானம், தகவல் தொழில்நுட்பம், எரிசக்தி, தொலைத்தொடர்பு என பல்வேறு துறைகளிலும் 3000 மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் சவுதி அரேபியாவில் செயல்பட்டு வருகின்றன என கூறியுள்ள அவர் திரியா நகரத்தில் இந்திய நிறுவனங்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் மிகவும் ஆர்வமாக இருக்கிறோம் என தெரிவித்தார். 2022 - 2023 ஆம் ஆண்டில் இந்தியா சவுதி இடையிலான வர்த்தக மதிப்பு 4.5 லட்சம் கோடி ரூபாய் என பெருமிதம் தெரிவித்த அவர் இது தொடர்ந்து வளர்ச்சி அடையும் என கூறினார்.
பொது முதலீட்டு திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு வரக்கூடிய நகரில் முதலீடு செய்வதற்கு இந்தியாவை சேர்ந்த நிறுவனங்கள் பெருமளவில் ஆர்வம் காட்டுகின்றன என குறிப்பிட்ட அவர் இந்தியாவின் பிரபலமான தாஜ் ஹோட்டல் அதன் 250 ஆவது கிளையை திரியா நகரில் தான் நிறுவுகிறது என கூறினார். 2030 ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டு தோறும் 5 கோடி சுற்றுலாப் பயணிகள் இந்த நகருக்கு சுற்றுலா வருவார்கள் என கணித்துள்ள அவர் அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்களாக இருப்பார்கள் என தெரிவித்துள்ளார்.
ஓபராய் ஹோட்டல் நிறுவனம் இரண்டு இடங்களில் ஆடம்பர தங்கும் விடுதிகளை கட்டி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். சவுதி அரேபியாவின் ஜிடிபி யில் 18.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பங்களிப்பை திரியா நகரம் தரும் என்றும், 1.78 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Story written by: Devika
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications