இந்திய ஐடி சேவை துறையில் கடந்த 10-15 வருடத்தில் இல்லாத ஒரு மாற்றம் தற்போது நடந்து வருகிறது. ஒருபக்கம் ஐடி ஊழியர்களுக்கான சம்பள உயர்வு, பதவி உயர்வு, வேரியபிள் பே தொகையை பெறுவதில் பெரும் போராட்டமாக இருக்கும் வேளையில், மறுபக்கம் பிரஷ்ஷர்களுக்கு சம்பளத்தை அள்ளி அள்ளி கொடுக்க தயாராகி வருகிறது நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்கள்.
இந்தியாவில் இயங்கும் பெரும்பாலான ஐடி நிறுனங்கள் பல வருடங்களாக பிரஷ்ஷர்களுக்கு 2.8-3.5 லட்சம் வரையிலான சம்பளத்தை மட்டுமே அளித்து வருவது பெரும் விமர்சனமாகவே பார்க்கப்படும் வேளையில், தற்போது பிரஷ்ஷர்களுக்கு 20 லட்சத்திற்கும் மேல் அதாவது 10-15 வருட அனுபவமுள்ள ஐடி ஊழியர்களுக்கான சம்பளத்தை பிரஷ்ஷர்களுக்கு அளிக்க தயாராகியுள்ளது பெரும் மாற்றமாக பார்க்கப்படுகிறது.

பொதுவாக ஐஐடி, என்ஐடி, உயர் திறன் கொண்ட பிரஷ்ஷர்களுக்கு மற்ற பிரஷ்ஷர்களை காட்டிலும் கூடுதல் சம்பளம் வழங்கப்பட்டது. ஆனால் அவை 7-12 லட்சம் வரையில் மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது 20 லட்சத்திற்கு மேல் தாராளமாக அளிக்க இந்திய ஐடி நிறுவனங்கள் முனைப்பு காட்டுகிறது. இந்த திடீர் மாற்றத்திற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன..?
ஹெச்சிஎல் டெக்
இந்தியாவின் மூன்றாவது பெரிய ஐடி சேவை நிறுவனமான HCL டெக்னாலஜிஸ் நிறுவனம் நேற்று தனது டிசம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. இக்காலாண்டு முடிவுகளில் பிரஷ்ஷர்களுக்கான சம்பளத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் அதன் தொடர்புடைய தொழில்நுட்பங்களில் சிறப்பு திறன் கொண்ட பிரஷ்ஷர்களுக்கு வருடாந்திர சம்பளத்தை ரூ.18 லட்சம் முதல் ரூ.22 லட்சம் வரை அளிக்க தயார் என்ற அறிவிப்பை வெளியிட்டு, டெக் துறையில் சேர இருக்கும் பட்டதாரிகளுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஹெச்சிஎல் நிறுவனம் எலைட் கேடர் (elite cadre) எனப்படும் சிறப்பு குழுவுக்கு இந்த பிரஷ்ஷர்களை பணியில் சேர்க்க உள்ளது.

எலைட் கேடர் என்றால் என்ன?
எலைட் கேடர் என்பது டேட்டா மற்றும் AI, டிஜிட்டல் இன்ஜினியரிங், சைபர் செக்யூரிட்டி, எண்டர்பிரைஸ் போன்ற துறைகளில் சிறப்பு திறன் கொண்ட இன்ஜினியர்களை இப்பிரிவின் கீழ் பணியில் அமர்த்தும்.
இதைவிட முக்கியமான விஷயம் என்னவென்றால் ஹெச்சிஎல் இந்த வரும் பணியில் அமர்த்தும் பிரஷ்ஷர்களின் மொத்த எண்ணிக்கையில் இப்பரிவில் மட்டும் 15-20 சதவீதம் பேரை பணியில் அமர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. அந்த அளவுக்கு புதிய தொழில்நுட்பத்தில் திறன்வாய்ந்த பிரஷ்ஷர்களின் தேவை உள்ளது.
HCL டெக் ஊழியர்கள் எண்ணிக்கை
டிசம்பர் காலாண்டு முடிவில் ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 261 குறைந்து 2,26,379-ஆக உள்ளது. ஆனால் இந்த காலாண்டில் 2,852 பிரஷ்ஷர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 2026ஆம் நிதியாண்டில் இதுவரையில் மொத்தம் 10,032 பிரஷ்ஷர்களை சேர்க்கப்பட்டு உள்ளனர். இது கடந்த ஆண்டை விட இரு மடங்கு அதிகமாகும்.
இன்போசிஸ் அறிவிப்பு
ஹெச்சிஎல் போல் சமீபத்தில் இன்போசிஸ் நிறுவனமும் முக்கியமான தொழில்நுட்பத்தில் திறன் கொண்ட பிரஷ்ஷர்களுக்கு ஆண்டுக்கு ரூ.21 லட்சம் வரை சம்பளம் வழங்க உள்ளதாக அறிவித்தது. இன்போசிஸ் கேம்பஸ் - ஆப் கேம்பஸ் இண்டர்வியூவ் மூலம் தேர்வு செய்யும் திறன் வாய்ந்த ஊழியர்களில் 3 பிரிவுகளாக பிரிக்கிறது.
ஸ்பெஷலிஸ்ட் புரோகிராமர் L3 (ட்ரைனி) பணிக்கு ரூ.21 லட்சம், L2க்கு ரூ.16 லட்சம், L1க்கு ரூ.11 லட்சம், டிஜிட்டல் ஸ்பெஷலிஸ்ட் இன்ஜினியர் (ட்ரைனி) பணிக்கு ரூ.7 லட்சம் சம்பளத்தை வழங்குகிறது. மற்ற பட்டதாரிகளுக்கு வழக்கம் போல் 2.8-3.5 லட்சம் வரையிலான சம்பளத்தை வழங்க உள்ளதாக தெரிவித்தது.
இந்த அதிகப்படியான சம்பளம் அனைத்தும் Data & AI, digital engineering practice, cybersecurity practice, enterprise skills கொண்ட பிரஷ்ஷர்களுக்கு மட்டுமே.

பிரஷ்ஷர்களின் சம்பளம் உயர்த்த என்ன காரணம்?
இன்றைய டெக் உலகில் புதிய தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில், அவற்றை ஏஐ மூலம் எளிதாக பயன்படுத்த முடியும் என்பதால் வாடிக்கையாளர்களுக்கு விரைவாகவும், மேம்பட்ட முறையில் சேவை அளிக்க முடியும்.
இத்தகைய திறன்களை அனுபவம் வாய்ந்த டெக் ஊழியர்களை காட்டிலும் பிரஷ்ஷர்கள் எளிதாகவும், வேகமாகவும் கையாளும் திறன் கொண்டவர்களாக உள்ளனர். இதனால் ஒரு குழுவில் 10-15 நடுத்தர அனுபவம் கொண்ட டெக் ஊழியர்களின் பணியை ஏஐ, ஆட்டோமேஷன் மூலம் 3-5 பிரஷ்ஷர்கள் மூலம் செய்ய முடியும். இதை 1-2 சீனியர் ஊழியர்கள் ஆய்வு செய்து டெப்லாய் செய்யக்கூடிய சிறு மற்றும் திறன்வாய்ந்த கட்டமைப்பை இந்திய ஐடி நிறுவனங்கள் உருவாக்க முயற்சி செய்கிறது.
ஏஐ தொழில்நுட்பம் தான் எதிர்காலம் என்பதால், இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எப்படியெல்லாம் வர்த்தகத்தையும், சர்வீஸ் டெலிவரியும் மேம்படுத்த முடியும் என்பதில் தற்போது இந்திய ஐடி நிறுவனங்கள் தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதற்காகவே எலைட் பிரிவில் திறன்வாய்ந்த பிரஷ்ஷர்களை அதிகம் சேர்க்கும் முயற்சியில் ஈடுப்பட்டு உள்ளனர்.
இதன் மூலம் மிட் லெவல் அல்லது சீனியர் லெவலில் பணிநீக்கம் வருமா என்றால் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது, இதேவேளையில் ஏஐ பிரிவில் அதிகப்படியான ப்ராஜெக்ட் கிடைக்கும் பட்சத்தில் சிறு சிறு அணிகளாக பிரிக்கப்பட்டு பெரிய வேலையை வேகமாகவும் முடிக்க முடியும் என்பதால் பணிநீக்கம் இல்லாமல் கூடுதல் ஊழியர்களையும் பணியில் சேர்க்கவும் வாய்ப்புள்ளது.
இதனால் ஏஐ திறன்களை வளர்த்துக்கொள்ளும் ஊழியர்கள் அனைவருக்கும் டெக் துறையில் பிரகாசமான எதிர்காலம் உள்ளது.
More From GoodReturns

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

CEOக்களுக்கு சம்பளத்தை அள்ளி கொடுத்து ஊழியர்களுக்கு கிள்ளி கொடுக்கும் நிறுவனங்கள்!! இதெல்லா நியாயமா?

8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு 5 முறை பதவி உயர்வு.. இதுக்கு மேல என்ன வேண்டும் சொல்லுங்க..!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications