உலகின் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க் என்றால் அது நமது இந்தியாவின் ரயில்வே நெட்வொர்க் தான் .லட்சக்கணக்கான மக்கள் நாள்தோறும் இந்திய ரயில்வேயில் பயணம் செய்கின்றனர். இவ்வளவு பெரிய நெட்வொர்க்கை நிர்வகிப்பது என்பது மிகச் சவாலான விஷயம். இருந்தாலும் நம்முடைய இந்திய ரயில்வே துறை அதனை மிகவும் சாதுரியமாக நடத்தி வருகிறது.
நாம் ரயிலில் பயணங்களுக்கான டிக்கெட்டுகளை முன் பதிவு செய்வது தற்போது ஆன்லைனில் மிகவும் எளிமையான ஒன்றாக மாற்றப்பட்டுவிட்டது. இருந்தாலும் இவ்வாறு நாம் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது நமக்கான இருக்கையை நாமே தேர்வு செய்வதற்கு ஏன் ரயில்வே நிர்வாகம் அனுமதிப்பதில்லை?

ஒரு சினிமாவுக்கு செல்ல வேண்டும் என நாம் டிக்கெட் புக் செய்தால் கூட அதில் எந்தெந்த இருக்கைகள் காலியாக இருக்கின்றன என்பது காட்டும். நாம் நமக்கு பிடித்த இருக்கைகளை அதில் தேர்வு செய்து கொள்ளலாம்.ஆனால் ரயில்வே டிக்கெட்டில் மட்டும் ஏன் நம்மால் நமக்குத் தேவையான இருக்கைகளை தேர்வு செய்ய முடியவில்லை ?
ரயில் என்பது ஒரு தியேட்டர் போல ஒரே இடத்தில் இருக்க கூடிய இடம் கிடையாது. ரயில் என்பது ஒரு நகரும் பொருள். எனவே இதில் பாதுகாப்புக்கு தான் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. நமது இந்திய ரயில்வே டிக்கெட் முன்பதிவு முறையானது ஒரு தனித்துவமான கொள்கையுடன் செயல்படுகிறது. பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை தான் இதன் அடிப்படை.
பயணிகளை அனைத்து பெட்டிகளிலும் சமமாக விநியோகம் செய்வது அதாவது அனைத்து பெட்டிகளிலும் பயணிகள் இருக்கக்கூடிய வகையில் சமமான வகையில் இருக்கைகளை பகிர்ந்து வழங்குவது தான் அந்த தனித்துவமான முறை. உதாரணத்திற்கு ஒரு ரயிலில் 10 பெட்டிகள் இருக்கின்றன. ஒவ்வொரு பெட்டியிலும் 72 சீட்டுகள் இருக்கின்றன.
நீங்கள் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது நமது டிக்கெட் முன்பதிவு முறையானது ஒவ்வொரு பெட்டிக்கும் பயணிகளை பிரித்து பிரித்து முன் பதிவு செய்து கொடுக்கும். முதலில் மத்தியிலுள்ள பெட்டிகளில் இருந்து ஒதுக்கீடு செய்ய ஆரம்பிக்கிறது அங்கிருந்து கடைசி பெட்டி வரையிலும் பின்னர் முன் பெட்டி வரையிலும் என்ற வகையில் இடம் பிரிக்கும்.
ரயில் பெட்டிகள் முழுவதிலும் எடை சமமாக இருக்க வேண்டும் என்பதுதான் காரணம். ஏன் இவ்வளவு துல்லியமான திட்டமிடல் தேவைப்படுகிறது என என்ற கேள்வி எழலாம் ? இதற்கு காரணம் மிகவும் எளிமையானது. சமமாக சுமை விநியோகிக்கப்பட்டால் ரயில் தடம் புரளும் அபாயம் குறையும். குறிப்பாக ரயில் வளைவுகளை கடக்கும் போது அல்லது பிரேக் போடும்போது ரயிலின் இயக்கம் சீராக இருப்பதை இது உறுதி செய்கிறது.
இதற்கு இந்த இதற்காகவே தான் இந்த அணுகுமுறை பின்பற்றப்படுகிறது. சமமற்ற முறையில் உதாரணமாக அனைவரும் மத்தியில் உள்ள பெட்டிகளிலேயே இருந்தால் ரயில் பின்பக்கப் பெட்டிகள் காலியாக இருக்கும் இப்படி ஓரிடத்திலேயே எடை குவிந்திருந்தால் ரயிலின் இயக்கம் சீராக இருக்காது மேலும் ரயில் எளிதாக தடம் புரண்டு விடும்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications