அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பானது 9 மாதங்களில் இல்லாத அளவு 75.4 ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது.
இது வளர்ந்து வரும் சந்தைகளில் மிகப்பெரிய மிகப் பெரிய வீழ்ச்சி. இது கடந்த மூன்று வாரங்களில் மட்டும் 4.2 சதவீதமாகும்.
இது கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கடந்த மூன்று வாரங்களில் மோசமான சரிவினைக் கண்டுள்ளது.
ரிசர்வ் வங்கி கவலை
மேலும் கடந்த வாரத்தில் ரிசர்வ் வங்கி நாட்டின் பொருளாதார வளர்ச்சியினை ஊக்குவிக்கும் நோக்கில், அரசு வெளியிடும் 1 லட்சம் கோடி மதிப்பிலான நிதி பத்திரங்களை வாங்கவுள்ளதாக கூறியது. மேலும் நாட்டின் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு சில பகுதிகளில் மட்டும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது அண்மையில் அதிகரித்த மக்களின் தேவையை பாதிக்கும். அதோடு இயல்பு நிலைக்கு திரும்பி வரும் பொருளாதார வளர்ச்சியினையும் பாதிக்கும் என கவலை தெரிவித்திருந்தது.
ரூபாய் மதிப்பு சரிவு
கடந்த மார்ச் 22ன் படி ரூபாயின் மதிப்பானது 72.38 ரூபாயாக இருந்தது. அதன் பிறகு தற்போது 75.42 ரூபாய் என்ற நிலையில் உள்ளது. ஆக மூன்று வாரத்தில் 4 சதவீதத்திற்கும் மேலாக வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்த செவ்வாய்கிழமையன்று மட்டும் 43 பைசா சரிந்து, 9 மாத சரிவினை தொட்டது.
பொருளாதாரம் என்னவாகுமோ?
இது அதிகரித்து வரும் கொரோனாவுக்கு மத்தியில், பொருளாதாரம் என்னவாகுமோ என்ற கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. ஆக இந்த மூன்று வார காலத்தில் ரூபாயின் மதிப்பு 4.2 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. இதே காலகட்டத்தில் துருக்கியில் லிரா டாலருக்கு எதிராக 4.36 சதவீதம் சரிவினைக் கண்டுள்ளது. இதே காலகட்டத்தில் பிரேசிலின் ரியல் 3.99 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.
மற்ற நாணயங்கள்
இதே காலகட்டத்தில் தாய் பட் மற்றும் இந்தோனேசியா ரூபியா முறையே 2.33 சதவீதம் மற்றும் 1.5 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. பாகிஸ்தான் ரூபாய் கூட இந்த காலகட்டத்தில் 2.51 சதவீதம் தான் வீழ்ச்சி கண்டுள்ளது. இன்னும் அடுத்த சில மாதங்களில் இந்திய ரூபாயின் மதிப்பானது 77 - 78 ரூபாயினை தொடலாம். இது இறக்குமதியாலர்கள் மற்றும் வெளி நாட்டு நாணயத்தில் செலவினங்களைத் திட்டமிட்டுள்ள பிற நபர்களுக்கு கவலையளிக்கும் விதமாக இருக்கும் என்று சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications